தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & கௌரி இணைந்து நடித்துள்ள படம் ‘அடியே’.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில்….
‘படத்தின் முன்னோட்டத்தை பார்த்தேன் நம்பிக்கை அளிக்கிறது. இந்தப் படத்தில் கன்டென்ட் தான் முக்கிய விசயமாக இருக்கிறது.
ஜீ.வி. பிரகாஷ் குமார்- கௌரி- ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோரின் கூட்டணியில் உருவான இரண்டு பாடல்களைப் பார்த்தோம். ரசிக்கும்படி இருந்தது. அதிலும் குறிப்பாக நாயகியாக நடித்திருக்கும் கௌரி- ஐஸ் சாப்பிடும் காட்சி நம்மையும் உருக வைக்கிறது.
ஜீ. வி. பிரகாஷ் குமார் ஸ்கூல் படிக்கும் பையனாகவும், வேறு சில கெட்டப்புகளிலும் அருமையாக நடித்திருக்கிறார். இந்த முன்னோட்டமே படத்தின் வெற்றிக்கு முதல் அச்சாரம். நான் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் ரசிகன். பாடல் வரிகளும், மெட்டும் சேர்ந்து மாயாஜாலம் செய்திருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.
Vasantha Balan appreciated Gowri ice cream eating scene