‘பரஞ்சோதி’ டூ ‘பரமன்’ சௌந்தரராஜா ரொம்ப ஹேப்பி

‘பரஞ்சோதி’ டூ ‘பரமன்’ சௌந்தரராஜா ரொம்ப ஹேப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundhar raja‘சுந்தரபாண்டியன்’ படத்தில் சசிக்குமாரின் நண்பராக அறிமுகம் ஆனவர் நடிகர் சௌந்தரராஜா.

அதன்பின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’ என வலம் வந்தவருக்கு, காமெடி மன்னன் கவுண்டமணியுடன் நடித்த, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, திரைப்படம் கதாநாயகன் புரமோஷன் கொடுத்தது.

சௌந்தர ராஜா இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் திரைப்படம், ‘ஒரு கனவு போல’ வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அதற்கு முன்னால் சௌந்தர ராஜா வில்லனாக நடித்திருக்கும், ‘தங்க ரதம்’ திரைப்படம் வெளியாகி அவருக்கு பெரு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

இது பற்றி சௌந்தர ராஜா கூறுகையில், ‘இப்போது வெளியாகியுள்ள ‘தங்க ரதம்’ படத்தில் கதாநாயகியின் அண்ணனாக வில்லனாக நடித்திருக்கிறேன்.

படம் பார்த்த சினிமாத்துறை நண்பர்களும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்களும் மற்றும் பொதுமக்களும் என் தோற்றம் மற்றும் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன். ‘தங்க ரதம்’ இயக்குநர் பாலமுருகன் மற்றும் படக்குழுவிற்கு என் நன்றி.
என்ஜினியரிங் படித்த நான் வெளிநாட்டு வேலைகளை விட்டுவிட்டுத்தான் சினிமாவிற்கு வந்தேன்.

அதனால் எந்த இமேஜும் வைத்துக்கொள்ளாமல் கிடைத்த கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்தேன். என் முகம் ஓரளவுக்கு அனைவருக்கும் தெரிந்தபின் தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என்று நினைத்தேன்.
இப்போது ஓரளவு அனைவருக்கும் பரிச்சயமான நடிகனாக இருக்கிறேன் என்று நம்புகிறேன்.

‘தங்க ரதம்’ படத்தில் என் நடிப்பிற்கு கிடைத்துள்ள பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்திருக்கிறது. அந்த உற்சாகம் இனிமேல் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆர்வத்தை தந்திருக்கிறது.

“பரஞ்சோதி”யாக சுந்தரபாண்டியனில் ஆரம்பித்த என் பயணம், “பரமனாக” ‘தங்க ரதம்’ படத்தில் வளர்ந்திருக்கிறது என்று நம்புகிறேன். மகிழ்கிறேன்.

என்னை பாராட்டி உற்சாகப்படுத்தி நான் வளர உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

புலி முருகன் பாலாவை பாராட்டிய மோகன்லால்

புலி முருகன் பாலாவை பாராட்டிய மோகன்லால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mohan Lal with Dubbing artist Balaஒரு நல்ல திரைப்படம் தனக்கான ஆட்களைத் தானே தேடிக் கொண்டு விடும்.

அப்படித்தான் ‘புலிமுருகன்’ என்கிற மொழிமாற்றுப் படம் தமிழில் வரும் போது ஆர்.பி.பாலாவைத் தேடிக் கொண்டு தனதாக்கிக் கொண்டுள்ளது.

கேரளாவில் 180 கோடி ரூபாய் என்று வசூலில் வரலாற்றுச் சாதனை படைத்த படம் தமிழில் 350 திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழில் இதை ஒரு நேரடித் தமிழ்ப்படமாக மாற்ற உரிய நபரைத் தேடிய போது படத்தை மலையாளத்தில் தயாரித்த முலக்குப் பாடம் பிலிம்ஸ் நிறுவனத்தினர் ஆர்.பி.பாலாவை அழைத்திருக்கிறார்கள்.

வசனம் எழுத ஒப்பந்தம் செய்த பாலாவையே டப்பிங் பணிகளுக்கும் தேர்வு செய்தது மகிழ்ச்சி என்றும், இவர் தகுதியான நபர்தான் என்றும் கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லால் பாராட்டியுள்ளார்.

அப்படிப்பட்ட ஆர்.பி.பாலாவுடன் இனி பேசுவோம்..!

டப்பிங் கலைஞரான நீங்கள் வசனகர்த்தா, தயாரிப்பாளர் என்று ஆனது எப்படி?

நான் டப்பிங் துறையில் 22 ஆண்டுகளாக இருக்கிறேன். டப்பிங் என்றால் காட்சிக்கேற்ப குரல் கொடுப்பதல்ல. உதட்டசைவுக்கு ஏற்ப உரிய தொனியில்
பொருத்தமான மொழியில் குரல் கொடுப்பது.

இப்படிப் பல நடிகர்களுக்கும் டிவி, தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும்
குரல் கொடுத்திருக்கிறேன்.

அடிப்படையில் நான் ஒரு சவுண்ட் இன்ஜினியர், எடிட்டர் எனவே இதுபற்றி நுணுக்கமாகக் கற்றுக் கொண்டேன்.

பிறகு வசனத்தின் மீது ஆர்வம் பிறந்தது. தெலுங்கில் 1500 படங்களுக்கு வசனம் எழுதியவர் வசந்த்குமார்.

அவருடன் இருந்து வசனம் எழுதுவதன்
நுணுக்கத்தைக் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு பிடித்தப் படங்களுக்கு வசனம் எழுதினேன். படங்களும் தயாரித்தேன். இப்படி 8 படங்கள் தயாரித்தேன்.

அவற்றில் பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. பொருளாதார இழப்பும் ஏற்பட்டது. எல்லாவற்றையும் பாடமாகவே எடுத்துக் கொண்டேன்.

‘புலிமுருக’னுக்குள் புகுந்தது எப்படி?

‘பாகுபலி’ ஒரு டப்பிங் படமாக பெரிய வெற்றி பெற்ற படம். அதைப் போல
‘புலிமுருகன்’ படத்தையும் தமிழில் கொண்டுவர நினைத்தார்கள்.

அதற்கு ‘பாகுபலி’ போல இதற்கு பெரிய சரியான நபரைத்தேடி இருக்கிறார்கள்.
அப்படித்தான் மலையாளத்தில் படத்தைத் தயாரித்த முலக்குப் பாடம் டோமிச்சன் அவர்கள் என்னை அழைத்தார்கள்.

சரியான புரிதலுடன் வசனம் எழுத ஒப்பந்தம் செய்தேன். படம் பிடித்துப் போகவே தமிழில். டப்பிங் பணிகளின் பொறுப்பேற்ற போது மோகன்லால் சாரைப் பார்க்கப் போனேன்.

போகும் போது நான் வெறுமனே செல்லவில்லை. ஏற்கெனவே படத்தை மலையாளத்தில் பார்த்திருந்த நான் மோகன்லால் சம்பந்தப்பட்ட சில வசனங்களை தமிழில், மலையாளத்தில், ஆங்கிலத்தில் எல்லாம் எழுதி டம்மியாகக் குரல் பதிவு செய்து
கொண்டு போயிருந்தேன்.

அதைக் கேட்ட மோகன்லாலுக்கு உடனே பிடித்து விட்டது.
ஆரம்பத்தில் வசனம் எழுத மட்டுமே அழைத்தார்கள். படம் வெளியாக இருக்கும் ஒருவாரம் முன்பு தான் அழைத்தார்கள்.

வசனத்தை நான் ஏனோ தானோ என எழுதமாட்டேன். அதனால் அதிக சம்பளம் கேட்பேன். இருந்தாலும் நான் ஒப்பந்தமானேன்.

‘புலி முருகன்’ படத்தில் உங்கள்பணி வேறு என்ன?

தமிழில் வரும் ‘புலி முருகன்’ படத்தில் வசனம் எழுதத்தான் போனேன். ஆனால் இதைத் தமிழில் பெரிய படமாக வெளியிட தயாரிப்பாளர் முலக்குப் பாடம் பிலிம்ஸ் டோமிச்சனும் நாயகன் மோகன்லாலும் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள்.

மொழிமாற்றுப் பணிகளுக்கு என்னையே பொறுப்பேற்கச் சொன்னார்கள். நானும் ஏற்றுக் கொண்டேன்.

இதற்கு வசனம் எழுதியது மட்டுமல்ல ‘முருகா முருகா புலி முருகா ‘என்கிற டைட்டில் பாடலும் எழுதினேன்.

டப்பிங்கில் பெரிதும் கவனம் செலுத்தினேன். பொதுவாக ஒரு டப்பிங்
படமென்றால் ஐந்தாறு நாட்களில் பேசி முடித்து விடுவார்கள். இதற்கு 45
நாட்கள் எடுத்துக் கொண்டேன்.

மோகன்லால், கிஷோர் எல்லாரையும் சொந்தக் குரலில் பேச வைத்திருக்கிறேன்.

வழக்கமான குரல்கள் இதில் இருக்காது. நடிகர்கள், தோற்றம், அவர்களின் குரல் இவை எல்லாம் பார்த்து ஒரு குரலுக்கு 10 பேரைப் பார்த்து தேர்வு செய்து பயன் படுத்தியிருக்கிறேன்.

மோகன்லால்சார் ஒருநாள் டப்பிங்கிற்கு தேதி கொடுத்தார். நான் அவரைப்
பாடாய்ப் படுத்தி அந்த ஒரு நாளில் இரண்டே இரண்டு காட்சிகள் தான் பேச
வைத்தேன். என் ஈடுபாட்டைப் பார்த்து உன் விருப்பப்படி செய் என்று மேலும்
5 நாள் பேசி ஒத்துழைத்தார்.

மோகன்லாலுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

இங்கு ரஜினி சார் மாதிரி கேரளாவில் அவர்தான் சூப்பர் ஸ்டார். முதலில்
அவரை அணுக எனக்கு பயம், தயக்கம் இருந்தது. ஆனால் அவர் சகஜமாகப்
பழகினார்.டப்பிங் ஒப்பந்தமான போதே என்னை அவருக்குப் பிடித்து விட்டது.
தமிழில் ‘புலி முருகன்’ சிறப்பாக வர பாலாதான் காரணம் என்று மேடையிலேயே கூறியிருக்கிறார் .

என்னை எப்போது பார்த்தாலும் புலி பாலா என்றே கூப்பிடுவார். இதுவரை
ஆர்.பி.பாலாவாக இருந்த நான் இப்போது புலி முருகன் பாலா
ஆகியிருக்கிறேன். காரணம் மோகன்லால் சார் கொடுத்த ஊக்கம்தான்.

டப்பிங்கில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்றாலும் எத்தனை டேக் என்றாலும் பேசி ஒத்துழைத்தார்.

அது மட்டுமல்ல அவரது கொச்சின் விஷூமஹால் ஸ்டுடியோவில்தான் டப்பிங் நடந்தது அப்போது என்னை அன்பாக ஒரு விருந்தினரைப் போல அவ்வளவு கவனித்து அன்பு காட்டினார். பழகுவதில் அவ்வளவு எளிமையை அவரிடம் கண்டேன்.

வேறு என்ன செய்திருக்கிறீர்கள்?

முதலில் இது ஒரு டப்பிங் படம் என்கிற உணர்வு வரக் கூடாது என்று முடிவு செய்து கொண்டோம். அதற்காகவே மிகவும் மெனக்கெட்டோம். ஆறு மாத காலம் பாடுபட்டோம்.

‘புலி முருகன்’ கதை தேனிப் பக்கம் நடப்பது போல அமைத்தோம். எல்லாரையும் தேனி வட்டார மொழி பேச வைத்தோம். மண் மணம், கலாச்சார மணம் வந்து விட்டது.

இதற்காக அதிக சிரமப்பட்டோம். அதற்குரிய பலன் கிடைத்திருக்கிறது. அசல்
தமிழ்ப் படமாக மாறிவிட்டது. படம் பார்த்த சில நிமிடங்களிலேயே அது நம்ம ஊர்ப்படமாக மாறிவிடும். எளிதில் உள்ளே நுழைந்து விடுவோம்.

இது ஒரு மொழிமாற்றுப் படம் என்கிற உணர்வே போய்விடும். நமது மண் மணம் நேட்டிவிட்டி மாறாமல் படத்தில் கொண்டு வந்திருப்பதே எங்கள் பெரிய வேலை.
அது மட்டுமல்ல படத்தின் விளம்பரம், போஸ்டர், டிசைன், ட்ரெய்லர் வரை நான் செய்ததுதான். ட்ரெய்லர் டிரெண்டிங்கில் வந்து சாதனை படைத்தது.

இதன் வெளியீட்டுத் திரைகளின் எண்ணிக்கை ஒரு ரெக்கார்டு பிரேக். ஆமாம்
இதுவரை 300 திரையரங்குகள் என்று இருந்தது. இப்போது மேலும் 60
திரையரங்குகள் அதிகரித்துள்ளன.

நிச்சயம் இதன் ஸ்டண்ட் பற்றிப் பேசப்படும். இப்படத்துக்காகவே பீட்டர்
ஹெயின் மாஸ்டர் நாட்டிலேயே முதன்முதலில் தேசிய விருது பெற்றுள்ளார்.

இந்தப் படம் தமிழில் நன்றாக வர முலக்குப் பாடம் நிறுவனத் தயாரிப்பாளர்
டோமிச்சன் , நாயகன் மோகன்லால் இருவரும் அத்தனை ஒத்துழைப்பு
கொடுத்தார்கள்.

தமிழில் செந்தூர் சினிமாஸ் வெளியிடுகிறது.

படம் வெளிவரும் முன்பே எனக்கு நான்கு புதிய படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்புகள் வந்துள்ளன.

மோகன்லால் தன் ‘ஒப்பம் ‘என்கிற படத்தை தெலுங்கில் டப்பிங் செய்ய வசனம் எழுத வாய்ப்பு கொடுத்தார். அடுத்தடுத்த படங்களுக்கும் என்னையே வசனம் எழுதும்படி கூறியுள்ளார்.

ஒரு தயாரிப்பாளராக நான் இப்போது ‘போட்டின்னு வந்துட்டா சிங்கம்’ என்கிற
படத்தை ‘மாநகரம்’ நாயகர் சந்தீப், ரெஜினாவை வைத்து தயாரித்து வருகிறேன்.

புலி முருகன் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் அதன் வெற்றி எழுதப்பட்ட ஒன்று என்பதை இன்னும் சில நாட்களில் அனைவரும் உணர்வார்கள்.

4000அடி போஸ்டர்; தங்கத்தேர்; தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்

4000அடி போஸ்டர்; தங்கத்தேர்; தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thanga thalapathy vijay fansநாளை ஜீன் 22ஆம் தேதி நடிகர் விஜய் தன் பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறார்.

இதனை முன்னிட்டு இன்று மாலை அவரது 61 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளனர்.

மேலும் தமிழகம், கேரளா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில் விஜய்யின் படங்கள் சிறப்ப்பு காட்சிகளாக திரையிடப்பட உள்ளன.

தியேட்டர்களில் பர்ஸ்ட் லுக்கையும் திரையிட உள்ளனர்.

இதனால் இம்முறை விஜய் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் பிறந்தநாளை கொண்டாட வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரசிகர்கள் 4000 அடிக்கு ஒரு நீண்ண்ண்ண்ணட்ட்ட்ட்ட்ட்ட போஸ்டரை அடித்து அந்த பகுதியையை கலக்கி வருகின்றனர்.

மேலும் கோயில்களில் தங்கத்தேர் இழுத்து விஜய் நலமுடன் வாழ வேண்டு வருகின்றனர்.

ரசிகர்களுடன் சேர்ந்து நாங்களும் தங்கத் தளபதியை வாழ்த்துக்கிறோம்.

Fans celebrates Vijay Birthday in grand manner

சிம்புவின் AAA பட முன்னோட்டம்

சிம்புவின் AAA பட முன்னோட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aaa simbuத்ரிஷா இல்லனா நயன்தாரா பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தன் படத்தை இயக்க வாய்ப்பளித்தார் சிம்பு.

இப்படத்திற்கு `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என பெயரிட்டுள்ளனர்.

குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

இப்படம் ரம்ஜானை முன்னிட்டு வருகிற ஜுன் 23-ஆம் தேதி ரிலீசாகிறது.

நாளை மறுநாள் வெளியாக உள்ள இப்படத்தின் முன்னோட்டம் குறித்து பார்ப்போம்.

சிம்பு இதுவரை 3 வேடங்களில் எந்த படத்திலும் நடித்ததில்லை. இதில் முதன்முறையாக நடிக்கிறார். 4வது கேரக்டர் ஒன்று உள்ளது என கூறப்படுகிறது.

சிம்வின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் இசையமைத்துள்ளார்.

ஒரு கானா பாடலை இளையராஜா பாடியுள்ளார். அந்த பாடலை இளையராஜா பிறந்த தினத்தில் வெளியிட்டு அவரை கௌரவித்தனர்.

டிரெண்ட் பாடல், ரோட்டுல வண்டி ஓடுது, ரத்தம் என் ரத்தம் உள்ளிட்ட 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் மூலம் தமன்னா மற்றும் ஸ்ரேயாவுடன முதன்முறையாக இணைந்துள்ளார் சிம்பு.

சிலம்பாட்டம் படத்தில் நடித்த சனாகான், இதில் மீண்டும் சிம்பு உடன் இணைந்துள்ளார்.

இதுநாள் வரை தன் கட்டுக்குள் வைத்திருந்த சிம்பு முதன்முறையாக ஒரு படத்திற்காக தன் உடல் எடையை 95 கிலோவாக ஏற்றி மதுரை மைக்கேல் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் மிகவும் வயதான கேரக்டரான அஸ்வின் தாத்தா கேரக்டரும் உண்டு.

இந்த கேரக்டர்களின் போஸ்டர்கள் மற்றும் டீசர்கள் வெளியாகி விட்டது.

இப்படத்தின் இரண்டாவது பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் ரிலீசுக்கு முன்பு இதன் டிரைலர் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை வெளியாகவில்லை.

மதுரையில் உள்ள சிம்பு ரசிகர்கள் 100 அடிக்கு போஸ்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 450 திரையரங்குகளில் ரிலீசாகிறது.

கர்நாடகாவில் 50, கேரளாவில் 75, இலங்கையில் 40 தியேட்டர்கள் என உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் திரையிப்பட உள்ளது.

இது சிம்பு படத்தின் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் அதிகாலை 6 மணிக்கே படம் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Preview and High lights of AAA movie

 

விக்ரம் கால்ஷீட் & சாமி2 சூட்டிங் அப்டேட்ஸ்

விக்ரம் கால்ஷீட் & சாமி2 சூட்டிங் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram trisha saamyஹரி இயக்கிய சாமி படத்தில் அதிரடி போலீஸாக மிரட்டியவர் விக்ரம்.

அந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இப்படத்தையும் ஹரி இயக்க, விக்ரமுடன் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள இதன் சூட்டிங் ஜீலை இறுதியில் அல்லது ஆகஸ்ட்டில் தொடங்கும் என கூறப்படுகிறது.

திருநெல்வேலி, டெல்லி மற்றும் நேபாள் ஆகிய இடங்களில் இதன் சூட்டிங் நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம் ஹரி.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் காக்கி யூனிபார்ம் அணியவுள்ள விக்ரம் இப்படத்திற்காக 110 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் பற்றி சாயிஷா நச் பதில்கள்

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் பற்றி சாயிஷா நச் பதில்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vanamagan sayyeshaநாளை மறுநாள் வெளியாகவுள்ள வனமகன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் சாயிஷா.

இதனையடுத்து விஷால், கார்த்தி இணைந்து நடிக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் தன் ரசிகர்கள்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்கள் பற்றி ஏதாச்சும் சொல்லுங்களேன் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் பதிலளித்து இருந்தார்.

அவரின் பதில்களை இங்கே தொகுத்துள்ளோம்…

Your actual height
5 feet 7 inches

Few words about Rajini sir?
Legendary! Complete respect!

Do you like to act with Ajith? And who is your dream actor?
Ajith sir is my favorite

Your opinion about Suriya?
Fantastic actor

A few words about STR
Intense and great actor

One word about Dhanush sir
Super energy and great connect with the audience

One word about Sivakarthikeyan?
Very talented

What would you be doing if you haven’t entered film industry?
I can’t imagine my life without movies.

More Articles
Follows