கமலுடன் வடிவேலு நடிப்பாரான்னே தெரியல அதுக்குள்ள ஆர்.கே. புகாரா.?

கமலுடன் வடிவேலு நடிப்பாரான்னே தெரியல அதுக்குள்ள ஆர்.கே. புகாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor RK complaint against Comedy actor Vadiveluஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல்.

இதனையடுத்து கமல் இயக்கவுள்ள ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை ‘தேவர் மகன்’ பட பார்ட் 2ஆக எடுக்கவிருக்கிறாராம்.

இதில் வடிவேலு நடிக்கவுள்ளதாக வந்த தகவல்களை பார்த்தோம். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் வடிவேலுவால் மற்றொரு படத்திற்கு ஒரு பிரச்சினை எழுந்துள்ளது.

நடிகர் ஆர்.கே. நாயகனாக நடித்து, தயாரிக்க இருந்த ‘நானும் நீயும் நடுவுல பேயும்‘ என்ற படத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களாம்.

இதற்காக வடிவேலுக்கு அட்வான்ஸ் ரூ. 1 கோடியை கொடுத்துள்ளனர்.

ஆனால், கதையில் சில மாற்றங்கள் தேவை என வடிவேலு சூட்டிங் வரமால் இழுத்தடியுள்ளார்.

இதனால், முன்பணம் கொடுத்த 1 கோடி ரூபாயைத் திரும்ப கேட்டுள்ளார் ஆர்.கே.

அதையும் வடிவேலு திரும்ப அளிக்கவில்லை என ஆர்.கே. புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில்.. ‘‘தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்கட்டும். அதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை.

ஆனால், எனக்குக் கொடுக்க வேண்டிய 1 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் வடிவேலு நடிப்பாரா? என்பது கூட இன்னும் முடிவாகவில்லை. அதற்குள் இந்த அலப்பறையா?

Actor RK complaint against Comedy actor Vadivelu

சங்கத்தமிழன் ரிலீஸ் இல்லை; டுடே ஆக்சன் மட்டும்தான்

சங்கத்தமிழன் ரிலீஸ் இல்லை; டுடே ஆக்சன் மட்டும்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sanga Thamizhan not releasing today Action movie releasedஇன்று நவம்பர் 15ல் விஷால் நடித்த ஆக்சன் மற்றும் விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி விஷாலின் ஆக்சன் படம் ரிலீசாகிவிட்டது. ஆனால் 2 நாட்களாக பேசப்பட்ட சங்கத்தமிழன் பிரச்சினை இன்னும் தீரவில்லை என்பதால் இந்த படம் இன்று வெளியாகவில்லை.

சங்கத்தமிழன் படத்தை விஜய்சந்தர் இயக்க விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தை லிப்ரா புரொடக்‌ஷனின் ரவீந்தர் சந்திரசேகர் வெளியீடுகிறார்.

இவரின் முந்தைய பட விநியோகம் பிரச்சினை காரணமாக சில ஏரியாக்களில் படத்தை வெளியிட மறுத்தனர்.

மேலும் அஜித்தின் வீரம் பட ரிலீசின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இன்னும் விநியோகஸ்தர்களுக்கு விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பணபாக்கி வைத்திருப்பதாலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு ஒருவேளை இன்று மாலை அல்லது நாளை அக். 16ல் சங்கத்தமிழன் ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகிறது.

Sanga Thamizhan not releasing today Action movie released

சினிமாவில் அறிமுகமாகும் லாஸ்லியா; ரசிகர்கள் குஷி

சினிமாவில் அறிமுகமாகும் லாஸ்லியா; ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss fame Losliya prepares for movie debut in Kollywoodகமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 பங்கேற்று படு பிரபலமானவர் லாஸ்லியா.

இவர் இலங்கையைச் சேர்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை வந்தாலும் 3வது நபராக வெற்றி பெற்றார்.

ஆனால் லாஸ்லியாவை பிடிக்காதவர்களே இல்லை என்னுமளவுக்கு அனைவரையும் கவர்ந்தார்.

இந்த நிலையில், இவருக்கு சினிமாவில் நடிக்க நிறைய சான்ஸ் வருவதா தகவல்கள் வந்துள்ளன.

இவர் சினிமாவில் நடிக்க போகும் தகவலை இவருடைய அக்கா தர்ஷி என்பவர் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையறிந்த லாஸ்லியா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Bigg Boss fame Losliya prepares for movie debut in Kollywood

அஜித்-விஜய் படம் நான் பண்ணல; சாவடிக்கிறாங்க.. – சுரேஷ் காமாட்சி குமுறல்

அஜித்-விஜய் படம் நான் பண்ணல; சாவடிக்கிறாங்க.. – சுரேஷ் காமாட்சி குமுறல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suresh Kamatchi slams theater owners in issue of Miga Miga Avasaramஸ்ரீபிரியங்கா நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘மிக மிக அவசரம்‘.

இதில் ஸ்ரீ பிரியங்காவுக்கு ஜோடியாக அரீஷ்குமார் நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் சீமான் நடித்திருந்தார்.

இப்படத்தை லிப்ரா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் இதன் ரீலீஸ் தள்ளிக் கொண்டே போனது.

தற்போது 150க்கும் அதிகமான தியேட்டர்களில் நவம்பர் 8-ம் தேதி ‘மிக மிக அவசரம்‘ வெளியானது.

இதனிடையில் தியேட்டர்கள் கிடைத்தாலும் காட்சிகள் அனைத்துமே காலையில்தான் போடப்படுகிறது. அதாவது 11:30 மணி, மதியம் 2:00 மணி காட்சிகளாகவே இருக்கின்றன.

இது தொடர்பாக ‘மிக மிக அவசரம்‘ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி கோபமாக தெரிவித்துள்ளதாவது…

“கொடுக்கிற மாதிரி கொடுப்பாங்களே அப்படித் தான் ஆகிப் போச்சு.

திரையரங்குகள் ‘மிக மிக அவசரம்’ படத்திற்குக் கிடைத்தது. காலை ஷோ, மதிய ஷோவா கொடுத்தா யார் சார் தியேட்டருக்கு வருவாங்க? நான் விஜய் சார், அஜித் சார் படமா பண்ணியிருக்கேன்? சின்ன படங்களை சாவடிக்கிறாங்க..” என தெரிவித்துள்ளார்.

Suresh Kamatchi slams theater owners in issue of Miga Miga Avasaram

சுசித்ரா காணவில்லை என தங்கை புகார்.; என்ன தான் நடக்குது?

சுசித்ரா காணவில்லை என தங்கை புகார்.; என்ன தான் நடக்குது?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I am not missing says singer Suchithra to Policeபாடசி சுசித்ரா என்பதை விட சுசீ லீக்ஸ் என்றால் எல்லாருக்கும் தெரியுமளவுக்கு பிரபலமானவர் தான் இவர்.

இவர் காணாமல் போய்விட்டதாக அவரது தங்கை சுனிதா அடையாறு போலீசில் கடந்த 11-ந்தேதி புகார் அளித்திருந்தார்.

போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் சுசித்ராவின் செல்போன் நம்பரும் இருந்தன.

இதை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது சுசீத்ரா அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருப்பது தெரியவந்தது.

நான் மாயமாகவில்லை. ஓட்டலில் ஓய்வு எடுக்க சென்றேன். என தெரிவித்துள்ளார் சுசீத்ரா.

அப்படியென்றால் அவரது தங்கை ஏன் புகார் அளித்தார்? என்பதுதான் இதுவரை யாருக்கும் புரியவில்லை.

I am not missing says singer Suchithra to Police

ஆட்டோ சங்கர் MTV IWM DIGITAL AWARDS எனும் விருதை சிறந்த பிராந்திய மொழி வெப் சீரிஸுக்காக வென்றுள்ளது.

ஆட்டோ சங்கர் MTV IWM DIGITAL AWARDS எனும் விருதை சிறந்த பிராந்திய மொழி வெப் சீரிஸுக்காக வென்றுள்ளது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Auto shankar teamடிஜிட்டல் தளத்தில் பலவிதமான வெப் சீரிஸ்கள் வெளியாகி வரும் வேளையில் Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஷாவுடன் இணைந்து தயாரித்திருந்த ஆட்டோ சங்கர் வெளியானபோதே பலரது கவனத்தையும் ஈர்த்தது. மனோஜ் பரமஹம்ஷா மேற்பார்வையில் அசரடிக்கும் உருவாக்கத்தில் திரைப்படத்திற்கு இணையான தரத்தில் உருவாக்கப்பட்டிருந்த ஆட்டோ சங்கர் பலரது பாராட்டையும் பெற்ற நிலையில் இப்போது MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றுள்ளது.

விருது பற்றி மனோஜ் பரமஹம்ஷா கூறியதாவது…
இது தான் தமிழில் வெளியான வெப் சீரிஸ்களில் முதல் தரமான ஒன்று. Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் என்னுடன் இணைந்து இதனை தயாரித்திருந்தார். நாங்கள் இதனை தயாரித்தற்கு பெருமை கொள்கிறோம். நாங்கள் மொத்த சீரிஸையும் பற்பல முன் தயாரிப்புகளுடன் 35 நாட்களில் சென்னையை சுற்றி ஷூட்டிங் முடித்தோம். ஆனால் கதையில் காலத்தை கொண்டு வருவதில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் உழைத்தோம். 1985 முதல் 1990 வரையிலான காலத்தை கண் முன் கொண்டு வருவதற்கு பெரும் பாடுபட்டோம். இது பெரிய அளவில் கவனம் பெற்று சினிமாத்துறையில் இருந்து பலரும் பாராட்டினார்கள். தமிழின் மிகச்சிறந்த இயக்குநர் வெற்றிமாறன் இதனை தனியாக குறிப்பிட்டு பாரட்டினார். இப்போது எங்களது சிரீஸ் அடுத்த கட்ட பாராட்டை பெற்றுள்ளது பெருமகிழ்ச்சி. மும்பையில் நேற்று நடந்த விழாவில் சிறந்த பிராந்திய மொழி சீரிஸ் பிரிவில் ஆட்டோ சங்கர் MTV IWM DIGITAL AWARDS விருதை பெற்றுள்ளது. இவ்விருது வருடாவருடம் ஹிந்தி மற்றும் ஏனைய பிராந்திய மொழிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

Zee5 OTT தளத்தில் வெளியாகியிருக்கும் ஆட்டோ சங்கர் வெப் சீரிஸினை Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் மனோஜ் பரமஹம்ஷாவுடன் இணைந்து தயாரித்திருந்தார். மலையாள நடிகர் சரத் ஆட்டோ சங்கர் வேடமேற்றிருந்தார். அர்ஜீன் சிதம்பரம், ஸ்வயம் சித்தா, ராஜேஷ் தேவ் மற்றும் பிரவீன் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அரோல் கரோலி இசையமைக்க, மனோஜ் பரமஹம்ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

More Articles
Follows