தமிழ் புத்தாண்டிலிருந்து தள்ளிப் போன தமிழரசனின் புதிய ரிலீஸ் தேதி் இதோ

தமிழ் புத்தாண்டிலிருந்து தள்ளிப் போன தமிழரசனின் புதிய ரிலீஸ் தேதி் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘தமிழரசன்’.

இப்படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்க, யோகி பாபு, ராதாரவி, ரோபோ சங்கர், சுரேஷ் கோபி, சோனு சூட், முனிஷ்காந்த், கஸ்தூரி, சங்கீதா, மாஸ்டர் பிரணவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

‘தமிழரசன்’ படம் கடந்த 2020-ம் ஆண்டிலேயே இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது.

ஆனால், கொரோனா மற்றும் லாக் டவுன் காரணமாக தள்ளிப்போனது.

அதன்பின்னர் 2022 நவம்பர் 18-ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் டிசம்பர் 30 ரிலீஸ் என்றனர். அதன் பிறகு ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தது அதுவும் சில காரணமாக தள்ளிப்போனது.

இந்நிலையில், ‘தமிழரசன்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

மேலும், ‘பிச்சைக்காரன் 2’, ‘ரதம்’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘வள்ளி மயில்’ உள்ளிட்ட படங்கள் விஜய் ஆண்டனி கைவசம் உள்ளது.

தமிழரசன்

Vijay Antony’s ‘Tamilarasan’ gets a new release date

கண்ணாடி விரியன் பாம்பு தன்மையில் ‘வைப்பர்’.; விதார்த்துக்கு விஜய்சேதுபதி ஆதரவு

கண்ணாடி விரியன் பாம்பு தன்மையில் ‘வைப்பர்’.; விதார்த்துக்கு விஜய்சேதுபதி ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். எம். ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் ‘யதார்த்த நாயகன்’ நடிகர் விதார்த், சைக்கோ கிரைம் த்ரில்லர் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராசன் இயக்கி வருகிறார். ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட படபிடிப்புக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் நிலையில் படத்தின் டைட்டிலை விஜய் சேதுபதி தமிழ் புத்தாண்டு அன்று அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த படத்திற்கு ‘வைப்பர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

“கண்ணாடி விரியன் பாம்பின் தன்மையையும், பண்பையும் கொண்டவர் தான் கதையின் நாயகன் என்பதால் வைப்பர் என திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது” என இயக்குநர் மணிமாறன் நடராசன் கூறுகிறார்.

“இந்த திரைப்படத்தில் மிஸ் பெமினா பட்டம் வென்ற ரோஷினி பிரகாஷ் நாயகியாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் பாலாவின் படத்திலும் கதாநாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைக்கிறார்.

எஸ். ஆர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுதி இருக்கிறார். பிரமிப்பை உண்டாக்கும் சண்டை காட்சிகளை தினேஷ் சுப்ராயன் அமைத்துள்ளார். பாடல்கள் கார்த்திக் நேத்தா, படத்தொகுப்பு நாகூரான் ராமசந்திரன், கலை இயக்கம் பிஜுசந்திரன், ஒப்பனை தேசிய விருது பெற்ற பட்டணம் ரஷீத், Atmos mixing தேசிய விருது பெற்ற ராஜாகிருஷ்ணன் என பிரபல தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து அகில இந்திய (Pan india) அளவிலான கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை தயாரித்து கொண்டு இருக்கிறோம்” என கிரினேடிவ் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர். எம். ராகேஷ் பாபு கூறுகிறார்.

Vijay Sethupathi released Viper first look poster

சினிமாவிலும் இணையும் ‘பிக்பாஸ்’ பேவரைட் ஜோடி.; அமீர் இயக்கத்தில் பாவனி படம்

சினிமாவிலும் இணையும் ‘பிக்பாஸ்’ பேவரைட் ஜோடி.; அமீர் இயக்கத்தில் பாவனி படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sri Nalla Veerappasamy Production சார்பில், V. பாலகிருஷ்ணன் தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் அமீர், பாவனி ஜோடி, நாயகன் நாயகியாக நடிக்கும் ரொமான்ஸ் காமெடி திரைப்படம், திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. இப்படத்தை பிக்பாஸ் புகழ் அமீர் தானே எழுதி இயக்குகிறார்.

பிக்பாஸ் மூலம் தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்த அமீர், பாவனி ஜோடி இப்போது வெள்ளித்திரையில் ஒன்றாக இணையவுள்ளார்கள்.

பிக்பாஸில் இருவரது ஜோடிப் பொருத்தமும் எல்லோராலும் பாரட்டப்பட நிலையில், சமீபத்தில் இந்த ஜோடி அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள்.

நடன இயக்குநர் அமீரும், நடிகை பாவனியும் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக வலம் வந்த நிலையில், தற்போது நாயகன் நாயகியாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்கள்.

முழுக்க முழுக்க ரொமான்ஸ் காமெடியாக உருவாகும் இப்படத்தினை நடன இயக்குநர் அமீர் தானே எழுதி இயக்குகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இப்படம் தற்கால இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகவுள்ளது.

அமீர், பாவனி நாயகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் மன்சூர் அலிகான், காயத்திரி ஜெயராம், சுரேஷ் சக்ரவர்த்தி, சாதனா, VTV கணேஷ், அலீனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு அழகான புரமோ வீடியோவுடன் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Ameer – Pavni new film details here

தமிழ் – மலையாளத்தில் ரெடியாகும் BANK.; அலட்சிய அரசுகளை கேள்வி கேட்கும் விஜய் ஸ்ரீ

தமிழ் – மலையாளத்தில் ரெடியாகும் BANK.; அலட்சிய அரசுகளை கேள்வி கேட்கும் விஜய் ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பள்ளி மாணவர்களுக்கும் சட்டத்தை கற்பிக்க வேண்டும் என்ற கருத்தோடு வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில் உருவாகும் ‘ஹரா’ படத்தை இயக்கி வருகிறார் விஜய் ஸ்ரீஜி.

இமனையடுத்து தசை சிதைவு நோயின் மருந்துகளை இந்தியா தயாரிக்க வேண்டும் என்கிற கருத்தை முன்னிறுத்தி BANK என்ற படத்தை ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை வி ஆர் இன்டர்நேஷனல் மூவிஸ் ரவி ராயன் என்பவர் தயாரிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த குழந்தைக்கு தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மனிதர் ஒருவர் ரூ 11 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளார் என்பதை நாம் அனைவரும் செய்தியில் படித்திருப்போம், பார்த்திருப்போம்.

இந்த தசை சிதைவு நோயை குணப்படுத்தும் ஊசியின் விலை ரூ 17.5 கோடியாகும்.

தமிழகத்திலும் இதே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு சமீபத்தில் பலர் உதவி செய்தனர்.

இந்திய நாட்டில் இதற்கான ஊசி கிடைப்பதில்லை. இதை அதிக விலை கொடுத்து அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

தசை சிதைவுநோய் பற்றியும் அதன் சிகிச்சைக்கு ஏன் இவ்வளவு செலவு.?ஆகிறது என்பதையும் மையமாக வைத்து விஜய் ஸ்ரீ ஜி இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தசை பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தாய் படும் கஷ்டங்களை குறித்து இந்த படம் பேசும் என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.

நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாக அனித்ரா நாயர் நடிக்கிறார். அவரது மகளாக பேபி வேதாஷ்யா நடிக்கிறார்.

மேலும், முக்கிய கேரக்டர்களில் அமலா பாலின் சகோதரர் அபிஜித் பால், அர்ஜுன் ராஜ், அனித்ரா தந்தையாக ரயில் ரவி, விஜய் டிவி தீபா, சில்மிஷம் சிவா, வில்லனாக ரவி ராயன், பவுடர் ராமராஜன், கே.ஆர்.அர்ஜூன், ராஜேஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

வழக்கறிஞராக ஒரு முன்னணி நடிகர் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.

ரஷாந்த் ஆர்வின் இசையமைக்க மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் மேற்கொள்கிறார்.

தசை சிதைவு நோயை மையமாகக் கொண்டு உருவாகும் BANK என்ற இந்த படத்தின் டைட்டில் லுக்கை மலையாளத்தில் இன்று வெளியிட்டுள்ளனர்.

இன்று மலையாள வருட பிறப்பு (விஷு) பிறக்கிறது. இதனை முன்னிட்டு இந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படம் தமிழ் & மலையாளத்தில் வெளியாகும் என படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

Director Vijay Sri’s next film is titled Bank

வானத்தில் இருந்து உலகை பார்க்கும் ‘விமானத்தில்’ சமுத்திரக்கனி

வானத்தில் இருந்து உலகை பார்க்கும் ‘விமானத்தில்’ சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விமானம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதனுடன் படத்தின் வெளியீட்டு தேதியும், இதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

திரைப்படங்களில் பல்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று, அதில் தன் தனித்துவமான திறமையைக் காண்பித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் சமுத்திரக்கனி.

அற்புதமான குணச்சித்திர வேடங்களில் மட்டுமல்லாமல்… கொடிய வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து தன் முத்திரையை பதித்தவர். இதயத்திற்கு நெருக்கமான கதாநாயகனும் கூட. இவர் தற்போது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் தயாராகி இருக்கும் ‘விமானம்’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும், கதையின் நாயகனாகவும், உணர்வுபூர்வமான மற்றும் ஊக்கமளிக்கும் வகையிலும் நடித்து, பார்வையாளர்களுக்கு விமான பயண அனுபவத்தை அளிக்கத் தயாராகி விட்டார்.

இந்த ‘விமானம்’ திரைப்படம் எதிர் வரும் ஜூன் மாதம் 9ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இதனை ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, அதனுடன் பிரத்யேக காணொளி மூலம் தெரிவித்திருக்கிறது.

இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளி… ”நல்லதொரு இனிமையான அனுபவக் குறிப்புடன் தொடங்குகிறது. தந்தையும், அவரது ஏழு வயது மகனான ராஜூவும் பேசத் தொடங்குகிறார்கள். அவர்களுக்குள் ஆசை என்றால் என்ன? என்பதை பரிமாறிக் கொள்வதையும் காண்கிறோம்.

குழந்தை விமானத்தில் உயரமாக பறக்க விரும்புகிறது. இதனால் அவர் வானத்திற்கு மேலே இருந்து உலகை பார்க்கிறார். மோசமான பொருளாதார நிலை காரணமாக அவரால் நிறைவேற்ற முடியாத கனவாக இருந்தாலும், அவனது ஆசையை தந்தை பாராட்டுகிறார்” என அந்த பிரத்யேக காணொளியில் காண்பித்திருப்பது… பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘விமானம்’ தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே தருணத்தில் தயாரிக்கப்பட்ட இரு மொழி திரைப்படமாகும்.

இதனை சிவ பிரசாத் யானலா எழுதி இயக்கியிருக்கிறார். இதில் சமுத்திரக்கனியுடன் மாஸ்டர் துருவன்,அனுசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மின், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ராகுல், ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள்.

விவேக் கலேபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்திருக்கிறார். மார்தன் கே. வெங்கடேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஜே. கே. மூர்த்தி கவனித்திருக்கிறார். வசனத்தை பிரபாகர் எழுத, பாடலாசிரியர் சினேகன் பாடல்களை எழுதியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் சார்பில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் கிரண் கோர்ராபாரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய திரைப்படங்களுக்கான தலைவர் அக்ஷய் கெஜ்ரிவால் பேசுகையில்…

” கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து ‘விமானம்’ படத்திற்காக பணியாற்றுவதில் நாங்கள் மிகவும் பெருமிதம் அடைகிறோம். வலுவான கதைக்களம்… திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் விமானத்தை வழங்குவது எங்கள் பாக்கியம். இப்படத்தின் மூலம் பார்வையாளர்கள் உணர்வுபூர்வமான பயணத்திற்கு தயாராவார்கள்.

ஜீ ஸ்டுடியோஸ் மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் உள்ளடக்கத்தை தொடர்ந்து உருவாக்கி வழங்குவதே எங்களது நோக்கம். இந்த ‘விமானம்’ திரைப்படம், அந்த திசையில் ஒரு நேர்நிலையான முன்னேற்றத்தின் ஒரு படியாகும்.” என்றார்.

Actor Samuthirakani starrer Vimanam release date announced

சூர்யா 42 படத்தின் டைட்டில் இதுவா? ட்ரெண்டாகும் டேக்ஸ்

சூர்யா 42 படத்தின் டைட்டில் இதுவா? ட்ரெண்டாகும் டேக்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா 42 படத்தில் சூர்யா பல தோற்றங்களில் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நாளை (ஏப்ரல் 16) காலை 09.05 மணிக்கு அனிமேஷன் டைட்டில் டீசரை வெளியிட குழு திட்டமிட்டுள்ளது.

தற்போது சூர்யா 42 படத்தின் டைட்டில் டீசர் சென்சார் செய்யப்பட்டுள்ளது. தணிக்கை சான்றிதழில் படத்திற்கு ‘கங்குவா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

டைட்டில் டீசர் 1 நிமிடம் 16 வினாடிகள் கொண்டதாக இருக்கும். இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

Is this the Pan-Indian title of ‘Suriya 42’?

More Articles
Follows