தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்தி ராம் இயக்கத்தில் பிஜு தயாரிப்பில் உருவான குறும்படம் தான் ‘சிதை’.
பெண்களின் உறுப்பு சிதைத்தலை மையமாகக் கொண்டு உருவான இந்தக் குறும்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
நேர்த்தியான வசனங்கள், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலும் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தது சிதை.
கடந்த மே 25ல்.. ‘சிதை’ படத்தின் முதல் பாகத்தின் பூஜை நடைபெற்றது.
‘சிதை’ குறும்படம் மூலம் இதுவரை உலகளவில் 380 விருதுகளை குவித்தவர் இயக்குனர் கார்த்தி ராம்.
தற்போது ‘சிதை’ முதல் பாகம் உருவாகியுள்ளது.
பிரபலங்கள் வாழ்த்திய ‘சிதை’ என்ற குறும்படம் தற்போது திரைப்படமாகி வருகிறது.
இயக்குனர் கார்த்திக்ராம் இயக்கத்தில் உருவாகும் ‘சிதை’ படத்தை
Anki production சார்பாக தன்ராஜ் தயாரிக்கிறார்.
படத்தின் நாயகனாக அறிமுகமாகிறார் நரேன் பாலாஜி. கதாநாயகியாக ஐஸ்வர்யா, வில்லனாக பிஜு, முக்கிய கதாபாத்திரத்தில் கிஷோர், மைதிலி, குழந்தை நட்சத்திரமாக
மிராக்கிளின் , லத்திகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ராஜா, சக்தி, ஜெகன், மனோஜ், வல்லரசு, ரவி
பூவரசன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொடைக்கானல் – பெருங்காடு என்ற கிராமத்தில் குறுகிய நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.
அந்த ஊர் மக்கள் அனைவரும் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.
இயக்குனர் – கார்த்திக் ராம்
நிர்வாக தயாரிப்பாளர் – கிஷோர் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
விரைவில் டைட்டிலும்
இசை வெளியீட்டு விழாவும் நடைபெறும்.
Karthi Rams Sithai short film became feature film