சுசீந்திரன் இயக்கத்தில் 2 எழுத்து பெயர் கொண்ட 2 நடிகர்கள் கூட்டணி

சுசீந்திரன் இயக்கத்தில் 2 எழுத்து பெயர் கொண்ட 2 நடிகர்கள் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor adhi jaiவெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.

இவர் அண்மையில் இயக்கிய ஜீனியஸ், கென்னடி கிளப், சாம்பியன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் சுசீந்திரன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

நடிகர்கள் ஜெய் மற்றும் ஆதி இணைந்து இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணமதிப்பிழப்பு காமெடி ரீமேக்.; சுந்தர் சியுடன் இணையும் பிரசன்னா-ஷாம்.?

பணமதிப்பிழப்பு காமெடி ரீமேக்.; சுந்தர் சியுடன் இணையும் பிரசன்னா-ஷாம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sundar c prasanna shamகடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு குறித்த படம் மாயா பஜார் 2016.

கன்னடத்தில் வெளியான இந்த படத்தில் ராஜ்.பி.ஷெட்டி, வஷிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.

ராதாகிருஷ்ண ரெட்டி இயக்க அஸ்வினி புனித் ராஜ்குமார் தயாரித்திருந்தார்.

கொரோனா ஊரடங்குக்கு முன்பு இந்த படம் அங்கு வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

ஒரு போலீஸ்க்கு அவரது மனைவியை புற்று நோயில் இருந்து காப்பாற்ற பணம் தேவைப்படுகிறது. அதே போல் ஒரு ஏழைக்கு தன் பணக்கார காதலியை மணக்க பணம் தேவைப்படுகிறது.

இவர்கள் இணைந்து பணமதிப்பிழப்பை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பணத்தை கிரிமினலாக சம்பாதித்து செட்டிலாகிறார்கள் என்பதுதான் அந்த படத்தின் கதை.

இதை முழு நீள காமெடி படமாக உருவாகியிருந்தது.

இந்த பட தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய சுந்தர்.சி தன் அவ்னி சினி கிரியேஷன் சார்பில் தயாரிக்கிறாராம்.

அவரது உதவியாளரான சுராஜ் அல்லது பத்ரி இந்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

போலீஸ் அதிகாரியாக ஷாமும், ஏழையாக பிரசன்னாவும் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இவர்களுடன் யோகி பாபு, அஸ்வின் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்க்கு பொருத்தமான ரஜினி படத்தலைப்பை கைப்பற்ற முருகதாஸ் முடிவு.?

விஜய்க்கு பொருத்தமான ரஜினி படத்தலைப்பை கைப்பற்ற முருகதாஸ் முடிவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay rajiniவிஜய் நடித்துள்ள மாஸ்டர் பட ரிலீஸ் கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் விஜய்.

தளபதி 65 என்று தற்காலிமாக அழைக்கப்படும் இந்த படத்தில் தமன் இசையமைக்க உள்ளார்.

முக்கியமான ரோலில் நடிகை மடோனா செபஸ்டியன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

1992ல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி மற்றும் மம்மூட்டி இணைந்த ‘தளபதி’ படத்தலைப்பை இந்த படத்துக்கு வைக்க முருகதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு தளபதி படக்குழுவினரிடம் அனுமதி கேட்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் அன்பாக தளபதி என்றே அழைத்து வருகின்றனர். எனவே விஜய்க்கும் அவரது படத்திற்கும் தளபதி டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு என கூறப்படுகிறது.

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன்.. பொருளாளராக டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வு

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன்.. பொருளாளராக டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

durai murugan tr baluதிராவிட முன்னேற்ற கழக கட்சியில் பொதுச்செயலாளர் பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது.

அந்த பதவியில் இருந்த பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அந்த பதவியில் யாரையும் கட்சி நியமிக்கவில்லை.

அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வரும் 9-ம் தேதி கூடுகிறது.

மேலும் பொருளாளர் பதவிக்கு யார்? தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்தன.

இதையொட்டி தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு பெயரிலும் விண்ணப்பங்கள் வாங்கி சென்றனர்.

இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பிற்பகல் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த வேட்பு மனு தாக்கல் மாலை 4 மணியுடன் முடிந்தது .

இந்த பதவிகளுக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், தி.மு.க. பொது செயலாளராக துரை முருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்…

தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

அடடா.. அழகான தமிழ் தலைப்பை தேர்ந்தெடுத்த விஜய் ஆண்டனி

அடடா.. அழகான தமிழ் தலைப்பை தேர்ந்தெடுத்த விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antonyஅக்னி சிறகுகள், தமிழரசன், காக்கி ஆகிய படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

அண்மையில் பிச்சைக்காரன் 2 படத்தை தயாரித்து நடிக்கவுள்ளதை அறிவித்தார்.

இந்த படத்தை தேசிய விருது பெற்ற பாரம் பட இயக்குனர் பிரியா இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மற்றொரு படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கவுள்ளார்.

விதார்த் நடித்த ‘ஆள்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் ஆனந்த் கிருஷ்ணன்.

இப்பட நாயகியாக ஆத்மிகா நடிக்கிறர். இவர் ஹிப்ஹாப் ஆதியின் ’மீசைய முறுக்கு’ படத்தில் நடித்தவர்.

இந்த திரைப்படத்துக்கு ’அன்பு இல்லையேல் ஓர் அணுவும் அசையாது’ என்ற அழகான தமிழ் தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

விஜய்யுடன் இணையும் வெற்றிமாறன்..; தளபதிக்கு தயக்கமா..?

விஜய்யுடன் இணையும் வெற்றிமாறன்..; தளபதிக்கு தயக்கமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vetrimaranஎத்தனை வருடங்களாக தரமான படங்களை மட்டுமே கொடுப்பேன் என வைராக்கியத்தோடு இருக்கிறார் போல டைரக்டர் வெற்றிமாறன்.

கடந்த 13 ஆண்டுகளில் அவர் இயக்கிய மொத்த படங்கள் 5 மட்டுமே.

அதில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை மற்றும் அசுரன் ஆகிய தனது நான்கு படங்களிலும் தனுஷை இயக்கியிருந்தார்.

’விசாரணை’ படத்தில் தினேஷ் நடித்திருந்தாலும் அந்த படத்தை தனுஷ் தயாரித்திருந்தார்.

தற்போது சூரி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இதனையடுத்து சூர்யாவின் ’வாடிவாசல்’ என்ற படத்தை கலைப்புலி தானு தயாரிப்பில் இயக்குகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில்.. விஜய்க்கான கதை தயார். அவரின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தளபதிக்கு வெற்றிமாறனை அழைப்பதில் என்ன தயக்கமோ? இந்த செய்தி அறிந்தவுடன் தயங்காமல் அழைப்பார் என நம்பலாம்.

More Articles
Follows