அஜித்தின் ‘வலிமை’ படத்தில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்..?

Valimai Ajithபோனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’. யுவன் இசையமைக்கிறார்.

இதில் ‘ஈஸ்வர மூர்த்தி’ என்கிற காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் அஜித்.

ரஜினியின் ‘காலா’ புகழ் ஹீமா குரேஷி அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார்.

கொரோனா ஊரடங்கிற்கு பின் இப்பட சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தது.

தற்போது ராஜஸ்தானில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடக்கின்றன.

இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது..

இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் பரவியது.

அவரும் அஜித்துடன் இணைந்து பைக் ரேஸராக நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இந்த தகவலை ‘வலிமை’ படத்தயாரிப்பு மறுத்துள்ளது.

Actor John Abraham is part of Valimai ?

Overall Rating : Not available

Latest Post