தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தான் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு ஜிவி. பிரகாஷ் தான் பெரும்பாலும் இசையமைத்து வருகிறார்.
இவையில்லாமல் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் அசுரன் ஆகிய படங்களுக்கும் இவர் தான் இசையமைத்துள்ளார்.
இதில் ‘அசுரன்’ படம் நேற்று முன்தினம் (அக். 4) வெளியானது. இதில் ஜிவி பிரகாஷின் இசைக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.
அதே சமயம் ஜிவி. நாயகனாக நடித்து இசையமைத்த ‘100 % காதல்’ படமும் நேற்றுதான் வெளியானது.
இதில் ஜிவி பிரகாஷின் நடிப்புக்கும் படத்துக்கும் நெகட்டிவ் கமெண்டுக்களே வருகின்றன.
ஒரு இசையமைப்பாளராக ஜெயிக்கும் ஒரு நடிகராக ஜெயிக்கவில்லையே என்ற கருத்துக்கள் பரவலாக பேசப்படுகிறது.
Actors Dhanush and GV Prakash movies clash and Who won