தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக்கியுள்ள வாரிசு படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.
இதனிடையில் இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த இசை விழாவை காண தமிழக முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஆனால் விழா அரங்கத்திற்குள் சில ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது இந்த இசை விழாவின் சேட்டிலைட் உரிமையை பெற்றுள்ள சன் டிவி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2023 பிறக்கும் முதல் நாள் ஜனவரி 1ம் தேதி மாலை 6.30 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது.






