தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த படம், ‘சில நொடிகளில்’. நவம்பர் 24ல் ரிலீஸ்.
இந்தப் படத்தின் நாயகி புன்னகை கீதாவே இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.
கதைக்களம்..
ரிச்சர்டும் கீதாவும் கணவன் மனைவி. இவர்கள் லண்டனில் வசிக்கும் தமிழர்கள். இவர்களுக்கு குழந்தை இல்லை.
டாக்டர் ரிச்சர்டுக்கு மனைவி இருந்த போதும் பெண்கள் மீது நாட்டம் உண்டு. இவர் ஒரு டாக்டர் என்பதால் மாடல் அழகி யாஷிகாவுடன் எளிதில் தொடர்பு கிடைக்கிறது.
ஒரு நாள் வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் ரிச்சர்டும் யாஷிகாவும் ஒன்றோடு ஒன்றாக கலந்து மது அருந்தி உல்லாசமாக இருக்கிறார்கள்.
அப்போது எதிர்பாராத விதமாக போதை தலைக்கேறி யாஷிகா மரணம் அடைகிறார். வேறு வழியில்லாமல் மனைவிக்கு தெரியாமல் யாஷிகாவை ஒரு இடத்தில் குழி தோண்டி புதைக்கிறார் ரிச்சர்ட்.
ஒரு கட்டத்தில் இதனையறிந்த பெண் பத்திரிக்கையாளர் ரிச்சர்டை மிரட்டுகிறார். பணம் கொடுத்தால் உண்மையை சொல்லாமல் மறைப்பதாக மிரட்டுகிறார்.
இதன் பிறகு என்ன நடந்தது? ரிச்சர்ட் என்ன செய்தார்? மனைவியிடம் மாட்டிக் கொண்டாரா? போலீஸ் இடம் சிக்கிக் கொண்டாரா? பெண் ரிப்போர்ட்டர்க்கு எப்படி தெரிந்தது? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
திரௌபதி & ருத்ரதாண்டவம் உள்ளிட்ட பல படங்களில் ஆக்சன் நாயகனாக நடித்த ரிச்சர்ட் ரிஷி இந்த படத்தில் கொஞ்சம் ரூட்டை மாற்றி ரொமான்டிக் செய்திருக்கிறார்.. ஆனால் இதில் சற்று குண்டாகவே காணப்படுகிறார். ஒருவேளை திருமணம் ஆனதனால் அப்படி காட்டி இருப்பாரோ இயக்குனர்.?
மனைவி காதலி என 2 பெண்களிடம் மாட்டிக் கொண்டு ரிச்சர்ட் படும் அவஸ்தைகள் ஆண்களுக்கு உரித்தான சொல்ல முடியாத தவிப்பு.
யாஷிகா கொஞ்ச நேரமே வந்தாலும் தன்னுடைய நிஜ வாழ்க்கை மாடல் பெண்ணை அழகாக சித்தரித்திருக்கிறார். நுனி நாக்கில் அவர் ஆங்கிலம் பேசுவது அசர வைக்கிறது.
லண்டனில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்து தான் தமிழை பேசுவார்கள்.. அதை சரியாக செய்திருக்கிறார் இயக்குனர் வினய் ஆனால் அயல் நாட்டிலும் தமிழர்களை கள்ளக்காதலர்களாக காட்டி இருப்பது ஏனோ?
சிரித்த முகம்.. அழகான கண்கள்.. கட்லெட் உதடுகள் என சிக்கென்று இருக்கிறார் புன்னகை பூ கீதா. ஆனால் இவரது கேரக்டர் படத்தில் பெரிய திருப்புமுனை. அடடா இவர் புன்னகை பே கீதாவா? அல்லது புயல் கீதாவா? என்று கேட்க வைத்திருக்கிறார். சைலன்ட் கில்லர்.
படத்தில் வில்லனை இல்லை என்றாலும் கீதாவின் கீ நன்றாகவே வேலை செய்திருக்கிறது.
டெக்னீசியன்கள்…
கிட்டத்தட்ட 5 கேரக்டர்களில் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் வினய் பரத்வாஜ்.
படம் ஒன்றரை மணி நேரத்திற்குள் முடிவடைவதால் எங்கும் போர் அடிக்கவில்லை என நினைத்தாலும் தேவையற்ற பாடல்கள் நம்மை குழப்புகின்றன. முக்கியமாக படம் விறுவிறுப்பாக செல்லும் நேரங்களில் பாடல் தேவையற்றது.
பின்னணி இசையில் இசையமைப்பாளர் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தபோது பாடல்களை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.
படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நேர்த்தியாக உள்ளது.
நாம் என்னதான் நேர்மையாக வாழ்ந்தாலும் சில நொடிகளில் வாழ்க்கை தடம் மாறிவிடும்.. அது போல நாம் என்னதான் தவறுகளை மறைத்து மறைத்து செய்து வந்தாலும் அதுவும் சில நொடிகளில் நம்மை காட்டிக் கொடுத்து விடும் என்பதை காட்சிகளாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
சில நொடிகளில் ஏற்பட்ட போதை வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை சுவாரசியமாக கொடுத்திருக்கிறார். அதுபோல சில நொடிகளில் நாம் சிலரை கண்மூடித்தனமாக நம்புகிறோம். ஆனால் அவர்கள் தான் நமக்கு பேராபத்தை கொடுத்து சில நொடிகளில் சில மனிதர்கள் என்பதையும் அப்பட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் வினய் பரத்வாஜ்.
Sila Nodigalil movie review and rating in tamil