கடுகளவு கர்வமில்லாதவர்.; இமயமளவு இதயமுள்ளவர்.. ரஜினிக்கு பார்த்திபன் நன்றி

கடுகளவு கர்வமில்லாதவர்.; இமயமளவு இதயமுள்ளவர்.. ரஜினிக்கு பார்த்திபன் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parthiban said thanks to Rajini for his wishes on Oththa Seruppuபார்த்திபன் இயக்கி அவர் ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’

இந்தப் படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், ” தனது ஒவ்வொரு படத்திலும் தனித்துவத்தை காட்டும் பார்த்திபன் இந்த படத்தின் மூலம் உச்சத்தை தொட்டிருக்கிறார். இது தமிழ் திரையுலகில் புதுமையான, புரட்சியான, பாராட்டுக்குரிய முயற்சி. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கேமிரா, எடிட்டிங், பேக்கிரவுண்ட் மியூசிக், பின்னணியில் ஒலிக்கும் குரல்கள் அனைத்தும் அற்புதம். படம் வெற்றி பெற என்னுடைய வாழத்துக்கள்”. என ரஜினி தெரிவித்துள்ளார்.

இந்த கடித நகலை ட்விட்டரில் பதிவிட்டு, அத்துடன் கடுகளவு கர்வமில்லாத, வெந்திய அளவு பந்தா இல்லாத, மிளகளவு மிகையில்லாத ஆனால் இமயமளவு இதயமுள்ள, GOLDEN GLOBE குணநலமுள்ள OSCARஐ தாண்டியும் உச்சம் தொட்ட சூப்பர் ஸ்டார் திரு. ரஜினி சாரின் வாழ்த்து” என பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.

Parthiban said thanks to Rajini for his wishes on Oththa Seruppu

டபுள் ஹீரோயின்ஸ் படங்களை தயாரிக்கும் ‘பேட்ட’ டைரக்டர்

டபுள் ஹீரோயின்ஸ் படங்களை தயாரிக்கும் ‘பேட்ட’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik subbaraj producing 2 movies with Keerthy Suresh and Aishwarya Rajeshரஜினியின் பேட்ட படத்தை அடுத்து தனுஷ் நடித்து வரும் படத்தை லண்டனில் இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ்.

அதே சமயத்தில் இங்கு தமிழகத்தில் இவர் தயாரிக்கவுள்ள இரண்டு பட படப்பிடிப்பையும் துவங்கியுள்ளார்.

மேயாத மான், மெர்க்குரி உள்ளிட்ட படங்களை தயாரித்த தன் ஸ்டோன் பென்ச் என்ற நிறுவனம் மூலம் இப்படங்களை தயாரிக்கிறார்.

ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, மற்றொரு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

கீர்த்தி நடிக்கும் படத்தை ஈஸ்வர் கார்த்திக் என்ற புதுமுகம் இயக்குகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் படத்தை ரதீந்தின் ஆர் பிரசாத் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.

இந்த இரண்டு பட சூட்டிங்கும் கொடைக்கானலில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

Karthik subbaraj producing 2 movies with Keerthy Suresh and Aishwarya Rajesh

ரசிகர்கள் பேனர் வைக்கக் கூடாது என கமல்-சூர்யா-விஜய் அறிவிப்பு

ரசிகர்கள் பேனர் வைக்கக் கூடாது என கமல்-சூர்யா-விஜய் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Fans must ban flex banners says Kamal Vijay Suriyaசென்னையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சிக்கு வழக்கம்போல ரோடு முழுவதும் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

அப்போது சாலை வழியே சென்றுக் கொண்டிருந்த 23வயது சுபஸ்ரீ மீது ஒரு பேனர் விழ, அவர் தன் டூவிலரில் இருந்து கீழே விழுந்தார்.

அந்த சமயம் பார்த்து ஒரு தண்ணீர் லாரி அவர் மீது ஏறிவிட அந்த நிமிடமே அவரின் உயிர் பறி போனது. இந்த சம்பவம் தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதனையடுத்து பேனரை பிரிண்ட் செய்தவர், லாரியை ஓட்டியவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் சம்பந்தபட்ட அதிமுக பிரமுகர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சில அரசியல் கட்சிகள் இனி தங்கள் விழாக்களில் பேனர்களை வைக்கக் கூடாது என தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சினிமா உலகிலும் இது தொடர்பான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பேசும்போது.. நான் 30 வருடங்களுக்கு முன்பே கட் அவுட் பேனர்களை வைக்க கூடாது என என் ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

அதுபோல் பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேனர்கள் வைக்க கூடாது என விஜய்யும் தெரிவித்துள்ளார்.

காப்பான் பட பிரஸ் மீட்டில் கலந்துக் கொண்ட நடிகர் சூர்யாவும் ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கு மாறாக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Fans must ban flex banners says Kamal Vijay Suriya

‘தர்பார்’-க்கு பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிக்கு ஆரி கோரிக்கை

‘தர்பார்’-க்கு பேனர் வைக்கக் கூடாது.. ரஜினிக்கு ஆரி கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aari request to Actors to avoid Flex banners on their movie releaseகாதல் அம்பு படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது

இயக்குநர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகம்.மற்றும் அனைவரின் முயற்சியில் ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்திருக்கிறோம் என்றார்.

ஜாக்குவார் தங்கம் பேசும்போது,

வந்தோரை வாழ வைக்கும் தமிழகம் என்ற கூற்றுக்கேற்ப சினிமாவிற்கு வரும் அனைவரையும் ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இயக்குநர் பேரரசு விரைவில் விஜய்யுடன் ஒரு படத்தை இயக்கப் போகிறார். நடிகர் ஆரியின் சமூக சேவையைப் பாராட்டுகிறேன்.

மேலும், மதுபானம் குடிப்பது போல படம் எடுக்க வேண்டாம் என்று இயக்குநர் பிரவீனுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இப்படம் வெற்றியடைய வேண்டுமென்று படக்குழுவினரை வாழ்த்துகிறேன்.

நடிகர் ஆரி பேசும்போது,

இப்படத்தில் நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகங்கள். இவர்களைப் போல் இன்னும் நிறைய பேர் வரவேண்டும்.

இரண்டு மூன்று நாட்களாக, கவின் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று அந்நிகழ்ச்சியைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர்.

ஆனால், இந்த விஷயங்களைத் தாண்டி நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அது சுபஸ்ரீயின் மரணம் தான். யாருக்கோ வைத்த பேனர் அது காற்றடித்ததில், அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து, விபத்துக்குள்ளாக்கி இறந்துவிட்டார்.

இந்த விபத்திற்குப் பிறகு திமுக-வின் தலைவர் மு.க.ஸ்டாலின் இனிமேல் எங்கள் கட்சி விழாவிற்கு பேனர் வைக்கமாட்டோம் என்று கூறியிருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் நான் ஆதரிப்பேன். அவர்களுக்கு ஓட்டுப் போடுவேன்.

அதேபோல், சினிமாத்துறை சார்ந்தவர்களும் பேனர் வைக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்கக்கூடாது என்று அவர் கூறினால் நன்றாக இருக்கும் என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

ஒளிப்பதிவாளர் தமிழனாக இருந்தாலும் கன்னடத்தில் 3 படங்கள் பணியாற்றியிருக்கிறேன், தமிழில் இதுதான் முதல் படம். பிறமொழி திரைப்படங்களிலும் பணியாற்றுங்கள், பிறமொழிகளில் வெற்றிப்பெற்றால் வியாபார வெற்றி தான். தாய்மொழியில் வெற்றியடைவது தான் ஆத்ம திருப்தி தரும்.

இயக்குநர் பிரவீன் வெளிப்படையாக பேசினார். ஆள் பார்க்க சிறிய பையனாக இருந்தாலும், சினிமா அறிவு நிறைய இருக்கிறது. ‘இன்று போய் நாளை வா’, ‘காதலிக்க நேரமில்லை’ என்று காதலை நகைச்சுவையாகக் கூறிய படங்கள் வெற்றியடைந்திருக்கிறது. அதேபோல், இப்படமும் வெற்றியடையும்.

இப்போது கா எந்த காரணமாக இருந்தாலும் மது அருந்துவது தான் இப்போதுள்ள கலாச்சாரம் என்று எல்லோர் மனதிலும் பதிந்து விட்டது. ஆகையால், இதுபோன்ற காட்சிகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளைவிட சினிமாக்காரர்களுக்கு பொறுப்பு அதிகம்.

அரசியல்வாதிகள் டாஸ்மாக் கடையைத் திறந்தால், சினிமாக்காரர்களான நாம் அதை மூட வைப்போம் என்றார்.

இப்படத்தின் சிறப்பு விருந்தினர்களாக ‘ஜூனியர்’ பாலையா, பி.ஆர்.ஓ. பெருத்துளசி பழனிவேல், பி.ஆர்.ஓ. விஜய முரளி ஆகியோர் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

‘காதல் அம்பு’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ஸ்ரீனிவாச நாயுடு, பரத், கிரண், ரேஷ்மா, மணீஷ், அஸ்வினி, நேஹா, தேஜு, ஆதிரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – விக்னேஷ் நாகேந்திரன், இசை – சன்னி டான், படத்தொகுப்பு – சுரேஷ் பாபு, இணை தயாரிப்பு – நவீன் குமார், தயாரிப்பு – Dr. எம்.டி.சுரேஷ் பாபு, தயாரிப்பு நிறுவனம் – MDPC கிரியேஷன்ஸ் அண்டு ப்ரோடுக்ஷன்ஸ்.

விழாவின் இறுதியில், ‘காதல் அம்பு’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது.

Aari request to Actors to avoid Flex banners on their movie release

Aari request to Actors to avoid Flex banners on their movie release

‘ஆண்கள் ஜாக்கிரதை’ சூட்டிங்கில் நுழைந்த அமானுஷ்யம்

‘ஆண்கள் ஜாக்கிரதை’ சூட்டிங்கில் நுழைந்த அமானுஷ்யம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aangal Jaakirathai Movie shooting spot updatesஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் “ஆண்கள் ஜாக்கிரதை“

இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ரோஜா, ஐஸ்வர்யா பழனி, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் முத்து மனோகரன் கூறியதாவது…

இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம்.

இந்த படத்திற்காக புதுக்கோட்டையில் ஒரு பழைய பங்களாவில் இரவு நேரத்தில் திகிலான காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கும் போது அந்த பங்களாவில் உண்மையான சில அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்த கதாநாயகிகள் எங்களுக்கு பயமாக இருக்கிறது நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டனர்.

அதன் பிறகு அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லி புரியவைத்து நடிக்க வைத்தோம். முதலில் அப்படி சொன்ன இயக்குனர் படப்பிடிப்பு முடிந்தவுடன் நானும் அதை உணர்ந்தேன் என்று ஒரு வித பயத்துடன் கூறினார். ஷூட்டிங் நடப்பதை பார்க்க அந்த ஊர்மக்களே வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வழக்கமாக பேய் படங்களில் வரும் பங்களாவில் கதவு, ஜன்னல் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இதல் வித்தியாசமான காட்டவேண்டும் என்பதற்காக அந்த பங்களாவில் இருந்த கதவு, ஜன்னல்கள் அனைத்தையும் பல லட்சம் செலவு செய்து அப்புறபடுத்தி, பின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டு வைத்துக் கொடுத்தோம்.

கதவு, ஜன்னல்கள் இல்லா பேய்படம் இது. ராஜா காலத்து பங்களா என்பதால் அனைத்தும் தேக்கு மரங்களால் வைக்கப்பட்டிருந்தன.

முழுக்க முழுக்க இரவு நேரத்தில் மட்டும் தான் அந்த பங்களாவில் படப்பிடிப்பை நடத்தினோம். இது மிரட்டலான திரில்லர் படம் மட்டுமல்லாமல் இன்றைய இளைய சமுதாயத்தின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் படமாக இந்த ஆண்கள் ஜாக்கிரதை இருக்கும் என்றார் இயக்குனர் K.S.முத்துமனோகரன்.

சுஜி ஜீசஸ் பிலிம்ஸ் செந்தில்குமார் படத்தை பிரமாண்டாமான முறையில் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

ஒளிப்பதிவு – M.P.சிவகுமார்
இசை – பாலகணேஷ்
எடிட்டிங் – G.V.சோழன்
விளம்பர வடிவமைப்பு – அயனன்
இணை தயாரிப்பு – க.முருகானந்தம்.
தயாரிப்பு – ஜெமினி ராகவா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – K.S.முத்துமனோகரன்

Aangal Jaakirathai Movie shooting spot updates

Aangal Jaakirathai Movie shooting spot updates

விளையாட்டுத் துறையில் ஜாதி அரசியலை சொல்கிறதா ‘யார்க்கர்’.?

விளையாட்டுத் துறையில் ஜாதி அரசியலை சொல்கிறதா ‘யார்க்கர்’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Antony fame Nishanth starring Yorker directed by Naveedhஆண்டனி, பன்றிக்கு நன்றி சொல்லி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நாயகன் நிஷாந்த்.

இவர் தற்போது நடித்து வரும் படத்திற்கு யார்க்கர் எனத் தலைப்பிட்டுள்ளனர்.

நவீத் எஸ் பரீத் என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு ‘துப்பறிவாளன்’ புகழ் அரோல் கரோலி இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில் நாயகன் நிஷாந்த் பிராமணர் போல பூநூல் அணிந்துள்ளார். மேலும் கையில் கிரிக்கெட் பந்தை வைத்துள்ளார்.

ஆகவே இது ஜாதியை சொல்லும் விளையாட்டு பற்றிய படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையில் ஜாதி அரசியல் தலையீட்டு குறித்த படங்கள் ரிலீசாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Antony fame Nishanth starring Yorker directed by Naveedh

More Articles
Follows