கேரளாவிலும் கேப்டன்… விஜயகாந்த் இடத்தை பிடிப்பாரா ஜெயசூர்யா?

கேரளாவிலும் கேப்டன்… விஜயகாந்த் இடத்தை பிடிப்பாரா ஜெயசூர்யா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayakanth and jayasuriyaதமிழகத்தில் கிரிக்கெட் பேமஸ் என்றால், கேரளத்தில் புட்பால்தான்.

பெரும்பாலான இளைஞர்கள் அங்கு ஓடிஆடி கால்பந்து விளையாடுவதை பார்க்கமுடியம்.

இந்நிலையில், கேரளாவின் மறைந்த முன்னாள் புட்பால் விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் அவர்களின் வாழ்க்கை பற்றி ஒரு படம் உருவாகவிருக்கிறது.

பிரஜேஷ் சென் இயக்கவுள்ள இப்படத்தில் நாயகன் ஜெயசூர்யாதான்.

ஜெயசூர்யாவை வைத்துதான் கதையை எழுதினேன் என்று தெரிவித்திருக்கிறார் இயக்குனர்.

கேப்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜெயசூர்யா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக போகிறார்களாம்.

தமிழ்நாட்டுக்கு கேப்டன் என்றால் அது விஜயகாந்துதான். அதுபோல் கேரளாவின் கேப்டனாக ஜெயசூர்யா ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தனுஷின் ‘பவர் பாண்டி’யில் கூடுதல் பவராக செல்வராகவன்

தனுஷின் ‘பவர் பாண்டி’யில் கூடுதல் பவராக செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Selvaraghavan joins with dhanush in Power Paandiதனுஷ் முதன்முறையாக இயக்கி வரும் படம் பவர் பாண்டி.

இதில் அவரும் முக்கிய வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக மடோனா நடிக்கிறார்.

இவர்களுடன் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல இயக்குனரும் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் இணைந்திருக்கிறார்.
அவர் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறாராம்.

அதுவும் பத்தே நிமிடத்தில் இரண்டு பாடல்களையும் எழுதியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

எந்திரனை மிஞ்சும் ‘2.ஓ’… ரஜினி ரசிகர்களுக்கு அதிரடி தகவல்கள்

எந்திரனை மிஞ்சும் ‘2.ஓ’… ரஜினி ரசிகர்களுக்கு அதிரடி தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajiniஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 2.ஓ.

ஏஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை லைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதன் முதல் பாகமான எந்திரன் படத்தில் வசீகரன் மற்றும் சிட்டி என இருவேடங்களில் ரஜினி நடித்திருப்பார்.

ஆனால் தற்போது அதனை மிஞ்சும் வகையில் இதில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறாராம்.

முதல் பாகத்தில் இறந்த வில்லனின் மகனாக சுதன்ஷூ பாண்டே நடித்திருக்கிறார்.

இவர் சிட்டி ரோபோவின் CODE-களை வைத்து புதிதாக ஒரு பவர்புல் ரோபோவை உருவாக்குகிறார்.

அதன்பின்னர் கெட்ட சிட்டி மற்றும் அக்‌ஷய்குமார் ஆகிய இரு ரோபோக்களை நல்ல ரஜினி ரோபா எப்படி அழிக்கிறார்?

அதற்கு சயின்ஸ்ட் வசீகரன் எப்படி உதவுகிறார் என்பதுதான் இதன் கதைக்களம் எனவும் தெரிய வந்துள்ளது.

இதில் ஆறு பாடல்கள் இடம் பெற்றாலும் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இருக்க ஒரே ஒரு பாடலைதான் படத்தில் வைக்கவிருக்கிறார் ஷங்கர் என சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்

சிவகார்த்திகேயனுக்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo movie stillsபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ கடந்த அக்டோபர் 7ஆம் தேதி வெளியானது.

இப்படத்தின் 25வது நாளை இவரது ரசிகர்கள் இணையத்தளங்களில் டிரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் இந்த வெற்றியை கருணை இல்லங்களில் கொண்டாடி உள்ளனர்.

அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் தீபாவளி பட்டாசுகளை வழங்கியுள்ளனர்.

இதுபோன்ற செயல்கள் நிச்சயம் அவர்களது அபிமான நடிகர்களை பெருமையடைய செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சீனுராமசாமி இயக்கத்தில் மம்மூட்டி-எஸ்.ஏ.சந்திரசேகர்

சீனுராமசாமி இயக்கத்தில் மம்மூட்டி-எஸ்.ஏ.சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mammooty and SACவிஜய்சேதுபதி நடிப்பில் உருவான ‘தர்மதுரை’ படத்தை சீனுராமசாமி இயக்கியருந்தார்.

இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் சீனுராமசாமி.

இதில் மம்மூட்டி மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்களாம்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் இதன் சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு இருக்கிறாராம் இயக்குனர் சீனுராமசாமி.

மீண்டும் ‘பேராண்மை’ கேரக்டரில் ஜெயம் ரவி

மீண்டும் ‘பேராண்மை’ கேரக்டரில் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

again jayam ravi selected character as Peranmai movieஜெயம் ரவி நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை இயக்குனர் விஜய் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தை ‘தி திங்க் பிக் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

நாயகியாக சாயிஷா சைகல் நடிக்கிறார். இவர் இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகரான திலீப் குமாரின் பேத்தி ஆவார்.

திரு ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைபக்கிறார்.

இதில் ஜெயம் ரவி பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறாராம்.

இதற்கு முன்பே, பேராண்மை படத்தில் இதுபோன்ற கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருந்த்து தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows