‘கட்டப்பா’வின் அடுத்த சஸ்பென்ஸை உடைத்தார் குஷ்பூ

‘கட்டப்பா’வின் அடுத்த சஸ்பென்ஸை உடைத்தார் குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kattappa sathyarajகடந்த ஒரு வருடமாக பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்..? என்ற கேள்விக்கு விடைத் தெரியாமல் ரசிகர்கள் காத்திருந்தனர்.

அதற்கான விடை கடந்த கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி கிடைத்தது.

இப்படத்தில் பாகுபலி கேரக்டருக்கு கிடைத்த அளவு வரவேற்பு கட்டப்பாவுக்கும் கிடைத்தது.

இந்நிலையில் கட்டப்பா குறித்து நடிகை குஷ்பூ கூறியதாவது…
“கட்டப்பா கேரக்டரில் சத்யராஜை தவிர மற்றொரு நடித்திருந்தால் இந்தளவு ஹிட் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை உள்வாங்கி கேரக்டராகவே மாறிவிடுவார் சத்யராஜ்.

‘பெரியார்’ படத்தில் நடித்தற்கு அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என நினைத்தேன்.

ஆனால் அப்போது கிடைக்காத விருது, இம்முறை கட்டப்பா கேரக்டருக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.

மேலும் அவரைப் பற்றி ஒரு ரகசியத்தை இப்போது சொல்கிறேன். சத்யராஜூக்கு ஜோடியாக அதிக படங்களில் நடித்த ஒரே நாயகி நான்தான்’ என்று தெரிவித்துள்ளார்.

ரிக்சா மாமா’, ‘பெரியார்’, ‘மலபார் போலீஸ்’, ‘நடிகன், ‘புரட்சிக்காரன்’, வீரநடை’, ‘உன்னை கண் தேடுதே’, ‘பிரம்மா’, ‘கல்யாண கலாட்டா’, ‘வெற்றிவேல் சக்திவேல்’, ‘சுயம்வரம் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அஜித்திடம் மீண்டும் கேட்க மாட்டேன். அவரே சொல்லட்டும்..’ உதயநிதி

‘அஜித்திடம் மீண்டும் கேட்க மாட்டேன். அவரே சொல்லட்டும்..’ உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith udhyanidhi stalinகமல் நடித்த மன்மதன் அம்பு, விஜய் நடித்த குருவி, சூர்யா நடித்த ஆதவன் மற்றும் ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களை தன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின்.

தமிழில் முன்னணி தயாரிப்பாளரான இவர் இதுவரை ரஜினி, அஜித், விக்ரம் படங்களை தயாரிக்கவில்லை.

அஜித் படத்தை தயாரிப்பது எப்போது? என்ற கேள்விக்கு இவர் சமீபத்திய பேட்டியில் பதில் அளித்துள்ளதாவது…

ஐந்து ஆண்டுகளுக்கு முன் அஜித்துடன் இதுபற்றி பேசியிருக்கிறேன். அவரும் பார்க்கலாம். என்றார். அதன்பின்னர் அது பற்றிய பேச்சு இல்லை.

ஒரு வருடத்திற்கு முன்பு கூட ஒரு புரொஜக்ட் வந்தது. அவருக்கு தெரியப்படுத்தினேன்.

அதற்காக அடிக்கடி போய் மீண்டும் மீண்டும் கேட்கமாட்டேன். படம் செய்யலாம் என்று அவர் அழைத்தால் நான் தயார்.” என்று தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் அஜித்-ஏஆர் முருகதாஸ்-உதயநிதி ஆகியோர் இணைய வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

I Wont ask Ajiths Call Sheet again and again says Udhayanidhi Stalin

‘என் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் பயப்படலாம்…’ உதயநிதி

‘என் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் பயப்படலாம்…’ உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Udhayanidhi stalinரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

தற்போது இவரே தான் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார்.

இவர் நடித்து தயாரித்து, எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள சரவணன் இருக்க பயமேன் படம் வருகிற மே12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

குருவி படம் மூலம் விஜய் அண்ணாவுடன் பணி புரிந்துவிட்டேன். இப்போ அவர் அதிக சம்பளம் கேட்பாரு. (ஹா..ஹா..)

ரஜினி, அஜித் படங்களை தயாரிக்க ஆசை.

தற்போது உள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில் நான் தயாரிக்கும் படத்தில் நடிக்க ரஜினி பயப்படலாம். அதனால் நானும் அவரிடம் கேட்கவில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.

Rajinikanth may have fear to act in my production says Udhayanidhi stalin

சிறுமியை பலாத்காரம் செய்தவனை அடித்து உதைத்த அரவிந்த்சாமி

சிறுமியை பலாத்காரம் செய்தவனை அடித்து உதைத்த அரவிந்த்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvind swamy‘தனி ­ஒ­ருவன்’ மற்றும் ‘போகன்’ படங்­களில் வில்­ல­னாக கலக்கிய அர­விந்த்சாமி மறு­ப­டியும் ஹீரோவாக பல படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இவரது நடிப்பில் ‘வணங்­கா­முடி’, ‘சது­ரங்­க­வேட்டை-2’, ‘நர­கா­சுரன்’ உள்ளிட்ட படங்கள் வளர்ந்து வருகின்றது.
இதில் வணங்­கா­மு­டி படத்தை புதையல் பட இயக்குநர் செல்வா இயக்க, நாயகிகளாக ரித்­திகா சிங் மற்றும் நந்திதா நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் போலீஸாக நடிக்கிறார் அரவிந்த்சாமி.

இதில் ஒரு காட்சியில் சிறுமியை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறார்.

அவனை அரெஸ்ட் செய்து அடித்து உதைக்கும் காட்சிகளை அண்மையில் படமாக்கியுள்ளனர்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

ஏஆர். ரஹ்மான் இயக்கப்போகும் 2வது படத்தின் கதை இதுதான்

ஏஆர். ரஹ்மான் இயக்கப்போகும் 2வது படத்தின் கதை இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahmanஇரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றும் புதிய கலைஞராக அதே எளிமையுடன் 25 ஆண்டுகளாக காணப்படுபவர் இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான்.
இந்நிலையில் இவர் தற்போது இயக்குனராக அவதாரமெடுத்து லே மஸ்க் என்ற படத்தை எடுத்துள்ளார்.
இப்படம் முடிவதற்குள் தன் அடுத்த படத்தின் கதையையும் எழுதிவிட்டாராம்.
இப்படம் இந்திய கலாச்சார பின்னணியில் உருவாகவிருக்கிறதாம்.
மேலும் இந்திய திருநாட்டில் உள்ள அனைத்து வகையாக பிரபல நடனங்கள் போற்றும் வகையில் இதன் கதை இருக்கும் என சொல்லப்படுகிறது.

பாகுபலி2-கபாலி-தெறி சாதனைகளை முறியடிக்க அஜித் ரசிகர்கள் ப்ளான்

பாகுபலி2-கபாலி-தெறி சாதனைகளை முறியடிக்க அஜித் ரசிகர்கள் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam teaserபாகுபலி2 படத்தின் டிரைலர், கபாலி டீசர், தெறி டீசர் ஆகியவை யூடிப்பில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை படைத்தது.
எனவே இதன் சாதனைகளை முறியடிக்க அஜித் ரசிகர்கள் திட்டம் தீட்டி வருகின்றனர்.
வருகிற மே 11ஆம் தேதி அஜித் நடித்த விவேகம் பட டீசர் வெளியாகவுள்ளது.
அதன்படி அஜித் ரசிகர்கள் சில ஐடியாக்களை இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் உள்ளவை…
விவேகம் டீசரை யூடிப்பில் மட்டுமே பாருங்கள்.
வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் பகிர்ந்தாலும் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்ய வேண்டாம்.
யூடியுப்பில் லைக் செய்யுங்கள். மேலும் பாகுபலி2, கபாலி, தெறி டீசரின் ரெக்கார்டுகளை முறியடிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

More Articles
Follows