தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கிரிசாயா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘ஆதித்ய வர்மா’.
பாலிவுட் நடிகை பனிடா சந்து, ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் நாளை மறுநாள் நவம்பர் 8ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.
எனவே ப்ரொமோஷன் பணியில் விக்ரம் மகன் துருவ் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
இப்படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் கிடைத்தது. அதை எப்படியாவது ‘யுஏ’ சான்றாக மாற்ற படக்குழு முயற்சித்தனர்.
தற்போது சென்சாரில் ஏ சான்றிதழ் தான் கிடைத்துள்ளது.
இந்த படத்தில் சரக்கு அடித்தல், புகை பிடித்தல், போதைப் பொருள் உட்கொள்ளுதல், முத்தக் காட்சி, வன்முறைக் காட்சி என அனைத்தும் கலந்து இருப்பதால் இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நவம்பர் 21ம் தேதி ஆதித்ய வர்மா வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Aditya Varma censored A and movie release postponed