தினம் தினம் கூடும் வசூல்.; பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் ‘அடியே’ படம்

தினம் தினம் கூடும் வசூல்.; பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் ‘அடியே’ படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜீ.வி. பிரகாஷ் – கௌரி கிஷன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்த ‘அடியே’ படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று வெளியானது. வெளியான முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வசூல் செய்த இந்த திரைப்படம், இரண்டாவது நாள் அதைவிட கூடுதலாகவும், மூன்றாவது நாள் அதைவிட கூடுதலாகவும் வசூலித்து இந்த வாரம் வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக ‘அடியே’ வெற்றி பெற்றிருக்கிறது.

அடியே

மேலும் இந்த திரைப்படம் செப்டம்பர் 1 தேதி முதல் உலக நாடுகளிலும் வெளியாகவிருக்கிறது.

அதன் பிறகு இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆல்டர்நேட்டிவ் ரியாலிட்டி.. மல்டிவெர்ஸ்.. பேரலல் யுனிவெர்ஸ்… எனும் சயின்ஸ் பிக்சனுடனும், டைம் டிராவல்.. டைம் லூப்.. எனும் இளைய தலைமுறையை கவரும் உத்திகளால் சுவாரசியமான காதல்… திரைக்கதையாக இப்படத்தில் இடம்பெற்றதால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பேராதரவினை பெற்று, பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்து வருகிறது.

அடியே

‘அடியே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை தயாரித்த மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தொடர்ந்து தமிழ் திரையுலகில் தரமான படைப்புகளை வழங்கி முன்னணி பட தயாரிப்பு நிறுவனமாக உயரும் என்பது உறுதியாகி இருக்கிறது.

அடியே

Gv Prakash and Gowri starrer Adiyae got good response

பிரசாந்த் படத்தலைப்பை கவின் படத்துக்கு வைத்த இளன்.; யுவன் பிறந்தநாளில் விருந்து

பிரசாந்த் படத்தலைப்பை கவின் படத்துக்கு வைத்த இளன்.; யுவன் பிறந்தநாளில் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நித்தம் ஒரு வானம்’ எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் மற்றும் ‘விருபாக்ஷா’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் ‘ஸ்டார்’.

பி. ரூபக் பிரணவ் தேஜ் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வரும் இந்தத் திரைப்படத்தை ‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஒருவரும், கோலிவுட் நடிகை ஒருவரும் ஜோடியாக இணைகிறார்கள்.

ஸ்டார்

மேலும் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். பன்மொழி ரசிகர்களை கவரும் வண்ணம் இத்திரைப்படத்தின் கதையும், கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

எழில் அரசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘இளைய இசைஞானி’ யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். தேசிய விருது வென்ற ஆடை வடிவமைப்பாளரான சுஜித் சுதாகரன் ஆடை வடிவமைப்பாளராகவும், எஸ். வினோத்குமார் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது. தற்போது 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகவும், விரைவில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஸ்டார்

இந்தப் படத்தில் இடம் பெறும் அறிமுக பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காகவென யுவன் சங்கர் ராஜா இளைய தலைமுறையினரை கவரும் வகையில் வித்தியாசமாக இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் வெவ்வேறு விதமான பாடல்களும் இடம் பெற்றிருக்கிறது. இவை அனைத்தும் ரசிகர்களை பரவசப்படுத்தும் என படக் குழுவினர் உத்வேகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று ‘ஸ்டார்’ படத்திலிருந்து பிரத்யேக காணொளி ஒன்று வெளியிடப்படவிருக்கிறது.

இதனை முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவர் இணையத்தில் வெளியிடவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஸ்டார்

இளம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்ற படைப்பை இன்னிசையுடன் வழங்கிய இயக்குநர் இளன் – யுவன் ஆகியோருடன் முதன்முறையாக நடிகர் கவினும் இணைந்து கூட்டணி அமைத்திருப்பதால், இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே மட்டுமல்லாமல் இசை ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

கூடுதல் தகவல்…

2001 ஆம் ஆண்டு பிரவீன் காந்தி இயக்கத்தில் பிரசாந்த், ஜோதிகா நடித்த ‘ஸ்டார்’ என்ற படம் வெளியானது. தற்போது இதே பட பெயரில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்

Kavin Elan Yuvan movie titled STAR

OFFICIAL ‘தனி ஒருவன் 2’.; மீண்டும் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி & நயன்

OFFICIAL ‘தனி ஒருவன் 2’.; மீண்டும் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி & நயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிப் படங்களை தொடர்ந்து படைத்து வரும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 26-வது திரைப்படமாக ‘தனி ஒருவன் 2’-வை அறிவித்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘தனி ஒருவன்’ படத்தின் 8வது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

‘ஜெயம்’, ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தில்லாலங்கடி’, ‘தனி ஒருவன்’, என ஆறு வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கி இந்திய அளவில் சாதனை படைத்துள்ள சகோதரர்களான இயக்குநர் மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் ஏழாவது முறையாக ‘தனி ஒருவன் 2’ திரைப்படத்திற்காக இணைகின்றனர்.

தனி ஒருவன் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவியும், நயன்தாராவும் ‘தனி ஒருவன் 2’-க்காக மோகன் ராஜா இயக்கத்தில் மீண்டும் இணைகின்றனர்.

சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், ‘தனி ஒருவன் 2’ அதன் மற்றுமொரு மைல்கல்லாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும் நிர்வாக தயாரிப்பாளராக எஸ் எம் வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகின்றனர்.

சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் 26-வது திரைப்படமாக அமையவுள்ள ‘தனி ஒருவன் 2’-வை மோகன் ராஜா இயக்க ஜெயம் ரவி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Thani Oruvan 2 Mohanraja to direct Jayam Ravi Nayanthara once again

கமல் அறிமுகமான முதல் பட தயாரிப்பு நிர்வாகி மரணம்.; உலகநாயகன் உருக்கம்

கமல் அறிமுகமான முதல் பட தயாரிப்பு நிர்வாகி மரணம்.; உலகநாயகன் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.வி.எம். தயாரித்த படங்களின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய அருண் வீரப்பன்.

இவர் 100-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியுள்ளார்.

இவர் கமல்ஹாசனின் ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அப்படத்தில் நடிகர் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார்.

90 வயதான அருண் வீரப்பன் நேற்று வயது மூப்பு காரணமாக காலமானார்.

இவருக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் அருண் வீரப்பன் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன். நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்குத் தன் பங்களிப்பினை அளித்தவர். அவருக்கு என் அஞ்சலி” என்று பதிவிட்டுள்ளார்.

producer arun veerappan passes away

JUST IN லைக்கா மூலம் சினிமாவில் நுழையும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

JUST IN லைக்கா மூலம் சினிமாவில் நுழையும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்.

இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான லைக்கா தற்போது அறிவித்துள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கூறும் போது…

ஜேசன் லண்டனில் திரைக்கதை எழுதுவதில் பிஏ (ஹானர்ஸ்) முடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பில் டிப்ளோமா பெற்றார்.

ஜேசன் சஞ்சய்

அவர் ஸ்கிரிப்டை சொன்ன போது பார்வையாளர்களாக எங்களுக்கு திருப்தி.

ஜேசன் சஞ்சய் விஜய்யுடன் இணைந்து பணியாற்றும் அற்புதமான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த படத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் இருப்பார்கள். மேலும், சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இந்தப் படத்தில் பணிபுரிய நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்றார்.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் விஜய் கூறுகையில்…

“லைக்கா போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது.

என்னைப் போன்ற இளம் திறமையாளர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு.

எனது ஸ்கிரிப்டை விரும்பி, அதை உருவாக்க எனக்கு முழு ஆக்கப்பூர்வமான சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். இந்த வாய்ப்புக்காக சுபாஸ்கரன் சாருக்கு நன்றி கூறுகிறேன். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் மிகப்பெரிய பொறுப்பையும் தருகிறது. உறுதுணையாக இருந்த தமிழ் குமரனுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி” என்றார்.

ஜேசன் சஞ்சய்

Vijay son Jason Sanjay entry in Cinema in Lyca Production

‘தளபதி 68’ படத்தில் டபுள் விஜய்.; 3 நாயகிகள் ஒப்பந்தம்; யாருக்கு யார் ஜோடி?

‘தளபதி 68’ படத்தில் டபுள் விஜய்.; 3 நாயகிகள் ஒப்பந்தம்; யாருக்கு யார் ஜோடி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கிறார் விஜய்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளராக சித்தார்த் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் ஜோதிகா & பிரியங்கா மோகனும் இருவரும் நாயகியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

இதில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ‘டாடா’ பட நாயகி அபர்ணா தாஸ் இணைவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

நவம்பர் மாதம் தளபதி 68 படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் போட்டோஷூட்’ விரைவில் லண்டனில் நடைபெறும் என தெரிகிறது.

Vijay in dual role Thalapathy 68 movie updates

More Articles
Follows