அடுத்த வருஷம் பொங்கல்-தீபாவளி ரெண்டுமே தளபதி ஸ்பெஷல்?

அடுத்த வருஷம் பொங்கல்-தீபாவளி ரெண்டுமே தளபதி ஸ்பெஷல்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay new stillsபரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் பாடல்கள் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படம் அடுத்த வருடம் 2017 பொங்கல் விருந்தாக வருகிறது.

இதனையடுத்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்.

இதன் சூட்டிங் பிப்ரவரி 2017ல் துவங்குகிறது.

இப்படத்தை 2017 தீபாவளிக்கு வெளியிடக்கூடும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில் அடுத்த வருடம் பொங்கல், தீபாவளி இரண்டிலும் இளைய தளபதி விஜய்யின் விருந்து இருக்கும்.

ஆண்களை அசிங்கப்படுத்திய ஊர்வசி.. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஆண்களை அசிங்கப்படுத்திய ஊர்வசி.. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress urvasiதமிழில் பிரபல டிவி சேனலில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வருகிறார்.

இதுபோன்ற நிகழ்ச்சியை கைரளி டிவி சேனலில் ஜீவிதம் சாக்ஷி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் ஊர்வசி.

இதில் பிரச்சினையுள்ள குடும்பங்களை அழைத்து பேசி, பஞ்சாயத்து செய்கிறார்.

அதில் பெரும்பாலும் ஆண்களை அசிங்கமாக பேசுவதாக பல புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்களும், மற்றவர்களும் மனித உரிமை ஆணயத்திற்கு புகார் அனுப்பியுள்ளனர்.

இதனால் கேரள மாநில மனித உரிமை ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஊர்வசிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வெயிட் போட்டா ஹீரோதான்… அனிருத்துக்கு ஆசை காட்டும் ப்ரெண்ட்ஸ்

வெயிட் போட்டா ஹீரோதான்… அனிருத்துக்கு ஆசை காட்டும் ப்ரெண்ட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudh photosதமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்கள் எல்லாம் ஹிரோவாகி வரும் காலம் இது.

ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இளைஞர்களை தன் பாடல்களால் கவர்ந்த அனிருத்தையும் ஹீரோவாக எதிர்பார்க்கிறார்களாம் அவரது நண்பர்கள்.

மச்சான்.. நீ இன்னும் ‘வெயிட்’ போட்டா ஹீரோ ஆகிவிடலாம் என்கிறார்களாம்.

எனவே கூடிய விரைவில் அனிருத்தையும் ஹீரோவாக பார்க்க வாய்ப்பு ஏற்படலாம்.

அனிருத்தும் மாரி, வணக்கம் சென்னை, மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் தலைகாட்டி சென்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ராஜமௌலியின் அண்ணன் இயக்கத்தில் ‘காட்சி நேரம்’

ராஜமௌலியின் அண்ணன் இயக்கத்தில் ‘காட்சி நேரம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajamouli and ss kanchiமாவீரன், நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ராஜமௌலி.

இவரது தந்தை விஜேந்திர பிரசாத்தும் திரைத்துறையை சார்ந்தவர்தான்.

தற்போது ராஜமௌலியின் அண்ணன் எஸ். எஸ்.காஞ்சியும் படத்தை இயக்க வந்துவிட்டார்.

இவர் இயக்கிய தெலுங்கு படம் இப்போது தமிழில் காட்சி நேரம் என்ற தலைப்பு வெளியாக உள்ளது.

இதில் ரணதீர், மீரா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.

இது நவயுக தம்பதியைச் சுற்றி நடக்கும் க்ரைம் த்ரில்லர் கதை என தெரிய வந்துள்ளது.

இரண்டு முறையும் இன்ப அதிர்ச்சி அளித்த சூர்யா

இரண்டு முறையும் இன்ப அதிர்ச்சி அளித்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

double time suprise for suriya fansதனக்கான கதையை கவனமுடன் தேர்ந்தெடுத்து, அதில் தன் நடிப்பாற்றலை கொடுத்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருபவர் சூர்யா.

ஹரி இயக்கும் சிங்கம்3 படத்தை முடித்துவிட்டு ‘கொம்பன்’ முத்தையா அல்லது ‘கபாலி’ ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று அறிவித்து தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தார்.

இந்நிலையில் இதனையடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று எதிர்பாராத வகையில் அடுத்த இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் சூர்யா.

இணையத்தை அதிர வைத்த விஜய்-சூர்யா-நயன்தாரா

இணையத்தை அதிர வைத்த விஜய்-சூர்யா-நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay suriya nayantharaபரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்த யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி சில மாதங்களாகவே பலமாக ஒலித்தது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்பதை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் உறுதி செய்தது.

இச்செய்தி இணையங்களில் பரவ தொடங்கிய 30 நிமிடங்களில் சூர்யா படத்தை செல்வராகவன் இயக்குகிறார் என்றும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்ற செய்தி வெளியானது.

இதனையடுத்து 3 மணி நேரத்தில் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கும் நேரத்தில் நயன்தாரா பட அறிவிப்பு வெளியானது.

நயன்தாராவின் பிறந்தநாள் பரிசாக அறம் என்ற தலைப்பிடப்பட்ட பர்ஸ்ட் லுக் வெளியானது.

இவர்கள் மூவரின் படச்செய்தி அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து, இணையத்தில் சில மணி நேரங்களுக்கு அதிர வைத்தது.

More Articles
Follows