தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் வாரத்திற்கு 5 படங்கள் வருகிறது என்றால் அதில் குறைந்த பட்சம் 3 படங்களில் நடித்து வருகிறார் யோகிபாபு.
மற்ற 2 படங்களிலும் இவரை நடிக்க கேட்டு இருப்பார்கள். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் இவரை அதை தவிர்த்திருக்கலாம்.
கடந்த வருடம் மட்டும் யோகிபாபு நடிப்பில் 20 படங்கள் வெளியானதாக கூறப்படுகிறது. இந்த வருடம் அதை தாண்டும் என எதிர்பார்க்கலாம்.
கூர்கா, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் வடிவேலுவை வைத்து இயக்குனர் ஷக்தி சிதம்பரம் பேய் மாமா என்ற படத்தை இயக்கவிருந்தார். அதில் தற்போது யோகிபாபுவை ஒப்பந்தம் செய்து உள்ளனர்.
அதுபோல் நீண்ட காலமாக பிரச்சினைகளில் இருக்கும் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்திலும் வடிவேலுக்கு பதில் யோகிபாபுவை நடிக்க வைக்க ஆலோசனை நடக்கிறதாம்.
இது ஒரு புறம் இருந்தாலும் கமலின் இந்தியன்-2 மற்றும் ரஜினியின் தலைவர் 168 படத்தில் வடிவேலு நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.