தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இதன் டிவி உரிமையை கலைஞர் டிவி பெற்றுள்ளது. ஓடிடி டிஜிட்டல் உரிமையை நெட் ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
அஜித்தின் ‘துணிவு’ பட தமிழ்நாடு வெளியிட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘துணிவு’ திரைப்படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவை ரசிகர்கள் மத்தியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக நடிகர் அஜித்திடம் ‘துணிவு’ பட புரொடியூசர் போனி கபூர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அஜித் தன் ஆரம்ப காலங்களில் அவரின் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார்.
ஆனால் கடந்த 10 வருடங்களாக அவரது படப்பூஜை மற்றும் விழாக்களுக்கு கூட அவர் வருவதில்லை.
எனவே பல வருடங்களுக்கு பிறகு அஜித் மேடையில் தோன்றவுள்ளதால் அவரது ரசிகர்களுக்கும் இது பெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.