First on Net வெல்டன் வெண்பா… மாயநதி விமர்சனம்.. 3.25/5

First on Net வெல்டன் வெண்பா… மாயநதி விமர்சனம்.. 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரிப்பில் இந்த ‘மாயநதி’ உருவாகியுள்ளது.

அபி சரவணன் மற்றும் வெண்பா ஜோடியாக நடித்துள்ளனர்.

கதைக்களம்…

+2 படிக்கும் மாணவி வெண்பா. இவரது அப்பா ஆடுகளம் நரேன். வெண்பாவுக்கு அம்மா இல்லை. மகளை டாக்டராகி பார்க்க ஆசைப்படும் தந்தை அதற்காக எல்லாவற்றையும் செய்கிறார்.

தந்தையின் லட்சியத்தை காப்பாற்ற மகளும் நன்றாக படிக்கிறார். வகுப்பில் எப்போதும் முதல் மாணவியாக திகழ்கிறார்.

தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு செல்லும் மெல்ல மெல்ல அந்த ஆட்டோ டிரைவர் அபி சரவணனை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

நாளடைவில் இவர்களின் காதல் தீவிரமாக படிப்பில் கவனத்தை இழக்கிறார் வெண்பா.

சைக்கோ விமர்சனம் (18+)

நீ நன்றாக படித்து டாக்டராகி விட்டால் அப்போது இந்த ஆட்டோக்காரனை மறந்துவிடுவாய். எனவே இப்போதே திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார்.

வெண்பா என்ன செய்தார்? தந்தையா? காதலனா? யாரை தேர்வு செய்தார்? லட்சத்தியத்தை நிறைவேற்றினாரா? திருமணம் செய்துக் கொண்டாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பெரும்பாலும் அழுக்கான ஆட்டோ டிரைவர்களை பார்த்திருப்போம். பாட்ஷா ரஜினி ஸ்டைலான ஆட்டோ டிரைவர் என்றால் அபி சரவணன் ஸ்மார்ட்டான ஆட்டோ டிரைவர். கதைக்கேற்ற நடிப்பை தேவையான அளவுக்கு கொடுத்திருக்கிறார்.

இவரது நண்பர்களாக வரும் அப்புக் குட்டி மற்றும் கார்த்திக் ராஜா இருவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது. அபி & அப்புவின் சின்ன வயது காதல் குறும்புகள் மீனா டீச்சர் லவ், மல்லிகா டீச்சர் லவ் ரசிக்க வைக்கிறது.

அதிலும் அப்பு குட்டி ஒரு மரணத்தை பார்த்து விட்டு அழும் காட்சி நிச்சயம் நெகிழ வைக்கும்.

பெண்களே உஷார்… ராஜாவுக்கு செக் விமர்சனம் 3.25/5

மனைவியை இழந்தாலும் மகளுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் யதார்த்த தந்தையாக ஆடுகளம் நரேன் சபாஷ் போட வைக்கிறார்.

இவரின் தம்பி தன் மகளை பற்றி தப்பாக பேசும் போது எல்லாம் மகள் மீது இவர் வைக்கும் நம்பிக்கை சூப்பர்.

என்னடா… ஹீரோயின் வெண்பா பத்தி சொல்லையே பாக்குறீங்களா.? அவர்தான் படத்தின் ஆணிவேர். பக்கா பள்ளி மாணவியாக பளிச்சிடுகிறார். இதற்கு முன் இவர் நடித்த பள்ளி பருவத்திலே.. காதல் கசக்குத்தய்யா ஆகிய படங்களிலும் இவரின் கேரக்டரே பளிச்சிட்டது. இதிலும் சூப்பர்.

ஒரு பக்கம் காதலன், ஒரு பக்கம் அப்பா என அழகான தவிப்பான நடிப்பை கொடுத்துள்ளார். க்ளைமாக்சில் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்துள்ளார். அது என்ன மாதிரியான விசயம் என்று சொன்னால் கதை தெரிந்துவிடும்.

அடிமுறை Vs கிக் பாக்ஸிங்… பட்டாஸ் விமர்சனம்

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இளையராஜாவின் மகள் பவதாரிணி தன் பெயரை ராஜா பவதாரிணி என மாற்றி இசையமைத்துள்ளார். பாடல்கள் ரசிக்க வைக்கிறது. அதுபோல் பின்னணி பேசப்படும் வகையில் உள்ளது.

ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். காதல் காட்சிகளை கலர்ப்புல் காட்சிகளாக மாற்றியிருக்கிறார். முதல் பாதியில் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம் எடிட்டர்.

இந்த படத்தை அசோக் தியாகராஜன் இயக்கியுள்ளார். ஒரு பள்ளி மாணவி ஆட்டோ டிரைவர் காதல் என பழக்கப்பட்ட கதையை கொஞ்சம் சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்துள்ளார்.

படிக்கும் மாணவிகள் தங்கள் கவனத்தை சிதறவிட்டால் என்ன மாதிரியான இழப்புகளை சந்திப்பார்கள் என்பதையும் லட்சியம் உள்ள பெண் எப்படி சாதிப்பாள் என்பதையும் அழகாக காட்டியிருக்கிறார்.

ரஜினி தர்பார்டா.. ச்சும்மா கிழி.. தர்பார் விமர்சனம் 4/5

‘ஆனால் கதையை இன்னும் விறுவிறுப்பாக காட்டியிருந்தால் நல்லதாக அமைந்திருக்கும். பெரிதாக ட்விஸ்ட் ஒன்றும் இல்லை என்பதால் அட.. இது தெரிஞ்ச விஷயம்தானே என சொல்ல வைத்துவிட்டார்.

மற்றபடி தேர்வு சமயத்திற்கு முன்பு… காதலர்கள் தினத்திற்கு முன்பு… மாயநதி படத்தை ரிலீஸ் செய்திருப்பதால் இது பள்ளி மாணவர்களிடையை விழிப்புணர்வை ஏற்படுத்தும்..

குழந்தைகளை மீது நம்பிக்கை வைத்தாலும் அதற்கும் எல்லை உண்டு என்பதையும் நாசூக்காக சொல்லியுள்ளார் டைரக்டர்.

ஆக… மாயநதி… வெல்டன் வெண்பா

Maayanadhi review rating

மாஸ்டர் ஆஃப் மர்டர்… சைக்கோ விமர்சனம் (18+)

மாஸ்டர் ஆஃப் மர்டர்… சைக்கோ விமர்சனம் (18+)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மிஷ்கின், இசைஞானி இளையராஜா, நடிகர் உதயநிதி, இயக்குனர் ராம், நித்யா மேனன், அதிதி ராவ் என நட்சத்திரங்கள் இணைந்துள்ள படம் இந்த சைக்கோ.

கதைக்களம்..

சீரியல் கில்லர் செய்திகளை கதைகளை நாம் படித்திருப்போம்.

அதுபோல் ஒரு சைக்கோ ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கும் பெண்களை கடத்தி கழுத்தை வெட்டி கொடூராமாக கொலை செய்கிறான். சில விபச்சாரிகளை இதை முறையில் கடத்தி கொல்கிறான். (ஒரு வேளை அவர்களும் அந்த தொழிலில் சிறந்தவர்களா..?)

ஆனால் அவன் யார்? எங்கிருக்கிறான்? என 18 மாதங்களாக போலீஸ் தேடுகிறது. ஆடுகளம் நரேன் மற்றும் இயக்குனர் ராம் இருவரும் இந்த வழக்கை விசாரித்தும் பலனில்லை.

ஒரு கட்டத்தில் உதயநிதியின் காதலி அதிதி ராவ் கடத்தி செல்கிறான் சைக்கோ.

கண் பார்வையற்ற உதயநிதி போலீஸ் உதவியை நாடுகிறார். ஆனால் எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் தவித்து நிற்கிறது.

எனவே போலீசாக பணி புரிந்து தற்போது வீல் சேரில் வாழ்க்கையை ஓட்டும் நித்யா மேனன் உதவியை நாடுகிறார் உதயநிதி.

இவர்கள் அதிதியை கண்டு பிடித்தார்களா? எப்படி கண்டுபிடித்தார்கள்? யார் அந்த சைக்கோ? ஏன் இப்படி ஆனான்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்….

கண் பார்வை இல்லை என்பதால் கூலிங் கிளாஸ் அணிந்தபடியே வருகிறார் உதயநிதி. அதனால் அவரிடம் பெரிய எக்ஸ்பிரசன் எதுவும் தெரியவில்லை. கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். முக்கியமாக புத்திசாலித்தனத்தோடு இவர் செய்யும் சில காட்சிகள் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கிறது.

சைக்கோ வில்லன் தான் படத்தின் மெயின் பில்லர். ஸ்மார்ட் லுக் ஆனால் கொடூரத்தின் உச்சம் தொட்டு இருக்கிறார். க்ளைமாக்சில் இவர் அழும் காட்சிகள் நமக்கே பயம் வரும்.

பெண்ணா இருந்தா ரேப் செஞ்சிருப்பேன்.; ஓவரா பேசி சிக்கிய மிஷ்கின்

இவரின் டீச்சராக வருபவம் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார்.

இரண்டு நாயகிகள் அதிதி ராவ். அனுதாப நடிப்பில் நம்மை கவர்கிறார். ஆனால் க்ளைமாக்சில் இவர் எடுக்கும் முடிவு சரியல்ல. ஒரு வாரமாக வில்லன் கூடாரத்தில் இருக்கிறார். அப்படியே ப்ரெஷ்ஷாக இருக்கிறார். அது தான் எப்படி தெரியல…

நித்யா மேனன் வீல் சேரில் உட்கார்ந்தாலும் நடிப்பில் நிற்கிறார். ஆனால் பச்சை பச்சையாக இவர் பேசுவதை கேட்டால் நமக்கே அருவருப்பாக இருக்கும்.

ரேனுகா, ராம், ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, பாவா செல்லத்துறை ஆகியோர் நிறைவான தேர்வு.

படத்தின் ப்ளஸ்…

இளையராஜா பாடல்கள் பின்னணி இசை… (உன்ன நினைச்சி நினைச்சி..)

சைக்கோ வில்லன் (அங்குலி மாலி ராஜ்குமார்) & அதிதி ராவ் & சைக்கோவின் டீச்சர் ப்ரீதம் நடிப்பு

மிஷ்கின் மேக்கிங் & வசனங்கள் & மிரள வைக்கும் ஒளிப்பதிவாளர் தன்வீர் மிர்

துப்பறிவாளன் விமர்சனம் .. துப்பறிவாளன்… மிரட்டல் டிடெக்டிவ்

சேசிங் காட்சியில் உயிர் போகும் வரை உன்னை தேடுவேன் என்ற பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது. அதுபோல் கேமரா ஆங்கிள் அத்தனையும் அழகு. அதுபோல் பன்றி பண்ணைகளும் அந்த இடங்களும் அழகு.

படத்தின் மைனஸ்…

சைக்கோ உருவாக காரணமும் அவன் பெண்களை கொல்வதற்கான காரணமும் சுத்தமாக ஒட்டவில்லை.

15 கொலைகளை செய்யும் ஒருவனை எவனாவது மன்னிப்பார்களா? அப்படி என்றால் தான் மட்டும் தப்பித்து விட்டால் மற்றவர்களின் கதி..?

நித்யா மேன்னின் வல்கர் பேச்சு.. அம்மாவை சனியனே என்று சொல்வது முதல்… கெட்டவார்த்தைகளில் உச்சத்தை தொடுவது…

கொடூர கொலைகளை அப்படியே காட்டுவது… பெண் உடலில் ஜட்டி & பிரா மட்டும் வைத்து தலையில்லாத முண்டமாக காட்டுவது என பயங்கரம்.

கொலை செய்யும் முக்கியமான இடங்களில் (ரோடுகளில் கூடவா) ஒரு இடத்தில் கூடவா சிசிடிவி கேமராக்கள் இல்லை. முக்கியமாக கார் பார்க்கிங் ஏரியா.

என்னதான் ஏ சர்ட்டிபிகேட் படமாக இருந்தாலும் இவ்வளவு வல்கரா..?

சைக்கோ-வை முடித்துவிட்டு துப்பறிவாளன்-2வை இயக்கும் மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் பல தரமான படங்களை பார்த்திருக்கிறோம். இது கொலைக்களம் படம்.

மேலே நிறை குறைகளை சொல்லியிருக்கிறோம். எனவே நீங்களே முடிவு செய்து படத்தை பாருங்கள்.

தயவுசெய்து குழந்தைகள் மற்றும் 18 வயது நிரம்பாதவர்கள். மென்மையான மனம் கொண்டவர்கள் & கர்ப்பிணிகள் பார்க்க வேண்டாம்.

ஆக இந்த சைக்கோ.. மாஸ்டர் ஆஃப் மர்டர்

Psycho review rating

பெண்களே உஷார்… ராஜாவுக்கு செக் விமர்சனம் 3.25/5

பெண்களே உஷார்… ராஜாவுக்கு செக் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட நாள்களுக்கு பிறகு சேரன் நாயகனாக நடித்துள்ள படம். இந்த படத்தை சாய் ராஜ்குமார் என்பவர் இயக்கியிருக்கிறார். இவர் ராஜ்குமார் என்ற பெயரில் மழை படத்தை இயக்கியிருந்தார்.

கதைக்களம்..

சேரன்.. அவரது மனைவி சரயு மோகன். இவர்களது மகள் நந்தனா மோகன்.

கிரைம் ப்ரான்ச் போலீஸ் சேரன். இவருக்கு தன்னை அறியாமல் அடிக்கடி உறங்கும் வியாதி உள்ளது. இதனால் இவரது மனைவி பிரிந்து செல்கிறார்.

கோர்ட்டில் விவாகரத்து கேஸ் நடக்கிறது. அப்போது தன் மகளை வெளிநாட்டில் படிக்க வைக்க அம்மா ஆசைப்படுகிறார்.

எனவே தன் மகள் 10 நாட்களாவது என்னுடன் இருக்க வேண்டும் என விரும்பி கோர்ட்டில் கேட்கிறார் சேரன். கோர்ட்டும் உத்தரவிடுகிறது.

பத்து நாட்களும் மகள் மீது பாசத்தை பொழிகிறார் சேரன். பிரிவதற்கு முதல் நாள் மகளின் பிறந்தநாள் வருகிறது.

அன்று வேலை காரணமாக சரியான நேரத்திற்கு சேரனால் வீட்டிற்கு வரமுடியவில்லை.

அடிமுறை Vs கிக் பாக்ஸிங்… பட்டாஸ் விமர்சனம்

எனவே தன் பிறந்தநாள் பார்ட்டியை அப்படியே ரெக்கார்ட்டு செய்து தன் தந்தைக்கு வீடியோவாக அனுப்புகிறார் மகள்.

சேரன் அந்த வீடியோவை பார்க்கும்போது அதில் கலந்துக் கொண்ட ஒரு நபர் மகளை கடத்துகிறார். கடத்திய பின் லைவ் வீடியோ வருகிறது.

அதன்பின்னர் சேரன் என்ன செய்தார்? அவன் யார்? சேரன் மகளை கடத்த என்ன காரணம்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சேரன் அவரது மகள் நந்தனா இருவரும் கச்சிதம். சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். தன் மகளை ஒருவன் கடத்தி வைத்த லைவ் வீடியோவை பார்க்க முடியாமல் தவிக்கும் காட்சிகள் சேரனின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். வெளியில் சொல்ல முடியாமல் கலங்கும் காட்சிகள் அருமை.

அழகான அன்பான மகளாக நந்தனா. இவருக்கு விரைவில் ஹீரோயின் சான்ஸ் வரும்.

இண்டர்நெட்டில் பெண்கள் சிக்கும் கேரக்டரை அருமையாக உணர்த்தியுள்ளார். இனியாவது சிறுமிகள் இண்டர்நெட்டை பார்த்து உஷாராக உபயோகிக்க வேண்டும்.

சேரனின் மனைவியாக சரயு மோகன். சில காட்சிகள் என்றாலும் தன் கண்களாலேயே அனைத்தும் வெளிப்படுத்து விடுகிறார். பூர்விகம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.

மாடல் பெண்ணாக ஸ்ருஷ்டி டாங்கே. கொஞ்சம் கவர்ச்சி கொஞ்சம் நடிப்பு கொஞ்சம் தவிப்பு என அசத்தியிருக்கிறார்.

வில்லனாக நடித்திருப்பவர் இர்ஃபான். நல்ல உயரம். ஸ்மார்ட். பணக்கார வீட்டு பையன் கேரக்டருக்கு பொருத்தம். இவர்களது ப்ளாஷ்பேக் பணக்கார திமிர்.

ரஜினி தர்பார்டா.. ச்சும்மா கிழி.. தர்பார் விமர்சனம் 4/5

அதே சமயத்தில் வில்லன் வேடத்தில் இன்னும் மிரட்டியிருந்தால் நல்லது.

சேரனின் குழுவாக வரும் போலீஸ்காரர்கள் கம்பீரம் போதவில்லை.

சேரன் படம் முழுவதும் சரக்கு அண்ட் தம் அடிப்பது கொஞ்சம் ஓவர்தான்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவாளரின் கேமரா கை வண்ணம் ரசிக்க வைக்கிறது.

இசையமைப்பாளர் வினோத் எஜமானியா. பாடல்களும் பின்னணி இசையும் கச்சிதம்.

படத்தின் கதைக்களம் சரியாக இருந்தாலும் சொல்லப்பட்டதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். க்ளைமாக்சில் நிறைய நாடகத்தனம் உள்ளது.

ஒரு இடத்தில் பெண்கள் கடத்தி வைத்திருக்கும்போது ஸ்ருஷ்டி மட்டும் அங்கே வந்து அந்த கதவை தட்டுவது எப்படி? கடத்தியவர்கள் அங்கே என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்.

அதுபோல் இண்டர்நெட் போன் கால்கள் இன்னும் டெக்னாலஜியை பயன்படுத்தியிருக்கலாம். சொல்லி வைத்த போல் சில காட்சிகளை நகர்த்தியிருக்கிறார். வில்லன் முகத்தில் பெரிதாக எந்த வில்லத்தனமும் இல்லை. இன்னும் மெச்சூரிட்டி தேவை.

மற்றபடி சமுதாயத்திற்கு தேவையான கதையில் மகள் அப்பா பாசத்தையும் அருமையாக கொடுத்துள்ளார் சாய் ராஜ்குமார்.

ஆக இந்த ராஜாவுக்கு செக்… பெண்களுக்கு உஷாரான படம்.

அடிமுறை Vs கிக் பாக்ஸிங்… பட்டாஸ் விமர்சனம்

அடிமுறை Vs கிக் பாக்ஸிங்… பட்டாஸ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துரை செந்தில்குமார் இயக்கிய கொடி படத்தில்தான் முதன்முறையாக 2 வேடங்களில் நடித்திருந்தார் தனுஷ். தற்போது மீண்டும் அதே கூட்டணி 2வது முறையாக 2 வேடத்தை கொடுத்துள்ளது.

கதை என்ன?

திருட்டு வேலைகளை செய்யும் தனுஷ் (சக்தி) இவருக்கு பட்டாஸ் என்ற பட்டப்பெயரும் உண்டு. இவரும் இவரது நண்பரும் தங்கள் கைவரிசையை காட்டாத இடமில்லை.

ஒரு நாள் அந்த ஏரியாவில் பந்தா காட்டும் ஹீரோயினின் கிக் பாக்ஸிங் கிளப்பில் தங்கள் கைவரிசையை காட்ட செல்கின்றனர்.

மற்றொரு முறை அதே நாயகிக்காக அங்கு உதவ செல்கிறார் தனுஷ். அப்போது எதிர்பாரா விதமாக சிறையில் இருந்து வெளியான சினேகாவும் அங்கு வருகிறார்.

கிக் பாக்ஸிங் கிளப்பின் உரிமையாளர் நவீன் சந்திராவை கொல்ல அங்கு சினேகா வர அவர் தனுஷை பார்த்து இன்ப அதிர்ச்சியடைகிறார்.

நவீனை சினேகா கொல்ல வரக் காரணம் என்ன? தனுஷ் யார்? சினேகா யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரள கரையோரத்தில் தனுஷ்; மீண்டும் மலையாள நடிகையுடன் ஜோடி

கேரக்டர்கள்..

க்ளீன் ஷேவ் மற்றும் தாடி வைத்த தனுஷ் என இரு வேடத்திலும் தனுஷ் நல்ல வித்தியாசம் காட்டியுள்ளார். புள்ளிங்கோ ஸ்டைலிலும் அடிமுறை கலையிலும் வெளுத்து கட்டியிருக்கிறார்.

படத்தில் நாயகி சிநேகா தான். ஆக்சன் எமோசன் என பிரத்து மேய்ந்துள்ளார். சண்டைக் காட்சியிலும் அவர் அழகுதான்.

மற்றொரு நாயகியாக வரும் மெஹ்ரின் பிர்சாடா வழக்கமான நாயகி.

முனிஸ்காந்த் மற்றும் தனுஷின் நண்பராக வருபவரின் காமெடி சூப்பர்.

நாசர் அசத்தல். வில்லத்தனத்தில் நவீன் சந்திரா மிரட்டல்.

தனுஷை இயக்க ஆசைப்படும் பேட்ட வில்லனின் ப்ரதர்

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விவேக் மெர்வின் இசையில் பாடல்களில் சில் ப்ரோ பாடல் பட்டைய கிளப்பியுள்ளது.

அதுபோல ஓம் பிரகாஷின் ஒளிப்பதில் காட்சிகள் கலர்புல்லாக உள்ளது.

தமிழர்கள் மறந்துபோன அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியுள்ள துரை செந்தில் குமாரை பாராட்டியே ஆக வேண்டும்.

முதன்முறையாக ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த அசுரன் தனுஷ்

பொதுவாக வர்மக்கலை என்றால் கேரளா என்பதை நாம் கேட்டு அறிந்திருக்கிறோம். ஆனால் இதில் தமிழர்களின் பெருமையை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

இதுபோன்ற கலையை உடனடியாக கற்கமுடியாது. அதற்கு குறைந்த பட்சம் 1 வருடம் கொடுத்திருக்கலாம். 3 மாதம் குறைவான காலம். அதை சரியாக செய்திருக்கலாம் டைரக்டர். அதுபோல படம் முடியும் என்று நினைத்தால் அதன்பின்னர் ஒரு கையில் அடிப்பட்டு மற்றொரு கையால் சண்டை போடும் காட்சிகள் நீள்கிறது.

ஆக… பட்டாஸ் அடிமுறை Vs கிக் பாக்ஸிங்

First on Net ரஜினி தர்பார்டா.. ச்சும்மா கிழி.. தர்பார் விமர்சனம் 4/5

First on Net ரஜினி தர்பார்டா.. ச்சும்மா கிழி.. தர்பார் விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்…
ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி, ஸ்ரீமன் மற்றும் பலர்.

இசை அனிருத்

ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்

எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு லைகா

பிஆர்ஓ… ரியாஸ் அஹ்மது மற்றும் டைமண்ட் பாபு

கதைக்களம்…

மும்பையில் போலீஸ் கமிஷ்னராக பணிபுரிகிறார் ஆதித்யா அருணாச்சலம் (ரஜினி). அவருக்கு மனதளவில் சில பிரச்சினைகள் உள்ளது.

இருந்தபோதிலும் என்கௌன்டர் பெயரில் கொலைகளை நடத்துகிறார். இதனால் மனித உரிமை விசாரணையிலும் சிக்குகிறார்.

போதை கும்பல் தலைவன் மும்பை டான் சுனில் செய்யும் போதை அராஜகத்தில் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே ரஜினி தன் அதிகாரத்தை அடக்குமுறையை எந்த விதிமுறையும் இல்லாமல் பட்டைய கிளப்புகிறார்.

இதனால் இவரின் போலீஸ் துறையில் பிரச்சினை வருகிறது. அதாவது போலீசுக்கு மரண பயத்தை உண்டாக்குகிறார் வில்லன்..

இறுதியாக என்ன செய்தார்? ரஜினி என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ரஜினி ரஜினி ரஜினி… வேற லெவல் யா தலைவா… ஸ்டைலிஷ் ரஜினியை மீண்டும் பார்க்கலாம்… நயன்தாராவுடன் ரொமான்ஸிலும் பின்னி எடுத்திருக்கிறார்… ஆக்சன் & காமெடியில் கிங் என மீண்டும் நிரூபித்துள்ளார்.

ரஜினி கவுண்டமணி காமெடி போல யோகிபாபு உடன் செம கெமிஸ்ட்ரி.. உன்ன வச்சிகிறேன் டைமிங் காமெடி சூப்பர்.. கோலமாவு கோகிலா காமெடியையும் கிண்டலடித்துள்ளனர்.

நிவேதா தாமஸ் அழகான மகளாக சிறப்பான நடிப்பு..

ஜன்னல் ஜாக்கெட் போட்ட நயன்தாரா கொள்ளை அழகு.. ஆனால் பெரிதாக ஸ்கோப் இல்லை.

வில்லன் சுனில் ஷெட்டி கேரக்டரை டெவலப் செய்திருக்கலாம். ஸ்ரீமன் கேரக்டர் வலுவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

அனிருத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சரி.. அதிரடி. அசத்தல். ரஜினி ரசிகர்கள் செம மியூசிக்கல் ட்ரீட் கொடுத்துள்ளார். ஆனால் நிறைய தேவா மியூசிக்கை பார்க்க கேட்க முடிகிறது.

டும்..டும்.. பாட்டு குடும்பத்தினருக்கு பிடிக்கும் என்றால் கண்னுல திமிரு மற்றும் சும்மா கிழி பாடல் நம்மை எழுந்து ஆட வைக்கும். வெறித்தனம் காட்டியிருக்கிறார்.

ரஜினியின் ஸ்டைலுக்கு ஏற்ப பாடலும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் வேற லெவல். படத்தை கலர்புல்லாக கொடுத்துள்ளார். இவரையும் ஒரு டயலாக்கில் கலாய்த்துள்ளார் யோகி பாபு.

திருநங்கை & டான்ஸ் பைட் மரண மாஸ்..

பைட் மாஸ்டர்கள் ராம் லட்சுமன் மற்றும் பீட்டர் ஹெயின் தெறிக்க விட்டுள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அனல் பறக்கும் சண்டையில் அதகளம் செய்துள்ளார் சூப்பர் ஸ்டார். க்ளைமாக்ஸ் பைட் ஃபயர் பத்தல..

இது ரஜினிக்கான கதையா? அல்லது கதைக்காக ரஜினியா? என தெரியாத அளவுக்கு இரண்டையும் கலந்துக் கொடுத்துள்ளார் முருகதாஸ்.

இவருக்கே உரிய பாணியில் கதை மற்றும் சமூக கருத்து ஆகியவற்றை சிறப்பாக செய்துள்ளார்.

முக்கியமாக இடைவேளை வரை ரஜினி டச்.. அதன் பின்னர் முருகதாஸ் சென்டிமெண்ட் டச்… இதுதான் படத்தின் வேகத்தை குறைக்கிறது..

இதுபோன்ற வெறித்தனமான போலீஸ் இருந்தால் நாட்டில் குற்றம் செய்யவே எவனாயிருந்தாலும் பயம் வரும்..

இடைவேளை & க்ளைமாக்ஸ் சீன்ஸ் ரஜினி டச் பத்தல..

இடைவேளை பின்னர் மகள் & பாச சென்டிமெண்ட் குடும்பங்களை கவரும்.

ஆக ரஜினி ஸ்டைலில் சொன்னால் போலீஸை ரைட்ல வச்சுக்கோ.. லெப்ட்ல வச்சுக்கோ.. ஸ்டிரைட்டா வச்சுக்காத…

ஆக மொத்தம். தர்பார்.. பொங்கல் சமயத்தில் தீபாவளி விருந்து

Rajinis Darbar review rating

கல்வியின்றி வாழ்வேது..?. பிழை விமர்சனம் 3.25/5

கல்வியின்றி வாழ்வேது..?. பிழை விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சார்லி, மைம்கோபி, மரியம் ஜார்ஜ் மூவரும் கல் உடைக்கும் தொழிலை செய்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் மகன்களை நன்றாக படிக்க வைக்க கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் இவர்களின் பிள்ளைகளோ சுட்டித்தனம் செய்வது ஊர் மக்களிடம் பிரச்சினை என இவர்களுக்கு தொந்தரவாக உள்ளனர்.

ஒரு நாள் விளையாட்டுத்தனமாக தங்களை விட நன்றாக படிக்கும் மாணவனை பாதாள கிணற்றில் தள்ளி விடுகின்றனர்.

அவன் உயிர் பிழைத்தாலும் அந்த பகுதியில் இது பிரச்சினையாக தந்தையர்கள் மூவரும் இவர்களை அடி உதை கொடுத்து பின்னி எடுக்கின்றனர்.

எனவே வீட்டை வீட்டு சென்னைக்கு ஓடி விடுகின்றனர். அங்கு செலவுக்கு பணமில்லாமல் அலையும் போது தெரியாமல் ஒரு தாதாவிடம் சிக்கி விடுகின்றனர்.

அவன் இவர்களை குழந்தை தொழிலாளர் என்பதால் யாருக்கும் தெரியாமல் மிரட்டி வேலை வாங்குகிறார்.

அதன் பின்னர் என்ன ஆனது? அவனிடம் இருந்து எப்படி தப்பினார்கள்? குடும்பத்துடன் சேர்ந்தார்களா? என்பதே பட க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்..

காக்கா முட்டை படத்தில் பெரிய பையனாக நடித்த ரமேஷ், அப்பா படத்தில் நடித்த நஷாத் மற்றும் கோகுல் ஆகிய மூவரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஊர் மக்களிடம் இவர்கள் செய்யும் பிரச்சினைகளை கூட ரசிக்க வைக்கிறது. ரமேஷ், நஷாத் இருவரும் பட்டைய கிளப்பியுள்னர்.

சென்னை ஓட்டலில் இவர்கள் கஷ்டங்களை பார்த்தால் நமக்கே இவர்கள் மீது அனுதாபம் வரும்.

சார்லி, மைம்கோபி, மரியம் ஜார்ஜ் ஆகிய மூவரும் ஏழை தந்தைகளாக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். தங்கள் கேரக்டரில் சூப்பர்.

இவர்களுடன் தர்ஷினி, நாகவேந்திரா சிரஞ்சீவி, பிருந்தா, அரவிந்த் காந்த், வினோத், அபிராமி ஆகியோரும் அசத்தல்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவில் எந்த குறையும் வைக்காமல் செய்துவிட்டார் பாக்கி. இசை பணிகளை பைசல் என்பவர் செய்துள்ளார். பாராட்டுக்குரியவர் தான்.

இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ராஜவேல் கிருஷ்ணா. பெற்றோர் பேச்சை கேட்காத வாழ்க்கையில் உருப்படாது.

அதுபோல் கற்க வேண்டிய வயதில் கல்வியை கற்காவிட்டால் வாழ்க்கை நரமாகிவிடும் என்பதையும் ஆணித்தரமாக சொன்ன இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணாவை வெகுவாக பாராட்டலாம்.

படத்தில் 2 விதமான காதலர்களை காட்டியுள்ளார். கிராமத்து காதலர்கள் காட்சிகள் முழுமையாக இல்லை. அதை டைரக்டர் கவனித்திருக்கலாம்.

சென்னை சிட்டி காதலில் சாதியை சாடியிருப்பது சிறப்பு. அதுபோல் உண்மையான காதல் எதையும் பார்ப்பதில்லை என்ற கருத்து ஓகே தான். ஆனால் அந்த காதலை சொன்ன விதம் சரியாக படவில்லை. இந்த இரண்டு காதல்களையும் படத்தில் இருந்து கட் செய்திருந்தாலும் தப்பில்லை. இதனால் படத்திற்கு எந்த பலனும் இல்லை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் பார்க்க வேண்டிய படம் தான் இந்த பிழை.

Pizhai movie review rating

More Articles
Follows