தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & கௌரி இணைந்து நடித்துள்ள படம் ‘அடியே’.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது இயக்குநர் சிம்பு தேவன் பேசுகையில்….
”அடியே படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் மிக சிறப்பாக இருக்கிறது. மல்டிவெர்ஸ் என்பதனை நாம் அவெஞ்சர்ஸ் போன்ற ஹாலிவுட் படத்தில் தான் பார்த்திருக்கிறோம். அதனை தமிழில் வேறு ஒரு வடிவத்தில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதற்காக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் என்னுடைய அடுத்த படமான ‘போட்’ எனும் திரைப்படத்தினை அவர்கள் தான் தயாரிக்கிறார்கள்.
தயாரிப்பாளர் பிரேம்குமார் எதையும் நேர்த்தியாக நேசித்து அழகாக உருவாக்குபவர். எந்த தருணத்திலும் சிறிதும் பதட்டப்படாமல் சிரித்த முகமாக இயல்பாக இருப்பவர்.
இந்த நிறுவனம் தமிழ் திரையுலகில் சிறந்த படைப்புகளை வழங்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக ஏற்றம் பெறும். இதற்காக என்னுடைய வாழ்த்துக்கள். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசை, நடிப்பு எனும் இரட்டை குதிரையில் அற்புதமாக சவாரி செய்கிறார். சவாலான இந்த இரண்டையும் உணர்வுபூர்வமாக நேசித்து பணியாற்றுகிறார்.
இந்த திரைப்படத்திலும் பின்னணி இசையில் தன்னுடைய முழுமையான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் நாளாக நாளாக இளமையாகத் தெரிகிறார். அவரை ஸ்கூல் ஸ்டுடன்ட்டாகப் பார்க்கும் போது எந்த வித்தியாசமும் தோணவில்லை. ரசிக்க தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசுகையில்…
”ஜீ. வி. பிரகாஷ் குமாரின் இசையமைப்பில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அது நடைபெறவில்லை. பிறகு அவரை இயக்குவதற்காக வாய்ப்பு கிடைத்தது. பிறகு அதுவும் நடைபெறவில்லை. அவருக்கும் எனக்கும் பத்தாண்டுகளாக நட்பு தொடர்கிறது.
அவருடைய வளர்ச்சியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் இசையை போலவே நடிப்பிலும் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வெற்றி பெறவும், இதற்காக உழைத்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் உள்ளிட்ட பட குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் ஏ எல் விஜய் பேசுகையில்…
‘ இந்த படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அடியே படத்தில் கன்டென்ட் ஃபிரஷ்ஷாக இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறை ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வரவழைப்பதற்கான விசயங்கள் இப்படத்தில் இருக்கிறது.
லவ் டுடே பெற்ற வெற்றியை போல் இந்த திரைப்படமும் வெற்றியைப் பெறும். ஜீ. வி. பிரகாஷ் குமாரை பொருத்தவரை நடிப்பிலும், இசையிலும் எளிதாக பயணிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர்கள் சினிமா மீது பற்று கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனம் ஏஜிஎஸ்.. வேல்ஸ்.. போன்ற முக்கியமான திரைப்பட நிறுவனமாக தமிழில் வளர்ச்சி பெறும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
Double horse ride by Gv Prakash is awesome says Chimbudevan