ஹவுஸ் ஓனர் பற்றி ‘பசங்க’ கிஷோர்

ஹவுஸ் ஓனர் பற்றி ‘பசங்க’ கிஷோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project‘பசங்க’ படத்தில் அழகான, தனது தீங்கற்ற இயல்புடைய கதாபாத்திரத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே இரவில் உறுப்பினராகி, அதைத் தொடர்ந்து ‘கோலி சோடா’ படத்தில் டீனேஜ் பையனாக அவதாரம் எடுத்தவர் கிஷோர். இந்த படங்களின் மூலம் புகழ்பெற்ற கிஷோர், தற்போது லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு முதிர்ச்சியடைந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் வரும் ஜூன் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

ஒரு நடிகராக படங்களை தேர்ந்தெடுப்பதில் ஒருபோதும் அவசரப்படாத கிஷோர், இந்த படம் தனக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதைப் பற்றி பேசுகிறார். அவர் கூறும்போது, “பசங்க, கோலி சோடா மற்றும் சகா போன்ற திரைப்படங்களின் மூலம் சில அங்கீகாரங்களை பெற்றதால், எனது திரைப்படங்களை நான் கொஞ்சம் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை போலத் தோன்றலாம், ஆனால் வித்தியாசமான மற்றும் தனித்துவமான ஸ்கிரிப்ட்கள் மட்டுமே, ஒரு நடிகராக என் பயணத்தை மேலும் அடுத்த கட்டத்துக்கு தள்ளும் என்று நான் நம்புகிறேன். இந்த நேரத்தில், “ஹவுஸ் ஓனர்” எனக்கு ஒரு ஆசீர்வாதமாக வந்தது, என்னை தேர்ந்தெடுத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் மேடத்திற்கு நன்றி. நான் உண்மையில் வியப்பது அவரின் பார்வை. படத்தை தொடங்குவதற்கு முன்பே, ஒவ்வொரு கதாபாத்திரமும் எவ்வாறு இருக்க வேண்டும், எப்படி வரும் என்பது பற்றி அவருக்கு முழுமையாக தெரியும். அவரின் இத்தகைய உறுதி தான், எங்களால் முடிந்ததை சிறப்பாகச் செய்ய வைத்தது. படத்தில் நடிப்பதற்கு சில கடினமான காட்சிகளும் இருந்தன, ஆனால் லக்‌ஷ்மி மேடம் மிக நுணுக்கமாக நடித்து காட்டி, எங்கள் வேலையை மேலும் எளிதாக்கினார். “ஹவுஸ் ஓனர்” படத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எதிர்காலத்தில் அவருடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன், அதன் மூலம் அவரிடமிருந்து அதிக நடிப்பு திறன்களை பெற முடியும்” என்றார்.

தனக்கு ஜோடியாக நடித்த நடிகை லவ்லின் சந்திரசேகரை பற்றி அவர் கூறும்போது, “அவர் சந்தேகத்திற்கு இடமின்றி தமிழ் சினிமாவின் கவர்ச்சிகரமான ஈர்ப்பாக இருக்கப் போகிறார். அவரின் கதாபாத்திரத்தில் அவர் நுழைந்த விதம் நம்பமுடியாதது” என்றார்.

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள இந்த “ஹவுஸ் ஓனர்” திரைப்படம், சென்னையின் பேரழிவு வெள்ளத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட, சில நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. இப்படத்திற்கு கிருஷ்ணா சேகர் டி.எஸ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தபஸ் நாயக் சித்திர உணர்வை மிக துல்லியமான ‘ஒலி’ மூலம் அலங்கரிக்கிறார். கார்க்கி மற்றும் அனுராதா பாடல்களை எழுதியுள்ளனர், சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த படத்தை, ஏஜிஎஸ் சினிமாஸ் ஜூன் 28 அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.

நாயகி கிடையாது; ஆனால் ஏழு பாடல்கள்? வித்தியாசப் பயணத்தில் ’சென்னை பழனி மார்ஸ்’

நாயகி கிடையாது; ஆனால் ஏழு பாடல்கள்? வித்தியாசப் பயணத்தில் ’சென்னை பழனி மார்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (13)விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் – ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸூடன் இணைந்து ‘சென்னை பழனி மார்ஸ்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பிஜூ.

இந்தப் படத்தில் முற்றிலும் புதிய களம், புதிய கதை என நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். இந்த படம் குறித்த தகவல்களை படக்குழுவினருடன் இணைந்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் பிஜூ.

நான்கு சண்டைக்காட்சிகள் கொண்ட படம், ஹீரோயிஸமான படங்களும் இங்கு வேண்டும். ‘சென்னை பழனி மார்ஸ்’ மாதிரி புதுமுகங்கள் நடித்த படங்களும் வேண்டும். எல்லாவிதமான படங்களும் வரும்போதுதான் மக்களுக்கு சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆவல் வரும்.

நண்பர்கள் இருவர் சேர்ந்து சென்னையிலிருந்து பழனி வழியாக மார்ஸ் போகமுடியுமான்னு முயற்சி பண்றாங்க. அது ஒரு தந்தையின் கனவாக இருந்தது. தந்தையைத் தொடந்து அவரது பையன் அந்தக் கனவை நூல் பிடித்துப் போகிறான்.

அவனுடன் நண்பனும் சேர்ந்துகொள்ள பயணம் சென்னையிலிருந்து பழனியை நோக்கித் தொடங்குகிறது.

இவர்களின் கனவும், பயணமும் மற்றவர்களால் எப்படி பார்க்கப்படும்? என்னென்ன சுவாரஸ்யங்கள் நடக்கும்? அதில் உள்ள காமெடியும்தான் படமே. அவர்கள் மார்ஸ் போனார்களா என்பது கிளைமாக்ஸ்.

ஒளியின் பயண வேகம் மணிக்கு பல லட்சம் கிலோ மீட்டர் என்று சொல்லுவார்கள்.. அந்த வேகத்தில் பயணித்தால் கூட இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சில பகுதிகளை சென்று அடைவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டு உள்ளார்கள்.. அதுமட்டுமன்றி ராமாயணத்தில் வந்த புஷ்பக விமானம் பற்றி படித்தபோதும் இவை எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஒரு படமாக உருவாக்கும் எண்ணம் தோன்றியது.. அதன் விளைவாக உருவானது தான் இந்தக் கதை.

மார்ஸை நோக்கிய பயணம் என்பதால் இது சயின்ஸ் பிக்சன் படமோ அல்லது கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த காலச்சக்கர பயணம் குறித்த படமோ அல்ல.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும் இல்லையா..? சிலரிடம் அதை சொன்னால் நம்ப கூட மாட்டார்கள்..

ஆனால் நமது கனவை நோக்கி விடாமுயற்சியுடன் முயற்சித்தால் அதை அடையலாம் என்பதை தான் இந்த படத்தின் மூலம் சொல்ல முயற்சித்து இருக்கிறோம்.. முனிவர்கள் சித்தர்கள் காலத்திலேயே இப்படி எண்ணங்கள் மூலமாக பயணம் செய்திருக்கும் நிறைய செய்திகள் உண்டு.. ராவணன் நினைத்ததும் புஷ்பக விமானம் வந்து நின்றதாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.. இங்கே புஷ்பக விமானம் என்பது கூட அவரது சிந்தனை தான்..

பத்திருபது வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ் மூலமாக உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இன்னொரு நபருக்கு செய்தி அனுப்ப முடியும் என சொல்லி இருந்தால் நீங்கள் நம்பி இருப்பீர்களா..? ஆனால் அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது.. கனவு ஜெயிக்க வேண்டுமென்றால் அதை நோக்கி தொடர்ந்து பயணப்படுங்கள் என்பதையே இப் படம் உங்களுக்கு செய்தியாகச் சொல்லும்.

பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தக் கதைக்கு கதாநாயகி தேவைப்படவில்லை..ஒரு பாடகர் இருப்பதால் ட்ராவல் படம் என்பதால் மொத்தம் ஏழு பாடல்கள் இருக்கின்றன. சில பாடல்கள் மாண்டேஜ் காட்சிகளாக இருக்கும்.

பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியிருக்கிறார்.. நிரஞ்சன் பாபு இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.. படத்தின் மூன்று பாடல்களை நாயகர்களில் ஒருவரான ராஜேஷ் கிரி பிரசாத்தே பாடியுள்ளார். இந்தப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதால் நடிப்பு பயிற்சிக்காக கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் ஒர்கஷாப் நடத்தினோம்..

ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இன்றைய காலகட்டத்தில் ரிலீஸ் செய்வது என்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.. இந்த படத்தின் கதை பற்றி ஏற்கனவே நடிகர் விஜய்சேதுபதிக்கு நன்கு தெரியும்..

இந்தபடம் நல்லபடியாக வெளிவரவேண்டும் என்பதற்காக ஒரு நண்பராக, ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு எனக்கு பட வெளியீட்டு பணிகளில் மிகுந்த உதவியாக இருந்து வருகிறார். ஒரு சீனில் கூட விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கவில்லை

ஆடியோ வெளியாகி உள்ளது.. படம் வரும் ஜூலை மாதத்தில் வெளியாக இருக்கிறது” எனக் கூறினார் இயக்குநர் பிஜூ .

நிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை எழுதியுள்ளார் விக்னேஷ் ஜெயபால். இசை : நிரஞ்சன் பாபு (அறிமுகம்)
பாடல்கள் : விக்னேஷ் ஜெயபால்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் ; பிஜு
வசனம் : விஜய் சேதுபதி
தயாரிப்பு: விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் & ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ்

ஜீவி ஒரு பேண்டஸி-த்ரில்லர் – நடிகர் வெற்றி

ஜீவி ஒரு பேண்டஸி-த்ரில்லர் – நடிகர் வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (12)ஒரு நடிகர் வெற்றியாளராக மாறுவதற்கான யதார்த்தமான காரணி, அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு உண்மையில் அவசியமான பொருத்தமான நடிப்பை வழங்குவது தான். இது தான் கதையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு பிரமிக்க வைக்கும் நடிப்பு தான் நடிகர் வெற்றியினுடையது. “8 தோட்டாக்கள்” படத்தில் அவரது இயல்பான நடிப்பின் சிறப்பம்சமாக மிகவும் கவனிக்கப்பட்டது. தற்போது “ஜீவி” படத்தில் வெற்றியின் மாறுபட்ட நடிப்பு, அதன் காட்சி விளம்பரங்கள் மூலம் பெரிதும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்துவமான பாணியில் அமைந்த அவரின் வசன உச்சரிப்பு, அவரது உடல்மொழி, நுணுக்கமான நடிப்பின் ஒவ்வொரு அம்சமும் அனைவரையும் ஈர்க்கிறது. ஒரு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திரைப்படம், ஜூன் 28, 2019 அன்று வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் வெற்றி தேர்ந்தெடுத்த காரணத்தையும், எது அவரை ஈர்த்தது என்பது பற்றியும் கூறுகிறார்.

அவர் கூறும்போது, “முதல் மற்றும் முக்கியமான விஷயம், இந்த ஸ்கிரிப்ட், நாம் ஒருபோதும் பார்த்திராத அல்லது கேள்விப்படாத கான்செப்டை கொண்டிருந்தது. என்னை பொருத்தவரை, “ஜீவி” படத்தை நான் ஒரு ‘பேண்டஸி-த்ரில்லர்’ என்று கூறுவேன். ஆனால் சிறப்புத் திரையிடலில் படத்தை பார்த்தவர்களால் அதைத் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் படம் கொண்டிருந்த புதிய மற்றும் தனித்துவமான கூறுகளால் மிகவும் உற்சாகமடைந்தனர். அடுத்து என்னை கவர்ந்த விஷயம் எனது கதாபாத்திரம், இது “8 தோட்டாக்கள்” படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. உண்மையில், நான் பல்வேறு கதைகளை கேட்டேன், ஆனால் அவை எல்லாமே ஒரே மாதிரியாக, என் அறிமுக படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் போலவே இருந்தது. ஆனால் இது மிகவும் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது” என்றார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கரை ஒரு ஆச்சரியமான அவதாரத்தில் அவரது அறிமுகப் படம் 8 தோட்டாக்கள் காட்டியிருந்தது. அந்த மாதிரி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் ஏதும் ஜீவியில் இருக்குமா? எனக் கேட்டதற்கு, வெற்றி கூறியதாவது, “உண்மையில், அதுபோன்ற ஒப்பீடுகளை என்னால் இங்கு கொண்டு வர முடியவில்லை. உண்மையில், ரோகிணி மேடம் போன்ற மூத்த கலைஞர்களின் மிகச்சிறந்த நடிப்பை பார்த்து எனக்கு பேச்சே வரவில்லை. ஜீவி படப்பிடிப்பில் இருந்த எல்லோரிடம் இருந்தும் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஒரு குறிப்பிட்ட காட்சியில் ரோகிணி மேடம், கிளிசரின் பயன்படுத்தாமலேயே கண்ணீர் விட்டு நடித்தார். அதுபோன்ற நிகழ்வுகள் எனக்கு மயிற்க்கூச்செரியும் தருணமாக அமைந்தது. ஸ்கிரிப்டை விவரிக்கும் போதே, இயக்குனர் வி.ஜே.கோபிநாத், ஒரு தயாரிப்பாளராக ‘மணி’ கதாபாத்திரத்தை தவிர வேறு எந்த கதாபாத்திரத்துக்கும் கலைஞர்களை நீங்கள் பரிந்துரைக்கலாம் என வெளிப்படையாக சொன்னார். ஏனெனில் கதாசிரியர் பாபு தமிழ் முன்னரே நடிகர் கருணாகரன் மட்டுமே இந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய முடியும் என தீர்மானித்திருந்தார். எனவே, படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் வலுவான மற்றும் கணிசமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன், வி சுடலைக்கண் வெள்ளபாண்டியன், சுப்ரமணியம் வெள்ளபாண்டியன் தயாரித்திருக்கும் இந்த படத்தை விஜே கோபிநாத் இயக்கியிருக்கிறார். பாபு தமிழ் கதை எழுதியிருக்கிறார். வெற்றி, மோனிகா சின்னகோட்ளா, அஷ்வின் சந்திரசேகர், ரோகிணி, கருணாகரன், ரமா, மைம் கோபி, தங்கதுரை மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஐரா புகழ் சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைத்திருக்கிறார். பிரவீன் குமார் ஒளிப்பவு செய்ய, பிரவீன் கேஎல் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் பி.எஸ். ஸ்வாமிநாதன் காலமானார்.!

பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் பி.எஸ். ஸ்வாமிநாதன் காலமானார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)பிரபல தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான பிரமிட் சாய்மிரா ஸ்வாமிநாதன் அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் உயிர் நீத்தார். இவரது மனைவி பெயர் உமா ஸ்வாமிநாதன் மற்றும் இவருடைய மகள் தற்போது மருத்துவம் படித்து வருகிறார். இவருக்கு இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் இறுதி சடங்கு நடக்கவுள்ளது.

இவரது நிறுவனம் 2000 களில் தமிழ் சினிமா, இசை மற்றும் பொழுதுபோக்கு காட்சிகளில் தனக்கென நிரந்தர இடம் பிடித்த ஒன்று.
இவரது நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டு ‘கண்ணாமூச்சி ஏனடா’ என்ற படத்தை யூடிவி, ராடன் மீடியாவுடன் இணைந்து தயாரித்தார், மற்றும் ‘மொழி’ படத்தை விநியோகம் செய்துள்ளார். பின்னர் ஸ்பை த்ரில்லர் படமான முக்பீர் (2008) ஐ இந்தியில் தயாரித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘குசேலன்’, தளபதி விஜய்யின் ‘அழகிய தமிழ் மகன்’, அஜித்தின் ‘பில்லா’, ஜோதிகாவின் ‘மொழி’, மாதவனின் ‘எவனோ ஒருவன்’, ஆர்யாவின் ‘நான் கடவுள்’ போன்ற வெற்றி படங்களை விநியோகம் செய்திருக்கிறார். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படத்தை தயாரித்து, விநியோகம் செய்துள்ளார்.

சிவி குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் எஸ் பி கார்த்திக் இயக்கத்தில் ‘இன்று நேற்று நாளை 2’

சிவி குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் எஸ் பி கார்த்திக் இயக்கத்தில் ‘இன்று நேற்று நாளை 2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குனர் எஸ் பி கார்த்திக் இயக்கத்தில், திருகுமரன் எண்டர்டயின்மெண்ட்ஸ் சார்பாக சிவி குமார் தயாரிக்கிறார்.

முண்டாசுபட்டி மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் துணை – இணை இயக்குனராக பணியாற்றிய எஸ் பி கார்த்திக் இப்படத்தின் இயக்குனராக உயர்ந்திருக்கிறார்.

இப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ஆர். ரவிக்குமார், அதன் இரண்டாம் பாகத்திற்கு கதை, திரைகதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார்.

‘சூது கவ்வும், தானா சேர்ந்த கூட்டம், மிஸ்டர். லோக்கல்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் செப்டம்பர் மாதத்தில் துவங்கவிருக்கிறது.

இப்படத்தை எதிர்வரும் 2020 கோடை விடுமுறை காலத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

லயன் கிங் ரிலீஸால் விலகி ஓடும் சூப்பர் ஸ்டார் ரஜினி

லயன் கிங் ரிலீஸால் விலகி ஓடும் சூப்பர் ஸ்டார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிசாக்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்த படம் 2.0.

லைக்கா நிறுவனம் 500 கோடியில் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இப்படம் இந்தியாவில் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும், எவருக்கும் நஷ்டத்தை தரவில்லை.

இந்த நிலையில் இப்படம் வருகிற ஜூலை 12ல் சீனாவில் வெளியாகவுள்ளது.

இதன் வெளியீட்டு உரிமத்தை ஹெச் ஒய் மீடியா என்ற நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.

நாளை ஜூன் 28ம் தேதி சிறப்பு காட்சியும், ஜூலை 12ல் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவில் ஹாலிவுட் படமான லயன் கிங் வெளிவருவதால் 2.0 புரோமோசன் பணிகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த லயன் கிங் கார்டூன் படமாக வந்தபோதே சீனாவில் வசூலை வாரிக்குவித்த படமாம். எனவேதான் ரஜினி படத்திற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows