தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு விநியோகஸ்தராகவும் கொடூர வில்லனாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர். கே. சுரேஷ் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.
கௌரவ் இயக்கும் இப்படை வெல்லும் படத்தில் வில்லனாக நடித்து வரும் சமயத்தில், வேட்டை நாய் படத்தில் கடுகு படப்புகழ் சுபிக்ஷாவுடன் டூயட் பாடி வருகிறார்.
இந்நிலையில் வரலட்சுமியுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம்.
வர்கம் என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சாலை இந்திரஜித் இயக்கவிருக்கிறார்.
இத்தகவலை அவரே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் ஆர். கே. சுரேஷ் மற்றும் வரலட்சுமி இணைந்து நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Varalakshmi to romance with RK Sursh for Vargam movie directed by Saalai Indrajith