தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
முதலில் இப்படத்தை விநாயகர் சதுர்த்தி வெளியிடவிருந்து, பின்னர் ஆயுதபூஜைக்கு மாற்றி, இறுதியாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் விஜய்சந்தர் இயக்கத்தில் உருவாகிவரும் விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படம் டிசம்பரில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.
இதுவும் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வெளியான விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை பட டிரைலரில் டிசம்பர் ரிலீஸ் என தெரிவித்துள்ளனர்.
இதுவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைக்கும் என கூறப்படுகிறது.
விக்ரம் மற்றும் விஜய்ஆண்டனி படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளதால் வேலைக்காரனுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.
எனவே மீண்டும் தள்ளிப் போகுமா? அல்லது மோதுமா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.
Sketch Annadurai and Velaikkaran movie may clash on Christmas