தல ரசிகர்களை தல கால் புரியாமல் தவிக்க விட்ட ‘வலிமை’ பட வில்லன் கார்த்திகேயா

தல ரசிகர்களை தல கால் புரியாமல் தவிக்க விட்ட ‘வலிமை’ பட வில்லன் கார்த்திகேயா

valimai karthikeyaஅஜித் நடிப்பில் உருவாகவுள்ள ‘வலிமை’ படத்தை வினோத் இயக்கவுள்ளார்.

யுவன் இசையமைக்கவுள்ள இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.

அஜித்துக்கே உரித்தான பைக் & கார் ரேஸ் காட்சிகளுடன் படம் பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது.

அஜித்துக்கு ஜோடியாக காலா ஹீரோயின் ஹூமா குரேஷி நடிப்பதாக கூறப்படுகிறது.

யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடிக்க வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார்.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

மேலும் வலிமை தலைப்பு தவிர எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய வலிமை பட வில்லன் கார்த்திகேயாவை அஜித் ரசிகர்கள் வாழ்த்தினர்.

அவர்களுக்கு நன்றி தெரிவித்து கார்த்திகேயா ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அஜித் ரசிகர்களுக்கு நன்றி. கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்க எதிர்பார்த்தத விட ஒரு சிறப்பான வலிமை அப்டேட் வரப்போகுது என கூறியுள்ளார்.

இது தல ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இதனையடுத்து #WaitingForThalaDharisanam என அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

actor kartikeya hints about valimai update

மீண்டும் கோலம் கலாச்சாரம்.; கோலம் போட்டு CSK வெற்றியை கொண்டாடும் மகளிர்

மீண்டும் கோலம் கலாச்சாரம்.; கோலம் போட்டு CSK வெற்றியை கொண்டாடும் மகளிர்

Kolam podu team celebrates CSK Victory in IPL 2020 matchதமிழர்கள் வாழ்வில் முக்கியமாக இந்துக்கள் கலாச்சாரத்தில் நிறைய பழக்க வழக்கங்களுக்கு ஓர் அழகான அருமையான அர்த்தம் உண்டு.

அதிலும் இன்றைய மகளிர் மறந்து போன கோலங்கள் வரைவதற்கு பல அர்த்தங்கள் உள்ளன.

பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம்; சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், பார்டர் கோலம், மனை கோலம். கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம் என கோலங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

காலையில் எழுந்து தண்ணீர் தெளித்து வாசலில் சாணம் பூசுவதில் கூட அர்த்தம் உண்டு. சாணம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.

மேலும் சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராணவாயுவை கொடுக்கிறது.

இதனால் அன்றைய நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

புள்ளிக் கோலத்தை போடும் போது உங்கள் கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது.

கோலத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனை ஒருநிலைப்படுகிறது. இதனால் உங்கள் சிந்தனைகள் சிதறாது.

தினமும் இதை செய்வதால் தெளிந்த சிந்தனைகள் உங்களுக்குள் உருவாகும்.

ஆனால் இது எதையும் தெரியாமல் இன்று ப்ளாஸ்டிக் கோலங்கள் போடப்படுகிறது. அதற்கு காரணம் டிஜிட்டல் வேர்ல்ட்.

இந்த நிலையில் நாம் மறந்து போன இந்த கோல காலச்சாரத்தை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக் சொல்ல கோலம் போடு என்ற யூடியுப் சேனல் வழிவகை செய்கிறது.

கோலம் போடுவதற்கென்றே இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல வகையான கோலங்கள் அழகாக வரையப்பட்டு வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் CSK அணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கோலம் போடு என்ற பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.

Kolam podu team celebrates CSK Victory in IPL 2020 match

இதோ அந்த வீடியோவை பாருங்கள்…

விஜய் & வெற்றிமாறன் இணையும் பட பற்றி ஜிவி பிரகாஷ் தந்த சூப்பர் அப்டேட்

விஜய் & வெற்றிமாறன் இணையும் பட பற்றி ஜிவி பிரகாஷ் தந்த சூப்பர் அப்டேட்

vijay gv prakashசினிமா ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார் ( வீடியோ வடிவில்) ஜி.வி.பிரகாஷ்.

அப்போது ஒரு ரசிகர்… விஜய் – வெற்றிமாறன் இணைந்து பணிபுரிய உள்ள படம் பற்றி கேட்டார்.

அதாவது… விஜய் – வெற்றிமாறன் படம் நடந்தால் கண்டிப்பாக நீங்கள் இல்லாமல் நடக்காது. அது எப்போது?” என்று கேட்டார்.

“கண்டிப்பாக. இருவருமே இணைந்து பணிபுரிய விரும்புகிறார்கள்.

அதற்கான நேரம்தான் அமையவில்லை. இருவருடைய படங்களை வைத்துப் பார்த்தால் 2021 அல்லது 2022-ல் இணைய வாய்ப்புள்ளது”. என்றார் ஜிவி.

சூர்யா & சூரி நடிக்கவுள்ள படங்களை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இந்த படங்களை முடித்துவிட்டு இருவரும் இணையலாம்.

GV Prakash about Vijay Vetrimaaran film

இந்தியாவை கலக்கிய பேஃமிலி க்ரைம் த்ரில்லர்.; மீண்டும் மோகன்லால் – மீனா நடிப்பில் ‘த்ரிஷ்யம்-2’

இந்தியாவை கலக்கிய பேஃமிலி க்ரைம் த்ரில்லர்.; மீண்டும் மோகன்லால் – மீனா நடிப்பில் ‘த்ரிஷ்யம்-2’

ஏழு வருடங்களுக்கு முன் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’.

மலையாள சினிமாவை கலக்கிய இப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தமிழில் கமல் & கௌதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் உருவானது.

அனைத்து பேஃமிலி ஆடியன்சாலும் ரசிக்கப்பட்ட இந்த க்ரைம் திரில்லரின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது.

முதல் பாக க்ளைமாக்சில் தன் குடும்பத்தால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மகனை புதிய போலீஸ் ஸ்டேஷனில் கட்டிடத்தில் புதைத்து விட்டு திரும்புவார் ஹீரோ.

தற்போது 2ஆம் பாகத்தில் போலீஸ் அதிகாரி கண்டுபிடிக்கிறாரா? என்பதே கதையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

‘த்ரிஷ்யம் 2’ திரைப்படத்திலும் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார்.

(தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் கமலுடன் கௌதமி நடிப்பாரா? என்பதுதான் கேள்வி)

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகளுடன் சூட்டிங் அனுமதி அளித்திருக்கும் நிலையில் இன்று பூஜையுடன் ‘த்ரிஷயம் 2’ படப்பிடிப்பு தொடங்கியது.

இத்தகவலை ட்விட்டரில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் மோகன்லால்.

Mohanlals drishyam2 goes on thf floors

drishyam 2

ஊரடங்கிலும் பொதுத்துறை வங்கிகள் ரூ 20000 கோடி மோசடி..; முறைகேடில் SBI முதலிடம்.. – ரிசர்வ் பேங்க் தகவல்

ஊரடங்கிலும் பொதுத்துறை வங்கிகள் ரூ 20000 கோடி மோசடி..; முறைகேடில் SBI முதலிடம்.. – ரிசர்வ் பேங்க் தகவல்

sbi bankகொரோனா காலத்தில் அமலில் உள்ள ஊரடங்கால் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்து வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

தனியார் பள்ளிகளில் சேர்க்க பணமில்லாமல் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர்.

ஆனால் அரசாங்கமோ பள்ளிகள் திறக்காத நிலையிலும் அரசு ஆசிரியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்கி வருகிறது.

மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக வாழும் அரசியல்வாதிகள் & அரசு அதிகாரிகள் மக்களை கண்டுக் கொள்வதில்லை.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க இந்த கொரோனா காலத்திலும் பொதுத்துறை வங்கிகளில், பல்வேறு நிதி முறைகேடுகள் நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

சந்திரசேகா் கெளா் என்பவா் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு இந்த மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளது இந்திய ரிசா்வ் வங்கி.

(இந்த அம்பலம் அவர்களை ஒன்றும் செய்துவிடாது என்பது தெரிந்த ஒன்றுதான்.. மக்கள் விழிப்புணர்வு பெற்று இனியாவது நல்லவர்களை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.)

நிதி முறைகேடுகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது…

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில், பொதுத்துறை வங்கிகளில் 2,867 நிதி மோசடிகள் நடைபெற்று உள்ளது.

அதன் மூலம் கிட்டத்தட்ட 20000 கோடி ரூபாய்க்கு நிதி முறைகேடு நடைபெற்று உள்ளது.

அதன் விவரம் வருமாறு…

மொத்தம் உள்ள 12 பொதுத் துறை வங்கிகளில்..

பாங்க் ஆப் இந்தியாவில் 47 மோசடிகளில், 5,125 கோடி ரூபாய் முறைகேடு

கனரா வங்கியில் 33 மோசடிகளில் 3,885 கோடி ரூபாய் முறைகேடு

பாங்க் ஆப் பரோடாவில் 60 மோசடிகளில் 2,843 கோடி ரூபாய் முறைகேடு

பாரத ஸ்டேட் வங்கியில் 2,326 கோடி ரூபாய் முறைகேடு.

இந்தியன் வங்கியில் 1,470 கோடி ரூபாய் முறைகேடு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் 1,208 கோடி முறைகேடு

இத்துடன்… சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுகோ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி என பட்டியல் நீள்கிறது.

அதிக எண்ணிக்கையிலான நிதி முறைகேடு பாரத ஸ்டேட் வங்கியில் நடைபெற்றுள்ளதாம்.

Public sector banks report frauds worth over Rs 20000 cr in April-June says RBI

திமுக வெற்றிக்கு ரஜினியே காரணம்.; ஹிந்தி தெரியுமென்று தயாநிதி மாறனை MP ஆக்கியவர் கருணாநிதி.; சூர்யா தெரியாமல் பேசுகிறார்.. – ராதாரவி

திமுக வெற்றிக்கு ரஜினியே காரணம்.; ஹிந்தி தெரியுமென்று தயாநிதி மாறனை MP ஆக்கியவர் கருணாநிதி.; சூர்யா தெரியாமல் பேசுகிறார்.. – ராதாரவி

radharaviசினிமாவில் பல படங்களில் பல வேடங்களை போட்டு அசத்தியவர் டத்தோ ராதாரவி.

அதுபோல் பல கட்சிகளிலும் இவர் இருந்து பிரிந்து சென்றிருக்கிறார்.

இவர் ஓரிரு வருடங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா குறித்து கேவலமாக நயன்தாரா நடித்த ‘கொலையுதிர் காலம்’ பட விழாவில் பேசினார்.

இதனையடுத்து நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இதனையடுத்து அதிமுகவில் இணைந்தார்.

சில மாதங்களுக்கு பின்னர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் ராதாரவி.

இவர் மேடைகளில் பேசினாலே ஏதாவது பரபரப்பு உண்டாகும். தற்போது கொரோனா ஊரடங்கால் எந்த நிகழ்ச்சியும் இல்லை.

இந்த நிலையில் இன்று ராதாரவி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது பல்வேறு விஷயங்களை பேசினார்.

அதில்…

அடுத்தாண்டு 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்.

நடிகர் விஷால் பாஜகவில் இணைந்தால் நானும் அவருடன் இணைந்து பணியாற்ற தயார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட 2 முறை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் உருப்படாது..

ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். திமுக ஒரு காலத்தில் வெற்றி பெற்றதற்கு ரஜினியும் காரணம்.

நடிகர் சூர்யா எதை பேசினாலும் தெரியாமல் பேசுகிறார்.

தயாநிதி மாறனை எம்பி ஆக்கியதற்கு காரணம் அவருக்கு ஹிந்தி தெரியும் என்று சொன்னவர் கருணாநிதி.

இவ்வாறு ராதாரவி பேசினார்.

Radharavi praises super star rajinikanth

More Articles
Follows