நிதி மோசடி: ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா வைத்த ஆப்பு.; நடிகர் தலைமறைவு.!

நிதி மோசடி: ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா வைத்த ஆப்பு.; நடிகர் தலைமறைவு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது சில மாதங்களுக்கு முன் அம்பலமானது.

பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்துக்கு 25% – 30% வரை வட்டி தருவதாக கூறியதால் ஏராளமானோர் முதலீடு செய்திருந்தனர்.

ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்காததாலேயே ஆருத்ரா மோசடி புகாரில் சிக்கியது.

மக்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 350 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி இருப்பதாக அரூத்ரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆருத்ரா நிறுவனம் ஏஜெண்டாக செயல்பட்டு வந்த ரூசோ என்பவரிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வரையில் பணம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

வெளிநாட்டில் இருக்கும் நடிகர் ஆர்.கே. சுரேஷ் கடந்த 6 மாதமாக சென்னை திரும்பவில்லை.

காவல்துறை விசாரணைக்கு பயந்து அவர் அங்கேயே தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

Aarudhra Gold Scam Russo to RK Suresh bought Rs. 15 crores

ஒரு நாயகன் உதயமாகிறான்.; டிடிஎஃப் வாசன் பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

ஒரு நாயகன் உதயமாகிறான்.; டிடிஎஃப் வாசன் பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் விஸ்வரூபம் எடுத்த பின்னர் அதில் பல பிரபலங்கள் உருவாகி வருகின்றனர்.

ஒரு சிலர் தங்களுடைய திறமையை உலகறிய செய்ய இந்த வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.

இப்படியாக தன் பைக் சாகசங்களை instagram மற்றும் youtube இல் பதிவேற்றம் செய்து பிரபலம் அடைந்தவர் TTF வாசன். இ்வர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

மிக அதிவேகமாக பைக் ஓட்டி அதனை வீடியோ எடுத்து யூடியுப்பில் பதிவேற்றம் செய்வார். இதனால் பல வழக்குகளை சந்தித்து காவல்துறையின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஆனாலும் இதை தொடர்ந்து செய்து மன்னிப்பும் கேட்டு சர்ச்சைகளில் சிக்குவார் இவர்.

இந்நிலையில், யூடியூபர் டி.டி.எப் வாசன் தமிழ் சினிமாவில் நாயகனாக களமிறங்கவுள்ளார். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வரும் 29-ஆம் தேதி வாசன் பிறந்தநாளில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Youtuber TTF Vasan entry in Tamil Cinema

ஹீரோ & வில்லன்.; தமிழ் – மலையாளம் என இரு குதிரைகளில் சௌந்தரராஜா சவாரி

ஹீரோ & வில்லன்.; தமிழ் – மலையாளம் என இரு குதிரைகளில் சௌந்தரராஜா சவாரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், பிகில், சங்கத் தமிழன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சௌந்தரராஜா.

இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் “கட்டிஸ் கேங்” என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தமிழிலும் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார் சௌந்தரராஜா.

அருள்நிதியின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.

விஜய் இயக்கும் இந்த படத்தில் தான் சௌந்தரராஜா வில்லனாக நடிக்கிறாராம்.

இந்த படம் வெளியானவுடன் அதிக படங்களில் வில்லனாக நடிக்க சௌந்தர்க்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல்கள் வருகின்றன.

இவையில்லாமல் மலையாள இயக்குனர் அணில் இயக்கும் ‘சாயாவனம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சௌந்தரராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கணவன் மனைவியின் அழகிய உறவை சொல்லும் படமாக வளர்ந்து வருகிது.

Soundararajas upcoming movie in Tamil and Malayalam

சினிமாவில் எழுத்தாளர்களுக்கு உரிமையில்லை… நானும் ஒரு காரணமாயிட்டேன் – பாக்யராஜ்

சினிமாவில் எழுத்தாளர்களுக்கு உரிமையில்லை… நானும் ஒரு காரணமாயிட்டேன் – பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையாவின் உதவி இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பம்பர்’.

லாட்டரி சீட்டை மையப்படுத்திய இந்த படத்தில் வெற்றி, ஷிவானி ஜோடியாக நடித்துள்ளனர்.

ஜூலை 7 தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் K பாக்யராஜ் பேசியதாவது…

அறிமுக இயக்குநர் செல்வகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் வேலை பார்த்த இயக்குநர்கள் இங்கு வந்துள்ளதை பார்க்கப் பெருமிதமாக இருக்கிறது. டிரெய்லர் நன்றாக உள்ளது.

புரியாத பாடல்கள் தான் நிறைய வந்துகொண்டிருக்கிறன, ஆனால் இந்தப்படத்தில் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளது. நடிகர் வெற்றி முதல் படத்தில் தன் சொந்த பணத்தில் நடித்தார், அதிலும் நல்ல கதையாகத் தேர்ந்தெடுத்து நடித்தார்.

ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். படத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பாடல் பாடுபவர்கள் முதல் உரிமை இருக்கிறது. ஆனால் எழுத்தாளர்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கிறது. இதற்குக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் போட்டுக்கொண்ட நானும் ஒரு காரணம். இது மாற வேண்டும். புதுத் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள். படத்திற்கு ஆதரவு தாருங்கள், நன்றி.

‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள ‘பம்பர்’ படத்தை வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரித்துள்ளார்.

இயக்குநர்கள் மீரா கதிரவன், ‘கொம்பன்’ மற்றும் ‘விருமன்’ புகழ் முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்கியுள்ளார்.

‘பம்பர்’ படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றியுள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவை ‘நெடுநல்வாடை’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘ஆலம்பனா’ மற்றும் ‘கடமையைச் செய்’ ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாண்டுள்ளார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

Writers doesn’t have good recognition says Bhagyaraj

திரில்லர் மட்டும்தான் செய்றேன்னு விமர்சனம் இருக்கு.. இனி மாறும்.. – வெற்றி

திரில்லர் மட்டும்தான் செய்றேன்னு விமர்சனம் இருக்கு.. இனி மாறும்.. – வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையாவின் உதவி இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பம்பர்’.

லாட்டரி சீட்டை மையப்படுத்திய இந்த படத்தில் வெற்றி, ஷிவானி ஜோடியாக நடித்துள்ளனர்.

ஜூலை 7 தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் வெற்றி பேசியதாவது…

முதன்முறையாக நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட முயற்சி செய்துள்ளேன், தொடர்ந்து திரில்லர் படம் மட்டும்தான் செய்கிறேன் என்று என் மீது ஒரு விமர்சனம் இருக்கிறது, இந்த படத்தில் அது மாறும் என்று நம்புகிறேன், இயக்குநர் கதையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார், அவர் நினைத்தது போலப் படம் வந்துள்ளது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது, கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும், படத்திற்கு ஆதரவு தாருங்கள், நன்றி.

இயக்குநர் செல்வகுமார் பேசியதாவது…

இந்த இடத்திற்கு நான் வந்ததற்குக் காரணமான பலர் இங்குள்ளனர் அவர்கள் அனைவருக்கும் நன்றி, என்னை நம்பி எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் தியாகராஜா அண்ணனுக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது, இதற்கு உதவியாக இருந்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி. இது ஒரு குழு முயற்சி. இந்தப்படம் அழுத்தமான கருத்தைப் பேசும். கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன், நன்றி.

Here after my thriller route will be changed says Vettri

வெற்றி மற்ற படங்களை பம்பரில் வித்தியாசம் காட்டியிருக்கார் – ஷிவானி

வெற்றி மற்ற படங்களை பம்பரில் வித்தியாசம் காட்டியிருக்கார் – ஷிவானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையாவின் உதவி இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பம்பர்’.

லாட்டரி சீட்டை மையப்படுத்திய இந்த படத்தில் வெற்றி, ஷிவானி ஜோடியாக நடித்துள்ளனர்.

ஜூலை 7 தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகை ஷிவானி பேசியதாவது…

தயாரிப்பாளர் தியாகராஜா சார் படத்திற்குத் தேவையான அனைத்தும் கொடுத்துள்ளார், இயக்குநர் செல்வம் மிகுந்த உழைப்பை இந்த படத்திற்குக் கொடுத்துள்ளார், படம் பார்த்தால் உங்களுக்குக் கண்டிப்பாகப் புரியும்.

நடிகர் வெற்றி, மற்ற படங்களை விட இந்த படத்தில் கொஞ்சம் மாறுபட்டு நடித்துள்ளார்.

அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும். படக்குழு அனைவருக்கும் நன்றி, படம் நன்றாக உள்ளது, உங்களுக்கும் பிடிக்கும், நன்றி.

Shivani talks about Vettri and Bumper movie

More Articles
Follows