விக்ராந்தின் சுட்டு பிடிக்க உத்தரவு ஜூன் 14 இல் வெளியாகிறது

விக்ராந்தின் சுட்டு பிடிக்க உத்தரவு ஜூன் 14 இல் வெளியாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)‘பாண்டிய நாடு’ படத்தில் தன்னுடைய மிகச்சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரத்தை பெற்ற நடிகர் விக்ராந்த் ஒவ்வொரு படத்திலும் அவரின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் அழுத்தமான கதாபாத்திரங்களும், கதைகளும் சினிமாவில் அவரது இடத்தை உயர்த்தி வருகின்றன. ‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படமும் இதற்கு விதிவிலக்கல்ல. படத்தின் காட்சி விளம்பரங்களில் அவரது பகுதிகள் பார்வையாளர்களிடையே, இதில் அவருக்கு தனித்துவமான மற்றும் வித்தியாசமான பங்களிப்பை கொடுக்கும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் நடிக்க எது தூண்டுதலாக இருந்தது என கேட்டபோது அவர் கூறியதாவது, “வெளிப்படையாக சொல்வதென்றால், நான் முதலில் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா என்னிடம் இது ஒரு மல்ட்டி ஸ்டாரர் படம் என தெரிவித்த போது, என் முந்தைய படங்களும் அதே வகையில் இருந்ததால் இதை தவிர்க்க விரும்பினேன். மேலும், ‘பக்ரீத்’ போன்ற திரைப்படங்கள் என்னை ஒரு சோலோ ஹீரோவாக நிறுவும் நேரத்தில், இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள நான் தயங்கினேன். எனினும், ராம்பிரகாஷ் ராயப்பா குறைந்தது படத்தின் ஸ்கிரிப்ட்டையாவது கேளுங்கள் என கோரிக்கை வைத்தபோது, கதையை கேட்க முடிவு செய்தேன். கதை சொல்ல ஆரம்பித்த 10 நிமிடங்களில் கதை சொன்ன விதம் மற்றும் என் கதாபாத்திரத்தை அவர் வடிவமைத்திருந்த விதத்தை பார்த்து நான் வியப்படைந்தேன். கதையை கேட்ட பிறகு தவிர்க்கவே முடியாமல் ஒப்புக் கொண்டேன்” என்றார்.

டிரெய்லரை பார்த்தவுடன், விக்ராந்தின் கதாபாத்திரத்தில் உள்ள ஒரு மறைமுக தன்மை நம்முள் ஒரு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. அவர் மேலும் கூறும்போது, “என் கதாபாத்திரம் எமோஷன், சஸ்பென்ஸ் மற்றும் ஆக்‌ஷன் என அனைத்தையும் கொண்டிருக்கும். வழக்கமாக, திரில்லர் திரைப்படங்கள் என்பது அனைவரையும் அடுத்து என்ன என யூகிக்க வைக்கும் ஒரு சூத்திரத்தையே கொண்டிருக்கும். அதற்கு மாறாக, சுட்டு பிடிக்க உத்தரவு நேரடியான கதை சொல்லலை கொண்டிருக்கும், ஆனாலும் கதை முழுவதுமே த்ரில்லர் கூறுகள் தக்க வைக்கப்படும்.

இதையெல்லாம் வைத்து பார்த்தால், விக்ராந்த் பல ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதை பார்க்கும் உற்சாகம் தோன்றி இருக்கிறது. ஆனால் அவர் கூறும்போது, “உண்மையில் உயரத்தை பார்த்தால் மயக்கம் வரும் என்னை போன்ற ஒரு நடிகரை வைத்து இந்த காட்சிகளை படம் பிடித்தது சவாலான விஷயம். படத்தின் பெரும்பகுதி சண்டைக்காட்சிகள் மிக உயரமான கட்டிடங்களின் உச்சியில் படமாக்கப்பட்டவை, அதை செய்து முடிப்பது கடினமாக இருந்தது” என்றார்.

விக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள, இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது. கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரிக்க, ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கிறார்.

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)சுட்டெரிக்கும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் நம்மை குளிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது சில விஷயங்கள். இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட, சித்தார்த், கேதரின் தெரஸாவின் “அருவம்” படத்தின் டீசருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. திகில் மற்றும் பேய் படங்களின் சீசன் இது. ஆனால் இந்த படத்தின் குறுகிய மற்றும் சிறப்பான டீசர் அனைத்து அம்சங்களிலும் இது மிகவும் தனித்துவமான ஒரு படம் என்பதை உறுதிபடுத்துகிறது. உண்மையில், இந்த படம் எதை பற்றியது என்பதை அறிந்து கொள்ளும் ஒரு உடனடி உற்சாகத்தை உருவாக்கியிருக்கிறது.

இயக்குனர் சாய்சேகர் இது பற்றி கூறும்போது, “இப்போதைக்கு எதை பற்றியும் பேசாமல் இருப்பது தான் ஒரே ஒரு வாய்ப்பு. எதை பற்றி சொன்னாலும் அது ஸ்பாய்லராக மாறிவிடும். திகில் படங்கள் என்பவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன, ஆனால் ‘அருவம்’ இந்த வகை படங்களில் இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான களத்தில் அதன் முக்கியத்துவத்தை நிரூபிக்கும். இது ஆக்‌ஷன், காதல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒரு திகில் படம், கிராமம் மற்றும் நகரம் என அனைத்து தரப்பினரையும் கவரும் என்று நம்புகிறோம். இந்த படத்தின் பேசுபொருள் சமூகத்துடன் தொடர்புடையது. இது பார்வையாளர்களிடையே நல்ல சிந்தனையை உருவாக்கும். அருவம் என்பது ‘உடல்’ என்பதன் எதிர்ச்சொல். இந்த தலைப்பு படத்தின் மையக் கருத்து இயற்கைக்கு அப்பாற்பட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை கூறுகிறது” என்றார்.

நடிகர் மற்றும் தொழில்நுட்ப குழுவினரை பற்றி சாய் சேகர் கூறும்போது, “சித்தார்த் மிகச்சிறந்த ஒரு நடிகர். அவரின் நுணுக்கமான நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கேதரின் தெரஸா சில கடினமான காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது, ஆரம்பத்தில் நான் அவருக்கு கடினமாக இருக்கும் என நினைத்தேன், ஆனால் அவர் மிகச்சிறப்பாக நடித்து விட்டார். சதீஷ், கபீர் துஹான் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா, போஸ்டர் நந்தகுமார், சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல் மற்றும் மயில்சாமி ஆகியோர் இந்த படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளனர்” என்றார்.

எஸ்.எஸ். தமன் (இசை), என்.கே. எகாம்பரம் (ஒளிப்பதிவு), பிரவீன் கே.எல் (படத்தொகுப்பு), ஜி துரைராஜ் (கலை) மற்றும் ஸ்டண்ட் சில்வா (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப குழுவினராக பணிபுரிகிறார்கள். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார்.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா முழுக்க முழுக்க ஒரு ஜாலியான படம் – இசையமைப்பாளர் ஷபீர்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா முழுக்க முழுக்க ஒரு ஜாலியான படம் – இசையமைப்பாளர் ஷபீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)ஒரு பாடல் கேட்பவர்களின் உணர்வுகள் மற்றும் ரசனைகளை கொண்டிருந்தாலும், மெதுவாக மனதை ஆட்கொண்டு, கேட்க கேட்க அவர்களை அடிமையாக்கி, பல முறை கேட்டபிறகு அதன் பின்னால் இருக்கும் படைப்பாளரை பற்றிய யோசனையை தருவது அரிதான விஷயம். ஒரு படைப்பு என்பது மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் போது, அதை ரசிப்பவர்கள் அதன் சாராம்சத்தை கருத்தில் கொண்டு, ‘படைப்பாளி’ பற்றிய பகுத்தறிவு சிந்தனையை பெறுவார்கள். சகா படத்தின் ‘யாயும்’ என்ற மெலடி பாடல், அதன் இசையமைப்பாளர் ஷபீரை ஒரே இரவில் தமிழ் சினிமா முழுக்க அவர் புகழை பரப்பியது. அடுத்தடுத்து சிறந்த ஆல்பங்களை கொடுத்த ஷபீர், தற்போது ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல்வேறுபட்ட பாடல்களின் கலைவையை கொண்டிருப்பதால் இந்த ஆல்பம் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ஆரம்பம் முதல் தன் பாடல்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு வரை அனைத்தையும் பற்றி ஷபீர் கூறும்போது, “அனைத்து பாராட்டுக்களும் சிவகார்த்திகேயன் அவர்களை தான் சாரும். உண்மையில் என் ‘யாயும்’ பாடல் பெரிய வெற்றியை பெறுவதற்கு முன்பே என்னை முதல் ஆளாக பாராட்டியவர் சிவகார்த்திகேயன். இது வெறும் செயற்கையான பாராட்டு மட்டுமல்ல, அவர் இந்த ஆல்பத்திற்கு நான் இசையமைத்து வைத்திருந்த மற்ற பாடல்களையும் கேட்டார். நாம் நிச்சயம் ஒரு படத்தில் ஒன்றாக இணைந்து பணிபுரிவோம் என அவர் கூறியதை கேட்பதற்கு உற்சாகமாக இருந்தது. அப்படி தான் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ மூலம் எங்கள் பயணம் தொடங்கியது. இது எனக்கு முற்றிலும் ஒரு புதிய வகையான படம், என் முயற்சிகளை இந்த படத்துக்கு நான் கொடுத்துள்ளேன்” என்றார்.

ஒரு திரைப்படத்தை முதலில் பார்க்கும் வாய்ப்பை பெறும் வாய்ப்பு கிடைப்பதால், இசையமைப்பாளர்கள் மிகுந்த பாக்கியம் பெற்றவர்கள். இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது, “முழுக்க முழுக்க இது ஒரு ஜாலியான படம், சிரிக்க நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளன. அதே நேரம் திரும்ப எடுத்து செல்ல நல்ல செய்தியும் இருக்கிறது. இது எதையும் பிரச்சாரம் செய்யாது, நம்மை யோசிக்கவும், செயல்படவும் வைக்கும்” என்றார்.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, கலை அரசு இணை தயாரிப்பு செய்திருக்கிறார். கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் மற்றும் ராதாராவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

Breaking at 2PM : வசனகர்த்தா & நடிகர் கிரேஸி மோகன் மரணம்

Breaking at 2PM : வசனகர்த்தா & நடிகர் கிரேஸி மோகன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedy legend Crazy Mohan passes away due to cardiac arrestநகைக்சுவை நடிகர்களை பற்றி நாம் அறிவோம். ஆனால் அவர்களுக்கு பின்னால் இருக்கும் வசனகர்த்தாவை நாம் அறிவதில்லை.

இதில் மிகவும் முக்கியமானவர் கிரேஸி மோகன்.

இவர் ஏராளமான சினிமா படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

கே பாலச்சந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக சினிமாவில் அறிமுகம் ஆனார்.

கமல்ஹாசனின் நிறைய படங்களில் இவர் நடித்துள்ளார். முக்கியமாக வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தை யாராலும் மறக்க முடியாது.

ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் நடித்துள்ளார்.

அண்மையில் கூட சென்னையில் அவர் நாடகத்தை எழுதி இயக்கி மேடையில் அரங்கேற்றினார்.

இந்த நிலையில் ஹார்ட் அட்டாக் காரணமாக சிகிச்சை பலனின்றி தற்போது மதியம் 2 மணி அளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 66 ஆகும்.

Comedy legend Crazy Mohan passes away due to cardiac arrest

அட விஜய்யின் பெயர் மைக்கேல் இல்லையாமே… அப்போ இதுவா..?

அட விஜய்யின் பெயர் மைக்கேல் இல்லையாமே… அப்போ இதுவா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Character name in Thalapathy 63 movieவிஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

தற்போது 2 பாடல்களின் எடிட்டிங் பணிகள் முடிவடைந்துள்ளது.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பு இன்னும் 2 வாரங்களில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் விஜய்யின் கேரக்டர் பெயர் மைக்கேல் என கூறப்பட்டது. ஆனால் தற்போது விஜய்யின் பெயர் ‘பிகில்’ என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vijay Character name in Thalapathy 63 movie

நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்; மோடி-கமல் இரங்கல் செய்தி

நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்; மோடி-கமல் இரங்கல் செய்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Play wright Actor and Filmmaker Girish Karnad Passed Away

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). இவர்

கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட் ஆவார்.

சமீபத்தில் கன்னடத்திற்கான ஞானபீட விருதை இவர் பெற்றார்.
இந்த விருதானது இந்தியாவில் இலக்கியம் சார்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கெளரவமான விருதாகும்.

கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வந்துள்ளாராம்.
அவருக்கு இந்திய அரசாங்கத்தின் மூலமாக பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற கெளரவங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கிரிஷ் கர்னாட் காலமானார். அவருக்கு வயது 80.
அவரது மரணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் நடிகர் கமல் ஆகியோர் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Play wright Actor and Filmmaker Girish Karnad Passed Away

More Articles
Follows