தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி பட ரீமேக் (ஆதித்ய வர்மா) மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகர் துருவ். இவர் பிரபல நடிகர் விக்ரமின் மகன் ஆவார்.
தற்போது தன் தந்தை விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ படத்தில் நடித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாலிவுட் நடிகை பனிதா சந்துடன் துருவ் எடுத்துள்ள போட்டோவை தன் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துபாய் நாட்டில் புர்ஜ் காலிபா அருகில் இவர்கள் ஓட்டல் அறையில் தங்கியுள்ளதாக தெரிகிறது.
மேலும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் லவ்வர்ஸ்..? அல்லது டேட்டிங் செய்கிறீர்களா? என கமெண்டில் கேட்டு வருகின்றனர்.
ஆனால் துருவ் பனிதா தரப்பில் எந்த பதிலும் இல்லை.
2021ல் ‘சர்தார் உத்தம்’ என்ற படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் உடன் பனிதா சந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Is Dhruv dating Banita – his female lead in real life?