தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி ஜெயம் ரவி நடித்த போகன் ரிலீஸ் ஆகவுள்ளதை தெரிவித்திருந்தோம்.
சூர்யாவின் சிங்கம் படத்தின் மோதலை தவிர்க்கவே, போகன் படம் தள்ளி தள்ளிப் போனது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆனால் போகனை குறிவைத்தே பிப்ரவரி 9ஆம் தேதி சூர்யா நடித்த சி3 படமும் வெளியாகும் என திடீரென அறிவிக்கப்பட்டது.
எனவே, மீண்டும் சிங்கத்தால் தியேட்டர் பிரச்சினை ஏற்படும் என தெரிந்த போகன் தற்போது பிப்ரவரி 3ஆம் தேதியே வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா செய்த குழப்பம் இனி தொடராது என்று நம்புவோம்.
Bogan movie release preponed because of Singam 3 release