தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி, பேபி யுவஸ்ரீ, மாளவிக்கா, விஷால் தேவ், விக்கி மற்றும் பலர்.
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : கவேமிக் யு அரி
படத்தொகுப்பு : ராஜா முகம்மது
இயக்கம் : அஸ்வின் ஐயர் திவாரி
பிஆர்ஓ : ரியாஸ் கே அஹ்மது
தயாரிப்பாளர் : தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய்.
கதைக்களம்…
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி யுவஸ்ரீ படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கிறார். முக்கியமாக கணக்கு பாடத்தில் பூஜ்யம்தான் எடுப்பதால் இவளது அம்மா அமலா பால் கவலைப்படுகிறார்.
ரேவதி வீட்டில் அனைத்தும் வேலைகளை செய்யும் இவர், ரேவதியிடம், மகளை நன்றாக படிக்க வைக்க ஐடியா கேட்கிறார்.
அவர் சொன்னப்படியே அமலா பால் அவதாரம் எடுத்து தன் மகளை கலெக்டராக்குகிறார். என்ன செய்தார்? எப்படி அவரது மகள் படித்தார் என்பதே இந்த அம்மா கணக்கு.
கதாபாத்திரங்கள்…
படத்தின் ஹீரோ ஹீரோயின் எல்லாம் அமலா பால்தான். ஹோட்டலில் பத்து பாத்திரம் தேய்ப்பதும், ரேவதிக்கு அனைத்து பணிவிடைகளை செய்வதும், மீன் மார்க்கெட்டில் வேலை செய்வதும் என கவர்கிறார்.
காலையில் தொடங்கும் இவரது பணிகள் இரவு வரை நீள்வதும் பார்ப்பவரை மனதை கொஞ்சம் வருத்தமடைய செய்யும்.
சமுத்திரக்கனியிடம் அட்மிஷன் கேட்பது, கலெக்டரிடம் பேசுவது என அசத்தினாலும் மகளுக்காக ஸ்கூல் யூனிபார்ம் மாட்டிக் கொண்டு செல்வது எல்லாம் கொஞசம் ஓவர்தான்.
இதில் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. எப்போதும் இல்லாமல் மிடுக்கான பிரின்சிபாலாக வந்தாலும் பாடத்தில் அசத்துவது ரசிக்கலாம்.
பெற்றோரின் வலியை புரிந்துக் கொள்ளாமல், அம்மாவை திட்டுவதும், கேவலப்படுத்துவம், அசிங்கமாக பேசுவதும் இன்றைய அலட்சியமான குழந்தைகளை (ஒரு சிலரை) அடையாளப்படுத்தியிருக்கிறார் யுவஸ்ரீ.
யுவஸ்ரீ நடிப்பில் நல்ல மெச்சூர்ட்டிக்கு இருக்கிறது. இறுதியில் அம்மாவின் கனவை பற்றி பேசி கலங்க வைக்கிறார்.
ரேவதிக்கு பெரிதாக வேலையில்லை. மற்றவர்களுக்கும் அதே நிலைமைதான். ஒரு சில மாணவர்கள் கவனம் ஈர்க்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இளையராஜாவின் பின்னணி இசை படம் முழுக்க பேச வைக்கிறது. உனக்கும் எனக்கும், கனவுகள், இந்த வாழ்க்கை பாடல்கள் கேட்கலாம்.
அரசுப்பள்ளி என்பதாலும் மற்ற காட்சியிலும் படம் முழுவதும் ஒரு இருட்டான சூழ்நிலையே காணப்படுகிறது. கவேமிக் யு அரியின் ஒளிப்பதிவில் இரவு காட்சிகள் ஓகே.
எடிட்டிங்கை ராஜா முகம்மது சரியாக செய்திருந்தாலும் இறுதிகாட்சியில் எல்லாம் திடீரென முடிவது மனதில் ஒட்டவில்லை.
படத்தின் ப்ளஸ்….
- பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேறு வழியில் முயற்சித்திருக்கிறார்கள்.
- கணவன் இல்லாத பெண்கள் படும் அவஸ்தைகளை காட்சிகளில் உணர்த்தியிருக்கிறார்கள்.
- பின்னணி இசையில் உயிர் கொடுத்துள்ளார் இசைஞானி.
படத்தின் மைனஸ்…
- யுவஸ்ரீக்கு படிக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை. அவர் படிக்கவில்லை என்பது அவரது திமிர். ஆனால் அமலா பள்ளியில் படிக்க செல்வது எப்படி சாத்தியம்? அதுவும் திடீரென கணக்கு பாடத்தில் 52 மார்க் எப்படி?
- நாங்க படிக்கிறப்ப எல்லாம் பாய்ஸ் கேர்ள்ஸ் ஒரே பெஞ்சில உட்கார விடமாட்டாங்க. இப்போ மாத்திட்டாங்களா என்ன? அரசுப்பள்ளியில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருப்பது எப்படி??
- ஏழ்மையாக இருக்கிறார் அமலாபால். ஆனால் அவரது முகத்தில் வசதியான கலையம்சம் உள்ளதே. அதுகூட ஓகே. வீடே மிடில் கிளாஸ் போல்தான் தோன்றுகிறது.
அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் காட்சியும் படமாக்கலும் ஓகே. ஆனால் நிறைய லாஜிக் மீறல் உள்ளதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.
மொத்தத்தில் அம்மா கணக்கு… பெண்களுக்கான எனர்ஜி..!