சிவகார்த்திகேயனை தொடர்ந்து விக்ரமுடன் இணைந்த சிம்ரன்

சிவகார்த்திகேயனை தொடர்ந்து விக்ரமுடன் இணைந்த சிம்ரன்

actress simranகௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.

இதில் விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, பார்த்திபன், பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இரண்டு முக்கிய கேரக்டர்களில் ராதிகா மற்றும் சிம்ரன் இணைந்திருக்கிறார்களாம்.

பொன்ராம் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்திலும் சிம்ரன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் புதிய கெட்டப்பால் வடசென்னை தாமதம்..?

தனுஷின் புதிய கெட்டப்பால் வடசென்னை தாமதம்..?

Actor Dhanushவடசென்னை ஆரம்பித்த சில நாட்கள் அப்படத்தில் நடித்துவிட்டு பின்னர் மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் தனுஷ்.

இதனிடையில் மற்ற பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் இயக்குனர் வெற்றிமாறன்.

பவர் பாண்டி, விஐபி2 படங்களை முடித்துவிட்டு வட சென்னையில் கலந்துக் கொண்ட தனுஷ், திடீரென ஹாலிவுட் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

இதனால் வடசென்னை தாமதவதால், ரசிகர்கள் கவலையடைந்தனர்.

ஆனால் இப்படத்திற்காக தனுஷ் தன் கெட்டப்பை மாற்றவிருப்பதால்தான் மற்ற படங்களை முடிக்க சென்றுவிட்டாராம்.

எனவே விரைவில் வடசென்னை படத்தில் நடிக்க ஆரம்பித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த ஸ்டில்ஸ் வெளியானது

அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த ஸ்டில்ஸ் வெளியானது

ajith kajal in vivegam movieசிவா-அஜித்-அனிருத் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகும் முன்னரே சில ஸ்டில்கள் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது.

இவை அனைத்திலும் அஜித் மட்டுமே இருந்தார்.

எனவே அஜித்துடன் முதன்முறையாக இணைந்துள்ள காஜல் அகர்வால் படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் இவர்கள் இணைந்த போட்டோக்கள் மற்றும் அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் ஆகியோரின் போட்டோக்களும் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Vivegam movie new stills released along with Heroines

 

vivegam ajith vivek oberoi aksharahassan

தல-தளபதியின் ஒற்றுமையை சொன்ன அஜித் பட இயக்குனர்

தல-தளபதியின் ஒற்றுமையை சொன்ன அஜித் பட இயக்குனர்

ajith siva spotஅஜித்தின் நடித்த வீரம், வேதாளம் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது விவேகம் படத்தை இயக்கி வருகிறார் சிவா.

தொடர்ந்து தல படங்களையே இயக்கி வருகிறீர்களே. தளபதி படத்தை எப்போது இயக்குவீர்கள்? என்று கேட்டதற்கு இவர் அண்மையில் பேட்டி அளித்துள்ளார்.

அதில் கூறியதாவது…

விஜய்யும் எனக்கு நண்பர்தான். அவரை பலமுறை சந்தித்துள்ளேன். நிச்சயம் படம் இயக்குவேன்.

அஜித், விஜய் இருவரும் கடுமையாக உழைப்பவர்கள். அவர்களின் பலத்தை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

இருவரும் அதிகம் பேச மாட்டார்கள். அவர்களின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என கருதுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Director siva open talks about Ajith and Vijay

‘நான் நினைச்சப்படி படம் எடுக்க முடியல…’ AAA பற்றி ஆதிக் ரவிச்சந்திரன்

‘நான் நினைச்சப்படி படம் எடுக்க முடியல…’ AAA பற்றி ஆதிக் ரவிச்சந்திரன்

simbu adhik ravichandran3 வேடங்களில் சிம்பு நடித்த AAA படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

இப்படம் கடந்த ஜீன் 23ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

இப்படத்திற்காக உடம்பை ஏற்றிய சிம்புவின் உழைப்பை இயக்குனர் வீணடித்துவிட்டார் எனவும் சிம்பு ரசிகர்களே சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

எனக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. நான் நினைத்தப்படி படத்தை இயக்க முடியவில்லை.

என் எண்ணம் படி படம் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்போது அதை பற்றி பேசி என்ன பயன். நானே பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்” என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

I couldnt direct AAA movie as per my wish says Adhik Ravichandran

விவேகம் எந்த மாதிரியான படம்; லேட்டஸ்ட் அப்டேட்ட்ஸ்

விவேகம் எந்த மாதிரியான படம்; லேட்டஸ்ட் அப்டேட்ட்ஸ்

ajith stillsவீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து அஜித், டைரக்டர் சிவா மீண்டும் விவேகம் படத்திற்காக இணைந்துள்ளதால், ஹாட்ரிக் வெற்றிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விவேகம் படம் குறித்த நிறைய தகவல்கள் சிவா தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில்…

இதன் திரைக்கதை டைம் ரன் ஸ்க்ரிப்ட். அதனால்தான் இப்பட தலைப்பையே டைம் ஃபார்மெட்டில் டிசைன் செய்துள்ளோம்.

அக்ஷராஹாசனுக்கு முக்கியமான கேரக்டர். அவருடைய கேரக்டரை சுற்றிதான் கதைக்களம் அமைத்துள்ளோம்.

இது ஒரு இண்டர்நேஷ்னல் கதையாகும். இதன் மூலம் அஜித்திற்கு ஒரு இண்டர்நேஷ்னல் லுக் கிடைக்கும்.

இண்டர்நேஷ்னல் படம் என்றாலும் அதில் இந்திய எமோஷ்னல் இருக்கும்.

வீரம் படத்தில் சகோதர பாசம், வேதாளம் படத்தில் தங்கச்சி பாசம் உள்ளதுபோல் இதிலும் ஒரு குடும்ப பாசம் உள்ளது.

95 படத்தின் காட்சிகள் செர்பியா, ஆஸ்ட்ரியா, பல்கேரியா, க்ரோஷியா நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

கடுங்குளிரிலும் 12 டிகிரியிலும் அஜித் நடித்துக் கொடுத்தார்.

தன் எண்ணம் போல்தான் வாழ்க்கை அமையும் என்பதை அஜித் அடிக்கடி கூறவார்” என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Ajith Siva combo Vivegam movie latest updates

More Articles
Follows