ஒரே படத்தில் நடித்த இளம் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்.; அதிர்ச்சியில் திரையுலகம்

ஒரே படத்தில் நடித்த இளம் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்.; அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் சரண்யா மோகன் ஜோடியாக இணைந்து நடித்த படம் ‘வெண்ணிலா கபடி குழு’.

இந்த படத்தில் மூலம் சூரியின் பரோட்டா கதாபாத்திரம் பிரபலமானது.

மேலும் இந்த படத்தில் நடித்த பெரும்பாலான கலைஞர்களுக்கு இந்த படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இந்த படத்தின் மூலம் தங்களுக்கு கிடைத்த பெயரை வைத்துக் கொண்டு பல படங்களில் இந்த நடிகர்களும் ஒப்பந்தமான ஆகினர்.

இந்த படம் வெளியாகி 13 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் நித்தீஷ் வீரா என்பவர் காலமானார்.

இந்த நிலையில் 2022 இறுதியில் ஹரி வைரவன் என்பவரும் காலமானார். இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் மாயி சுந்தர் என்பவர் மஞ்சகாமாலை நோயால் மரணம் அடைந்தார்.

ஒரே படத்தில் நடித்த மூன்று இளம் கலைஞர்கள் நல்ல திறமையான நடிகர்கள் அடுத்தடுத்து உயிரழுந்துள்ளது தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

3 Young Actors died who acted in same movie

மோகன்லால் – லிஜோ ஜோஸ் இணைந்த ‘மலைக்கோட்டை வாலிபன்’ டைட்டில் லுக் ரிலீஸ்

மோகன்லால் – லிஜோ ஜோஸ் இணைந்த ‘மலைக்கோட்டை வாலிபன்’ டைட்டில் லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை மலையாள திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’.

‘ஆமென்’ படத்தின் கதாசிரியரான பி. எஸ். ரஃபிக் திரைக்கதை எழுதியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார்.

ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராஜஸ்தானில் நடைபெறும் என்றும், இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் மோகன்லால் மல்யுத்த வீரராக நடிக்கிறார் என்றும் பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிஸரியுடன், மோகன்லால் இணைந்திருப்பதால் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Mohanlal – Lijo Jose ‘Malaikottai Valiban’ title look release

அன்று அஜித் ரசிகர்கள் டென்ஷன்.. இன்று ரஜினி ரசிகர்கள் டென்ஷன்.; ‘வாரிசு’ இசை விழாவில் தில்ராஜு சர்ச்சை பேச்சு

அன்று அஜித் ரசிகர்கள் டென்ஷன்.. இன்று ரஜினி ரசிகர்கள் டென்ஷன்.; ‘வாரிசு’ இசை விழாவில் தில்ராஜு சர்ச்சை பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தை வம்சி இயக்கி உள்ளார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரித்துள்ளார். நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

அப்போது விஜய் ஷாம் ராஷ்மிகா சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தில் ராஜு பேசும்போது.

“எல்லோரும் என்னிடம் விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் என்று சொன்னார்கள். அதில் சந்தேகமே இல்லை.. விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் தான் என்று பேசினார்.

சில தினங்களுக்கு முன் தான் விஜய் தான் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் என்று பேசி இருந்தார் தில் ராஜு.

அப்போது அஜித் ரசிகர்கள் டென்ஷன் ஆகினர்.. அதுபோல தற்போது விஜய் சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 40 வருட சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டுமே.. எனவே தில் ராஜின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது எனலாம்..

Dil Raju controversy speech at Varisu Audio Launch

சிம்பு சிம்பு சிம்பு என்று பேசிய விஜய்.; அனிருத்துக்கும் நன்றி சொன்ன தமன்

சிம்பு சிம்பு சிம்பு என்று பேசிய விஜய்.; அனிருத்துக்கும் நன்றி சொன்ன தமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று நடைபெற்ற ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசும்போது…

“சிம்பு… சிம்பு…. சிம்பு… வாரிசு படத்தில் பாடல் பாடிய சிம்புக்கு நன்றி என பேசினார் விஜய்.

இசையமைப்பாளர் தமன் பேசும்போது..

“வாரிசு படத்தில் ஒரு பாடல் பாட வேண்டும் என்ற சிம்புவிடம் கேட்டபோது அவர் ஒரு முறை கூட யோசிக்கவில்லை. வந்தார். பாடி கொடுத்தார். ஒரு விஜய் ரசிகராக சிம்பு பாடினார்.. என்றார்.

மேலும் அனிருத்தும் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியதற்கு நன்றி” என பேசினார் தமன்.

Vijay and Thaman talks about Simbu and Anirudh

அஜித்தின் ‘துணிவு’ படத்திற்கு விளம்பரம் செய்யும் அரசு நிறுவனம்.; உதயநிதியை உருட்டும் விஜய் ரசிகர்கள்

அஜித்தின் ‘துணிவு’ படத்திற்கு விளம்பரம் செய்யும் அரசு நிறுவனம்.; உதயநிதியை உருட்டும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ‘துணிவு’ பட போஸ்டரை பயன்படுத்தியுள்ளது.

அதன் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு தடையின்றி சீரான மின்சாரம் வழங்கிட தன் உயிரை பணயம் வைத்து பாடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டு ‘துணிவு’ பட லோகோவை பயன்படுத்தியுள்ளனர்.

‘துணிவு’ படத்தின் தமிழக வெளியிட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது தமிழ்நாடு அரசை சேர்ந்த ஒரு துறை ‘சினிமா’ பயன்படுத்தி உள்ளதால் இது அமைச்சர் உதயநிதியின் ஏற்பாடா எனவும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர் நெட்டிஷன்கள்.

மேலும் திமுக ‘வாரிசு’ அரசியலை செய்து வருவதால் ‘வாரிசு’ படத்தை கண்டு கொள்ளவில்லையோ எனவும் விஜய் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

TN Govt department Free promotion for Thunivu movie

அப்பா ப்ளீஸ்.. மானத்தை காப்பாத்திடு..; ‘வாரிசு’ தமனுக்கு அவரது ‘வாரிசு’ அட்வைஸ்

அப்பா ப்ளீஸ்.. மானத்தை காப்பாத்திடு..; ‘வாரிசு’ தமனுக்கு அவரது ‘வாரிசு’ அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

வம்சி இயக்கிய இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்து சமீபத்திய பேட்டியில் தமன் தெரிவித்துள்ளதாவது…

“என் மகன் தினமும் ஸ்கூலுக்குப் போகும்போது… “அப்பா நல்லா மியூசிக் போட்டு என் மானத்தை காப்பாத்திடு.” என்று சொல்லிவிட்டு போவான்” என தெரிவித்துள்ளார் தமன்..

Music Director Thamans son warns his dad

More Articles
Follows