அசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் கருணாஸின் மகன் கென்

Actor Karunas son Ken acting in Dhanushs Asuran வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் படம் ‘அசுரன்’.

கலைப்புலி எஸ் தானு இப்படத்தை தயாரிக்க ஜிவி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படமானது கரிசல் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை மையமாக வைத்து உருவாகி வருகிறது என்பதை பார்த்தோம்.

தனது அண்ணனை கொலை செய்தவனைப் பழிவாங்கும் பதினைந்து வயது சிறுவன், தனது தந்தையுடன் ஒரு வாரம் காடுகளில் சுற்றித் திரிந்து, நீதிமன்றம் செல்லும் பயணம் தான் இந்த ‘வெக்கை’ நாவல்.

தந்தை கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. அந்த சிறுவன் கேரக்டரில் நடிகர் கருணாஸின் மகன் கென் நடிக்கவுள்ளார்.

இதற்கு முன்பே ‘அழகு குட்டி செல்லம்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களில் கென் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Karunas son Ken acting in Dhanushs Asuran

Overall Rating : Not available

Latest Post