எனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்தி தந்த ஹிப் ஆப் ஆதிக்கு நன்றி நடிகர் அஸ்வின்

எனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்தி தந்த ஹிப் ஆப் ஆதிக்கு நன்றி நடிகர் அஸ்வின்

New Projectகலையுலகம் கடல் போன்றது..அதில் மீனையும் பிடிக்கலாம்.. முத்தையும் அள்ளலாம்.. அவரவர்களின் முயற்சியைப் பொறுத்தது.

சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தின் மூலம் முத்தை அள்ளியவர் அஸ்வின்…படத்தில் ஹாக்கி பிளேயர் ஆசிப் என்ற காரக்டரில் நடித்து பலரது பாராட்டுதலை பெற்றவர்…நெகடிவ் காரக்டர் போன்று ஆரம்பமாகி அப்புறம் பாசிடிவ் காரக்டராகி ஆதியின் நண்பராக நடித்திருப்பவர்.

படத்தை பார்த்த பலரின் பாராட்டினால் குளிர்ந்து போயிருக்கும் அஸ்வினை சந்தித்து பேசினோம்..

நான் சிங்கப்பூரில் மாஸ்டர் ஆப் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்து விட்டு

ஹில் பிரீஸ் ஹோட்டல் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்தில் உயரிய

பொறுப்பில் இருந்தேன்…கை நிறைய சம்பளம் ..கெளரவமான வேலை என்று இருந்தவன்

நான் அத்துடன் டான்ஸ் ஸ்கூல், ஜிம் என்று நடத்திக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் யானும் தீயவன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. என் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. படம் வெளியான நேரத்தில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப் பட்டது. அதனால் படத்திற்கு வெற்றி கிடைக்காமல் போச்சி.

அதற்கப்புறம் பஞ்சாட்சரம் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்தேன்..அந்தப்படம் விரைவில் ரிலீசாகப் போகுது. என்னை நானே டெவலப் செய்து கொள்ள வேண்டும் என்று கூத்துப் பட்டறைக்குப் போய் பயிற்சி எடுத்தேன்

அதற்கு எனக்கு கிடைத்த பரிசு ஹிப் ஆப் ஆதி அவர்கள் மூலம் நட்பே துணை படத்தின் மூலம் கிடைத்தது… எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்து என் வாழ்க்கைகு ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்தி கொடுத்த அவருக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அதே மாதிரி தயாரிப்பாளர் சுந்தர்.c.சாருக்கும் குஷ்பு மேடத்துக்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். எனக்கு இது தான் வேண்டும்..இதில் தான் நடிப்பேன் என்று இல்லை…எந்த காரக்டராக இருந்தாலும் சரி…ஹீரோ வில்லன் காரக்டர் எதுவாக இருந்தாலும் அதில் நான் என்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கேன்.

என்னோட அப்பா ஜெரோம் புஷ்பராஜ் ஒரு லாயர்…அதோடு இல்லாமல் மியூசிக் டைரக்டர். அதனால் எனக்கு மியூசிக் ஆர்வம் அதிகம் நிறைய மியூசிக் ஆல்பங்களை தயாரித்திருக்கிறேன். இப்போ வெப் சீரியல்களை தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறேன்…

எனக்கும் இந்த கலைத்துறையில் மதிப்பு மிக்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்…

என்றார் அஸ்வின்.

ராகவா லாரன்சுக்கு நன்றி சொல்லும் Doopaadoo

ராகவா லாரன்சுக்கு நன்றி சொல்லும் Doopaadoo

New Project (2)கடினமான உழைப்பு, உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் வரும். ஆனால் அது புதுமையான விஷயத்தை முயற்சிக்கும் போது கிடைத்தால் அது மிகப்பெரிய சாதனை. பின்பற்றுவதற்கு பாதை எதுவும் இல்லாமல், ஒரு புதிய பாதையை உருவாக்கும் முயற்சி அது. DooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களை கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. DooPaaDoo சுயாதீன இசை கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது.

பாடலாசிரியர் மற்றும் DooPaaDooவின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, “இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017ல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சந்தித்தபோது, நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்ட அவர், எங்கள் ஸ்டுடியோவிற்கு வந்தார். அவரது படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு பாடல்களை பட்டியலிட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த அனைத்து பாடல்களையும் கேட்ட அவர், ஆறு பாடல்களை தேர்ந்தெடுத்தார். மேலும் மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார். காஞ்சனா 3ல் மிகவும் தனித்தன்மையான விஷயம் என்னவென்றால், பாடலின் பின்னணியில் உள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDooவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது. கலைஞர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே காஞ்சனா 3 பாடல்களை ரசிகர்கள் ரசிப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இது விரைவில் ஒரு நடைமுறையாகவும் மாறலாம். அதாவது, ஒரு சிறந்த இசையின் வெற்றி கலைஞரின் திறமை, பாடல்களின் தரம் மற்றும் கலையின் புத்துணர்வைப் பொறுத்து இருக்குமே தவிர, அந்த இசையுடன் சம்பந்தப்பட்ட பிராண்டை ஒட்டி இருக்காது” என்றார்.

தங்களது எதிர்கால திட்டங்கள் குறித்து DooPaaDooவின் தலைவர் & CEO கவுந்தேயா கூறும்போது, “நாங்கள் இன்னும் பல இயக்குனர்களுடன் இணைந்து செயல்பட முயற்சிக்கிறோம். சுயாதீன கலைஞர்களை இன்னும் நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அவர்களின் புகழை விரிவுபடுத்தவும் முயற்சிக்கிறோம். ராகவா லாரன்ஸ் மாஸ்டர், DooPaaDooவை அவர் படத்துக்கு முயற்சித்ததோடு நில்லாமல், மற்ற இயக்குனர்களுக்கும் பரிந்துரை செய்வதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். DooPaaDoo காஞ்சனா 3 மூலம் 6 கலைஞர்களுக்கு வாய்ப்பை பெற்று தந்ததில் மகிழ்ச்சி அடைகிறது. மேலும் இதில் இருந்து இன்னும் பலரை அறிமுகப்படுத்த விரும்புகிறோம்” என்றார்.

கமலுடன் உள்ள நட்பை கெடுத்துடாதீங்க…; ரஜினி வேண்டுகோள்

கமலுடன் உள்ள நட்பை கெடுத்துடாதீங்க…; ரஜினி வேண்டுகோள்

Rajini clarifies about Kamals friendship and his support to MNM Party60 வருடங்களாக சினிமாவில் சாதித்த கமல் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். விரைவில் ரஜினியும் களத்தில் குதிக்க உள்ளார்.

வருகிற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட உள்ளது.

ரஜினி களத்தில் இல்லாத காரணத்தினால் அவரின் ஆதரவை கமல் கேட்டு வருகிறார்.

ஆனால் விரைவில் தானும் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதால் யாருக்கும் தன் ஆதரவில்லை என கூறிவருகிறார் ரஜினி.

இதனால் கமல் விஷயத்தில் ரஜினி மௌனம் காத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று ரஜினியின் தர்பார் பட பர்ஸ்ட் லுக் வெளியானது.

அப்பட ஷூட்டிங் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.

அப்போது கமல்ஹாஸன் தொடர்ந்து ரஜினி ஆதரவு வேண்டும் என்று கேட்டு வருவது குறித்து கேள்வியை நிருபர்கள் எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “எனது ஆதரவு யாருக்கும் இல்லை என நான் ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன், அதில் எந்த மாற்றமும் இல்லை. இதுகுறித்து திரும்ப திரும்பப் பேசி எங்கள் நட்பைக் கெடுத்து விடாதீர்கள்,” என்றார்.

Rajini clarifies about Kamals friendship and his support to MNM Party

என்னை எப்படி பாக்கனுமுன்னு நீயே முடிவு பண்ணு..; தர்பாரில் ரஜினி பன்ச்

என்னை எப்படி பாக்கனுமுன்னு நீயே முடிவு பண்ணு..; தர்பாரில் ரஜினி பன்ச்

You decide whether you want me to be good bad or worse Rajini punch in Darbarரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர் 167 படத்திற்கு தர்பார் என தலைப்பிட்டு சற்றுமுன் அதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

தர்பார் என்றால் அது அரசரின் சபை என பொருள்படும். அதாவது அரசர் சபை என்றும் கூறலாம்.

அங்கு அரசரை சந்திக்க மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூடுவர்.

இந்த தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் ஐபிஎஸ் ஆக நடிக்கிறார் என்பதை போஸ்டரில் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

மேலும் மும்பை என்ற வார்த்தை (எழுத்துக்கள்) அதில் தலை கீழாக உள்ளது. எனவே மும்பையை புரட்டிப்போடும் ஒரு கொலை சம்பவம் நடைபெறுவதாக கதை அமைக்கப்பட்டு இருக்கலாம்.

அதை துப்பறிய நாய் மற்றும் அதிகாரிகளுடன் ரஜினி ஈடுபடலாம் எனத் தெரிகிறது.

முக்கியமாக “You decide whether you want me to be good bad or worse” என்ற வாசகம் அதில் உள்ளது.

அதாவது நான் நல்லவனா கெட்டவனா இல்ல மோசமானவனா… எப்படி இருக்கமுன்னு நீயே முடிவு பண்ணிக்கோ என்ற அர்த்தம் அதில் உள்ளது.

எனவே இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தில் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த தர்பார் பட சூட்டிங் நாளை முதல் மும்பையில் தொடங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

லைகா தயாரிக்கும் இப்படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த ஆண்டு 2020 பொங்கலுக்கு இப்படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர்.

You decide whether you want me to be good bad or worse Rajini punch in Darbar

Darbar first look poster

ரஜினியை என் பாதி வயதில்தான் தெரியும்.. – ‘அரசியல்வாதி’ கமல்

ரஜினியை என் பாதி வயதில்தான் தெரியும்.. – ‘அரசியல்வாதி’ கமல்

Kamals statement about Rajinis support to his Makkal Needhi Maiam partyவருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது.

ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை என்பதால் அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

அதேவேளையில் எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவும் இல்லை என்பதை கூறியிருந்தார். தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் தீர்த்து வைப்பார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என ரஜினி தெரிவித்து இருந்தார்.

இதனிடையில் தன் கட்சிக்கு நண்பர் ரஜினிகாந்த் ஆதரவளிப்பார் என சில தினங்களுக்கு முன் கமல் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இதுவரை ரஜினி இதுகுறித்து எதுவும் பேசவில்லை.

இந்நிலையில் பிரபல தனியார் டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் கமல் பேசியதாவது…

“என்னை ஆதரிப்பதை ரஜினி தான் வெளிப்படுத்த வேண்டும். நான் திரும்ப திரும்ப கேட்க முடியாது. வருகிறேன் என்றார் ரஜினி. ஆனால் இன்னும் வரவில்லை.

ரஜினியை என் பாதி வயதில் தான் தெரியும். ஆனால் மக்களை 4 வயதிலிருந்தே தெரியும்.

மக்கள் வருகிறார்கள் அதுபோதும். யார் ஆதரித்தாலும் மகிழ்ச்சி. ரஜினி ஆதரவளித்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்” என கமல் பேசியுள்ளார்.

Kamals statement about Rajinis support to his Makkal Needhi Maiam party

தாய்குலங்களை கவர்ந்து விட்டான் ‘குடிமகன்’..; பாக்யராஜ் பாராட்டு

தாய்குலங்களை கவர்ந்து விட்டான் ‘குடிமகன்’..; பாக்யராஜ் பாராட்டு

Bhagyaraj praises Kudimagan script and movieஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் தயாரிப்பில் சத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குடிமகன்’.

“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்ற கருத்தினை மையமாக வைத்து இப்படத்தை இயக்குனர் இயக்கி இருந்தார்.

இதில் ஜெய்குமார் நாயகனாகவும், ‘ஈரநிலம்’ ஜெனிபர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.

இவர்களுடன் மாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குனர் பாக்யராஜ், படத்தையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது, ‘குடிமகன்’ திரைப்படம் மூன்று வெற்றி அடைந்திருக்கிறது. பிரபலங்கள் இல்லாமல் ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்தது முதல் வெற்றி.

படம் ரிலீசுக்குப் பிறகு தியேட்டர்கள் அதிகரித்திருப்பது இரண்டாவது வெற்றி. பெண்கள், தாய்குலங்களை கவர்ந்திருப்பது மூன்றாவது வெற்றி.

குடிபழக்கத்திற்கு ஆளானவருக்கு என்ன பிரச்சனை வரும் என்று குடும்பத்தை வைத்து சொல்லியிருக்கிறார். இயக்குனர் சத்தீஷ்வரன் ஸ்கிரிப்ட் மேல் வைத்திருந்த நம்பிக்கையை வைத்துதான் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

நம்பிக்கைக்கு ஏற்றார்போல் படம் வெளியாகி, எதிர்பார்த்ததை விட நிறைய தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றார்.

Bhagyaraj praises Kudimagan script and movie

More Articles
Follows