தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்தப் படத்தின் இசை விழாவை 2023 புத்தாண்டு விருந்தாக ஜனவரி 1ல் மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பு செய்ய உள்ளனர்.
இந்த நிலையில் சன் டிவிக்கும் கலாநிதி மாறனுக்கும் ஒரு வேண்டுகோள் விடுவித்துள்ளனர் ரஜினி ரசிகர்கள்.
அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது..
“சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பேட்ட படத்தின் இசை விழாவிலும் ரஜினிகாந்த் தான் என்றும் சூப்பர் ஸ்டார்.. நம்பர் ஒன். அவரிடத்தில் யாரும் கிடையாது” என்று பேசி இருந்தார் கலாநிதி மாறன்.
தற்போது ‘வாரிசு’ படத்தின் இசை விழாவில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியிருந்தார்.
கலாநிதி மாறன் சொன்னது உண்மை என்றால் சரத்குமார் பேசியதை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும்.. அதனை சன் டிவி ஒளிபரப்ப கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
rajini fans request to sun tv kalanithi maran








