உலகத் திரைப்படத் திருவிழாவில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் !

உலகத் திரைப்படத் திருவிழாவில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

House owner movie stillsலக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஹவுஸ் ஓனர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சினிமா உலகினரிடையே நல்லதொரு பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. படத்தின் வெளியீட்டின் போது விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்று அனைவரையும் கவர்ந்தது. சென்னை வெள்ளத்தின் தாக்குதல் பின்னணியில் மாட்டிக்கொண்ட முதிய தம்பதியரின் காதலை, அழகோடும் அன்பாகவும் சொன்ன “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என உருவாக்கத்திலும் சிறந்து விளங்கியது. மிகச் சிறந்ததொரு படைப்பாக பாராட்டப்பட்ட இப்படத்திற்கு தற்போது மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. IFFI 2019 உலகத் திரைப்பட திருவிழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதுமாக இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 திரைப்படங்களில் ஒன்றாக “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொத்தப் படக்குழுவும் படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவத்தால் உற்சாகத்தில் உள்ளது.

இத்திரைப்பட விழாவிற்கு படம் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியதாவது….

இது முற்றிலும் நான் எதிர்பாராத ஒன்று. மிகுந்த ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் ஒருங்கே அளித்திருக்கிறது. இந்த நேரத்தில் பட வெளியீட்டின் போதே படத்தை வெகுவாக பாராட்டிய பத்திரிகை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். எனது திரைப்படத்தின் மீதான காதலையும் அதன் மீதான என் ஆர்வத்தையும் இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கத்தை தந்து மேலும் மேலும் பயணிக்கும் தெம்பை தந்துள்ளது. இந்நேரத்தில் IFFI அமைப்பினருக்கு எனது மிகப்பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 25 திரைப்படங்களுக்கும், 15 குறும்படங்களுக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழில் தன் தனித்திறமையால் மிகப்பெரும் சாதனைப் படைப்பாக உருவாகியிருக்கும் பார்த்திபன் சாரின் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு இந்தியன் பனோரமாவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மிகுந்த பெருமைகொள்கிறேன் என்றார்.

“ஹவுஸ் ஓனர்” திரைப்படம் சென்னை வெள்ளத்தின் பின்னணியில் முதிய தம்பதிகளின் காதல் நினைவுகளூடாக அன்பை சொல்லும் படமாக, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணண் இயக்கத்தில் உருவாகியிருந்தது. அவரது கணவர் ராமகிருஷ்ணன் இப்படத்தினை தயாரித்திருந்தார். கிஷோர், ஶ்ரீரஞ்சனி, பசங்க புகழ் கிஷோர், மற்றும் லவ்லின் சந்திரசேகர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இவ்வாண்டில் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது

தன் மகனை நாயகனாக களமிறக்கும் தங்கர் பச்சான். “டக்கு முக்கு டிக்கு தாளம்” இன்றோடு படபிடிப்பு முடிவடைகிறது.

தன் மகனை நாயகனாக களமிறக்கும் தங்கர் பச்சான். “டக்கு முக்கு டிக்கு தாளம்” இன்றோடு படபிடிப்பு முடிவடைகிறது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thangar bachanகிராமத்துப் பின்னணியையும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தையும் தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் தங்கர் பச்சான், சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார். அப்படத்திற்கு ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ (Takku Mukku Tikku Thalam) என்று பெயரிடப்பட்டுள்ளது. பல முன்னணி கதாநாயகர்களை மாறுபட்ட பாத்திரத்தில் காண்பித்த தங்கர் பச்சான் இப்படத்தின் மூலம் தனது மகன் விஜித் பச்சானைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். முதல் படத்திலேயே தன் மகனை நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னை நகரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படமென்பதால் சென்னை சுற்றிலுமுள்ள பல்வேறு பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. 70 நாட்கள் ஆன நிலையில் இன்றுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.

இப்படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள்.

விஜித் பச்சான் நாயகனாக நடிக்க, மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கவிருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தங்கர் பச்சான்
இசை – தரண்குமார். ஒளிப்பதிவு – பிரபு, தயாளன், சிவபாஸ்கரன் படத்தொகுப்பு – சாபு ஜோசப்
கலை – சக்தி செல்வராஜ்,
நடனம் – தினேஷ், சண்டைப்பயிற்சி – ஸ்டன்ட் சில்வா தயாரிப்பு நிறுவனம் – பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்.

‘கைதி’ மல்டி ஸ்டார் படம்; எனக்கு சின்ன ரோல்தான்.. கார்த்தி

‘கைதி’ மல்டி ஸ்டார் படம்; எனக்கு சின்ன ரோல்தான்.. கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi in kaithiகார்த்தி நடிப்பில் Dream Warrior Pictures சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “கைதி”.

மாநாகரம் படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் CS இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கார்த்தி பேசியதாவது…

உதவி இயக்குநராக இருக்கும்போது நாம சில படங்கள் செய்யனும்னு நினைக்கிற மாதிரி படங்கள் நமக்கு எப்போதாவது தான் வந்து சேரும். மெட்ராஸ், தீரன் அந்த மாதிரி தான் “கைதி”. ஒரு களத்தில போய் அந்தக் கேரக்டர தெரிஞ்சிக்கிட்டு பண்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப்படத்தில் நிறைய சவால்கள் இருப்பது தெரிஞ்சது அத ஆசைப்பட்டு செஞ்சிருக்கேன். லோகேஷ் ஆடியன்ஸ்க்கு படம் எப்படி கொடுக்கனும்னு தெரிஞ்ச டைரக்டர்.

இதில எந்தளவு புதுசா பண்ண முடியுமோ பண்ணுங்கன்னு சொன்னேன். அத மொத்த டீமும் பண்ணியிருக்காங்க. முழுக்க முழுக்க நைட்ல ஷீட் பண்ணிருக்கோம். இதில நிறைய ஆக்‌ஷன் பண்ணிருக்கேன். இந்தப்படத்தில நரேன் கூட நடிச்சது சந்தோஷமான விசயம்.

எப்போதும் வாழக்கையில எத வேணாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர் அவர். இந்தப்படத்தில எல்லோரும் அவ்வளவு நேர்த்தியா உழைச்சிருக்காங்க.

ஒவ்வொரு கேரக்டரும் இந்தப்படத்தில வித்தியாசமா இருக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு பகுதி தான். இது ஒரு மல்டி ஹீரோ படமா இருக்கும். எல்லோருக்குமான பகுதி சரியா அமைஞ்சிருக்கு. படம் முழுக்க ஆக்‌ஷன் தான். ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் வீட்டுக்கே போகல.

எனக்கு லாரி ஓட்டறது ரொம்ப பிடிக்கும் அதுவும் இந்தப்படத்தில எனக்கு பழைய லாரிய கொடுத்துட்டாங்க. லாரி ஓட்டறது எவ்வளவு கஷ்டம்னு அப்பத்தான் தெரிஞ்சது.

எனக்கு ஆக்‌ஷன் படம்னாலே ரொம்பவும் பிடிக்கும் இந்தப்படம் முழுக்கவே ஆக்‌ஷனா அமைஞ்சிருக்கு. இந்தப்படத்தில் நிறைய விசயங்கள் புதுசா கத்துக்க முடிஞ்சது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். எல்லோருக்குமே பெரிய பேர் வாங்கித் தரும். ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் நன்றி என்றார்.

‘பிழை’ படத்தில் நிகில் முருகன் பாராட்டைப் பெற்ற ‘திடீர் தளபதி’ சதீஷ்

‘பிழை’ படத்தில் நிகில் முருகன் பாராட்டைப் பெற்ற ‘திடீர் தளபதி’ சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pizhai movie trailer released by Dir AR MurugadossTurning Point ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தாமோதரன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பிழை’

இப்படத்தில், மைம் கோபி, சார்லி, ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லரை தர்பார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டார்.

இந்த படத்தில் பிரபல பிஆர்ஓ நிகில் முருகன் அவர்களின் பாராட்டைப் பெற்ற திடீர் தளபதி சதீஷ் என்பவர் அறிமுகமாகிறார்.

இக்காலகட்டத்திற்கு தேவையான ஒரு தகவலோடு படம் உருவாகியுள்ளதாம்.

பள்ளி மாணவர்களின் வாழ்வியலை பற்றிய இந்த பட டிரைலர் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

இதனால், அனைத்து தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

Pizhai movie trailer released by Dir AR Murugadoss

ஒளிப்பதிவு மேதை P C ஶ்ரீராமுடன் இணைந்த “தும்பா” பட இயக்குநர் ஹரீஷ் ராம்

ஒளிப்பதிவு மேதை P C ஶ்ரீராமுடன் இணைந்த “தும்பா” பட இயக்குநர் ஹரீஷ் ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PC Sri ramஇந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக போற்றப்படும் P C ஶ்ரீராம் சில வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இம்முறை அவர் NAC ஜிவல்லர்ஸ்க்கான விளம்பரபடத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்ற “தும்பா” படத்தின் இயக்குநர் ஹரீஷ் ராம் இந்த விளம்பரபடத்தை இயக்கியுள்ளார். P C ஶ்ரீராமுடன் வேலை செய்தது தன் வாழ்நாளில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு எனப்பெருமையாக கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது…

இது எனக்கும் எங்களது குழுவுக்கும் கிடைத்த மிகப்பெரும் கௌரவம். இரட்டை சந்தோஷம். விஷுவலில் மேஜிக் நிகழ்த்தும், இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களின் குருவாக விளங்கும் P C ஶ்ரீராம் சார் எங்களது குழுவுடன் இணைந்து பணியாற்றியது வாழ்நாளில் மறக்க முடியா பேரின்ப அனுபவம். புதிதாக இயக்குநராகும் ஒவ்வொருவருக்கும் அவருடன் பணியாற்ற வேண்டுமென்பதே கனவு. எனக்கு அந்தக் கனவு NAC ஜீவல்லர்ஸ் விளம்பர படம் மூலம் நிறைவேறியது நிறையவே மகிழ்ச்சியை தந்துள்ளது. அவரது ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிரூட்டியது மட்டுமன்றி திரை அனுபவத்தை வேறு வடிவத்திற்கு உயர்த்தி சென்றிருக்கிறது. அப்பா மகளுக்கான உறவை அழகுறச் சொல்லும் விளம்பரத்தின் உணர்வின் வடிவத்தை ஒளிப்பதிவால் சிறப்பாக்கியிருக்கிறார். அவருக்கு நன்றி. மேலும் தங்கள் நடிப்பால் இதனை முழுமைப்படுத்திய நடிகை சமந்தாவிற்கும், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சாருக்கும் நன்றி. இந்த வாய்ப்பினை தந்து மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கிய NAC ஜிவல்லர்ஸ்க்கும் நன்றி.

AD Link:

Link : https://youtu.be/4SGmIZ0GoNw

ஆதிக்பாபு நடிப்பில் கிரைம் த்ரில்லராக உருவாகும் ‘குற்றம் புரிந்தால்’

ஆதிக்பாபு நடிப்பில் கிரைம் த்ரில்லராக உருவாகும் ‘குற்றம் புரிந்தால்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aadhik Babu staring Kuttram Purindhal is Crime thrillerஅமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் சுகந்தி ஆறுமுகம் தயாரித்திருக்கும் படம் ‘குற்றம் புரிந்தால்’.

அறிமுக இயக்குநர் டிஸ்னி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஆதிக்பாபு ஹீரோவாக அறிமுகமாகிறார். அர்ச்சனா, ‘நாடோடிகள்’ அபிநயா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம்ஸ், அருள் டி.சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

கே.எஸ்.மனோஜ் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கபிலன் மற்றும் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளனர். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எஸ்.பி.அஹமது படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்கான வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஹீரோ ஆதிக்பாபு, படம் மற்றும் தனது நடிப்பு பயணம் குறித்து நம்மிடையே பகிர்ந்துக் கொண்டது இதோ,

‘குற்றம் புரிந்தால்’ கிரைம் த்ரில்லர் ஜானர் படமாகும். பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக உருவாகியுள்ளது.

ஹீரோவின் மாமா பெண் அரசியல் செல்வாக்குமிக்க ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட, அதற்காக ஹீரோ அவர்களை பழிவாங்குவது தான் கதையாக இருந்தாலும், ஹீரோ வில்லன்களை பழிவாங்கும் முறை இதுவரை தமிழ் சினிமாவில் கையாளப்படாத புதிய வகை டெக்னிக்காக இருப்பதோடு, திரைக்கதை ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் அளவுக்கு சஸ்பென்ஸாக நகரும்.

கமர்ஷியல் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படமாக இருந்தாலும், படத்தின் இறுதியில் பாலியல் ரீதியாக பெண்கள் பாதிக்கப்படுவதும், அதில் இருந்து அவர்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும், என்பதையும் மெசஜாக சொல்லியிருக்கிறோம்.

எப்படி சினிமாவுக்குள் வந்தீர்கள்?

எனது சொந்த ஊர் கோயமுத்தூர். சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான நான், அது தொடர்பான வேலையில் இருந்தாலும், சிறு வயது முதலே நிறைய திரைப்படங்கள் பார்ப்பேன்.

இந்த நடிகர், அந்த நடிகர் என்றெல்லாம் இல்லாமல், வாரம் வாரம் வெளியாகும் புதுப்படங்களை உடனே பார்த்துவிடுவேன். இப்படி படம் பார்த்து பார்த்து எனக்குள்ளும் சினிமா ஆசை வளர்ந்துவிட்டது. ஒரு கட்டத்தில் சினிமாவுக்காக முயற்சி செய்ய தொடங்கினேன்.

சாதாரணமாக தொடங்கினாலும், சுமார் 8 வருடங்களாக வாய்ப்புக்காக பல நிறுவனங்களையும், பல சினிமா பிரபலங்களையும் சந்தித்திருக்கிறேன். பல நிறுவங்களுக்கு என் புகைப்படங்களையும் அனுப்புவேன். அப்படி என் புகைப்படங்களைப் பார்த்த அமராவதி பிலிம் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட வேடத்திற்காக என்னை தேர்வு செய்தார்கள்.

ஆனால், என்னை நேரில் பார்த்த இயக்குநர் டிஸ்னி, என்னை நடித்துக் காட்ட சொன்னார். நானும் அவர் சொன்னதை செய்தேன். உடனே அவர் என் கதையின் ஹீரோ இவர் தான். இவரைப் போல தான் இருக்க வேண்டும், என்று கூறி என்னையே ஹீரோவாக்கி விட்டார்.

அப்படியானால் நீங்கள் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தேடவில்லையா?

ஹீரோ, வில்லன் அப்படி எல்லாம் கிடையாது. நல்ல வேடத்தில் நடிக்க வேண்டும் அது தான் என் விருப்பம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், என்னையும் ரசிகர்களிடம் நடிகராக அந்த கதாபாத்திரம் கொண்டு சேர்க்க வேண்டும்.

அப்படி ஒரு கதாபாத்திரமாக இருந்தால் ஒரு காட்சியில் கூட நடிக்க தயார்.

சினிமாவுக்காக உங்களை எப்படி தயார்ப்படுத்தி கொண்டீர்கள்?

வேறு ஒரு தொழிலில் இருந்தாலும், எப்போதும் சினிமா மீது எனக்கு அதிகம் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வமே என்னை சினிமாவுக்கு தயார்ப்படுத்தி விட்டது.

அத்துடன், கடந்த 8 வருடங்களாக நான் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த போது, நான் சந்தித்தவர்கள், அவர்கள் என்னிடம் நடிகனாக எதிர்ப்பார்த்த விஷயங்களை நான் வெளிப்படுத்தியது, போன்றவைகளே என்னை சினிமாவுக்கான ஒருவனாக தயார்ப்படுத்திவிட்டது.

எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

முதலிலேயே சொன்னது போல தான், இப்படி தான் நடிக்க வேண்டும் என்பதில்லை. நல்ல வேடம் எப்படி இருந்தாலும் நடிப்பேன். ஆனால், எனக்கு நெகட்டிவ் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை.

அதிலும், எம்.ஆர்.ராதா போல வித்தியாசமான, குறிப்பாக அவரது ‘இரத்த கண்ணீர்’ போன்ற படங்களில் நடிக்க வேண்டும், என்று விரும்புகிறேன்.

இப்போது விஜய் ஆண்டனி, பகத் பாசில் ஆகியோர் நடித்து வரும் ஜானர் படங்களும் எனக்கு சூட்டாகும் என்று நினைக்கிறேன். அதனால், அதுபோன்ற கதைகள் அமைந்தால் சந்தோஷப்படுவேன். அதேபோல், பெண்களுக்கு பிடித்தமான கதைகளிலும், நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

‘குற்றம் புரிந்தால்’ படத்தில் உங்களது நடிப்பு குறித்த விமர்சனங்கள்?

படப்பிடிப்பு தொடங்கிய போது முதல் இரண்டு நாட்கள் சற்று தயக்கமாக இருந்தது. பிறகு இயக்குநர் டிஸ்னி சொல்லிக் கொடுத்ததை போல செய்தேன். அதன் பிறகு சகஜமாகிவிட்டேன்.

பிறகு எனது நடிப்புக்கு சுற்றியிருப்பவர்கள் கைதட்டும் அளவுக்கு நடிக்க தொடங்கிவிட்டேன். படம் முடிந்துவிட்டது. படத்தை பார்த்த அனைவரும் எனது நடிப்பை பாராட்டினார்கள்.

குறிப்பாக ”முதல் படம் நடிகர் போல அல்லாமல், ரொம்பவே பல படங்களில் நடித்த அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல நடித்திருக்கிறீர்கள்” என்று பாராட்டினார்கள். சண்டைக்காட்சிகளும் இயல்பாக வந்திருப்பதாக பாராட்டினார்கள்.

எதிர்கால திட்டங்கள்?

நிச்சயம் நல்ல நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பது தான் எதிர்கால திட்டம். ‘குற்றம் புரிந்தால்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படம் வெளியான பிறகே அடுத்தப் படம் குறித்து அறிவிப்பேன். தற்போது இரண்டு கதைகள் தேர்வு செய்து வைத்திருக்கிறேன்.

ஹீரோவாக மட்டும் இல்லாமல் நல்ல வேடமாக இருந்தால் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க ரெடி. கோவையில் இருந்து ரகுவரன் சார், சத்யராஜ் சார், பாக்யராஜ் சார் என பல நடிகர்கள் வந்து பிரபலமாகியிருக்கிறார்கள். அவர்கள் வழியில் நானும் தமிழக மக்கள் மனதில் நல்ல நடிகராக இடம்பிடிக்க வேண்டும் என்பதும் என் எதிர்கால திட்டம்.” என்று நம்பிக்கையோடு ஆதிக்பாபு பேசினார்.

Aadhik Babu staring Kuttram Purindhal is Crime thriller

More Articles
Follows