ஸ்டிரைக் இல்லாம பிரச்னையை சரி செய்ய முடியாதா விஷால்..? அருள்நிதி கேள்வி

ஸ்டிரைக் இல்லாம பிரச்னையை சரி செய்ய முடியாதா விஷால்..? அருள்நிதி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Without Strike Why dont you solve the problems Arulnithi question to Vishalக்யூப் டிஜிட்டல் கட்டணம், தியேட்டர் டிக்கெட் கணினி மயமாகவேண்டும் என பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்ய தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் மேற்கொண்டு வருகிறது.

இதனால் கடந்த 3 வாரங்களாக எந்த ஒரு புதிய தமிழ் படமும் ரிலீஸ் ஆகவில்லை.

ஆனால் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அவர்கள் பழைய ஹிட்டான படங்களையும், மற்ற மொழி படங்களையும் திரையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அருள்நிதி விஷாலிடம் சரமாரியாக பல கேள்விகள் கேட்டுள்ளார்.

“ஒரு நல்ல காரியத்திற்காக தயாரிப்பாளர் சங்கம் போராடுவது நல்லதுதான். கேள்வி கேட்பது ஈசி என்பது எனக்கு தெரியும்.

ஆனால் வேலைநிறுத்தம் செய்யாமலேயே நீங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்திருக்கலாமே.

இதற்காக தான் உங்களை தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்..? ” என தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

arulnithi tamilarasu‏ @arulnithitamil
It’s good that the producer council is fighting for the well being of all the producers .but it’s high time this strike gets over.i know questioning is easy .but u can try to handle this without the strike also.thats y ur elected.

Without Strike Why dont you solve the problems Arulnithi question to Vishal

டெம்பர் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க முடியாமல் விலகிய மாதவன்

டெம்பர் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க முடியாமல் விலகிய மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Due to shoulder surgery Madhavan refused to act in Temper hindi remakeதமிழ் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் மாதவன்.

தமிழில் அவர் கடைசியாக ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் கடந்த மாதம் தோள்பட்டை அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இந்த காயம் குணமாக இன்னும் சில மாதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

இதனிடையில் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து ஹிட்டான ’டெம்பர்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிப்பதாகக் கூறப்பட்டது.

இதில் ரன்வீர் சிங் ஹீரோ. ரோகித் ஷெட்டி இயக்குகிறார்.

தான் முழுவதும் குணமாக இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என மாதவன் தெரிவித்துள்ளார்.

ரோகித் ஷெட்டி படங்களின் ரசிகன் நான். அவரது இயக்கத்தில் நடிக்க முடியாமல் போனது வருத்தம்தான்’ எனவும் தெரிவித்துள்ளார்.

Due to shoulder surgery Madhavan refused to act in Temper hindi remake

ரஜினி பற்றிய கேள்விக்கெல்லாம் மே 20ல் பதில் சொல்லும் தமிழருவி மணியன்

ரஜினி பற்றிய கேள்விக்கெல்லாம் மே 20ல் பதில் சொல்லும் தமிழருவி மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I will answer for all questions about Rajini on 20th May says Tamilaruvi Manianவேலூர் அருகே பள்ளிகொண்டாசாவடி பகுதியில் உள்ள காந்தி பூங்கா மற்றும் காந்தி சிலையை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் புனரமைத்துள்ளனர்.

ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாவட்ட நிர்வாகி கேவி பாஸ்கர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

பூங்காவை ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட் காலையில் திறந்துவைத்தார்.

மாலையில் காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தத்தை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திறந்து வைத்தார்.

பின்னர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார் தமிழருவி மணியன்.

அவர் பேசுகையில், “எத்தனையோ ஊடகங்கள், தொலைக்காட்சிகள் என்னை அணுகி ரஜினி பற்றிக் கேட்டார்கள். கேட்கிறார்கள். ‘அவர் (ரஜினி) இதற்கு பதில் சொல்ல மறுக்கிறாரே… இது பற்றிப் பேச மறுக்கிறாரே என்றெல்லாம் என்னிடம் கேட்டார்கள்.

நான் எதற்கும் இப்போது பதில் சொல்ல மாட்டேன். எல்லா பதிலையும் வரும் மே 20 ம் தேதி, லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் கோவையில் கொடீசியா மைதானத்தில் சொல்லப் போகிறேன்.

அங்குதான் தமிழகத்தின் முதல் அமைச்சர் வேட்பாளராக ரஜினிகாந்தை காந்திய மக்கள் இயக்கம் முன்னிறுத்தப்போகிறது.

அங்குதான் யாரெல்லாம் ரஜினிகாந்தை விமர்சித்து கேள்விகளை முன்வைத்துள்ளார்களோ, அவர்களுக்கான பதில்களைச் சொல்லப் போகிறேன்.

இடையில் எங்கேயும் நான் வாய் திறப்பதாக இல்லை. இந்த மாநாடு என்பது டீசர்தான்.

காலா படத்துக்கு ரஜினிகாந்த் விட்ட டீசர் மாதிரி. ரஜினிகாந்தே தன் கட்சி, கொடியை அறிமுகப்படுத்தும் பிரமாண்ட விழாதான் மெயின் பிக்சர்..

அன்று தமிழகத்தைப் பிடித்த பீடைகள் அனைத்தும் ஒழியப் போகிறது… மக்களுக்கான நல்லாட்சி ரஜினி தலைமையில் மலரப்போகிறது,” என்றார்.

மே 20 ம் தேதி கொடீசியா மைதானத்தில் பிரமாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார் தமிழருவி மணியன்.

அந்த மாநாட்டில் வைத்துதான் ரஜினிகாந்தை தமிழகத்தின் முதல்வராக முன் நிறுத்திப் பேசவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

I will answer for all questions about Rajini on 20th May says Tamilaruvi Manian

ஏஆர். ரஹ்மான் இசையில் விஜய்யின் டிரெண்ட் சாங்

ஏஆர். ரஹ்மான் இசையில் விஜய்யின் டிரெண்ட் சாங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay croons in AR Rahman music for Thalapathy 62விஜய் படங்கள் என்றால் பாட்டு, நடனத்திற்கு என்று பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

அதுபோல் ஏஆர். ரஹ்மான் இசையை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இவர்கள் இருவரும் இணைந்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு விண்ணைத் தாண்டும் என்பதில் ஐயமில்லை.

மெர்சலை தொடர்ந்து தற்போதும் தளபதி 62ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

விஜய் பல படங்களில் பாடல்கள் பாடியிருந்தாலும் இதுவரை ஏஆர். ரஹ்மான் இசையில் பாடவில்லை.

எனவே இப்படத்தில் விஜய் பாட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

தற்போது அது சாத்தியமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

செல்ஃபி புள்ள மற்றும் கூகுள் கூகுள் பாடல்கள் போல இன்றைய டிரெணட்க்கு ஏற்ப ஒரு ட்ரெண்ட் சாங்கை விஜய் பாடவுள்ளாராம்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்குகிறார்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலட்சுமி ஆகியோரும் நடிக்கின்றனர்.

Vijay croons in AR Rahman music for Thalapathy 62

பேய் படத் திகிலை மிஞ்சும் மியூசிக் த்ரில்லர் அமுதா

பேய் படத் திகிலை மிஞ்சும் மியூசிக் த்ரில்லர் அமுதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amutha movie stillsசதர்ன் ஃப்லிம் ஃபேக்டரி” சார்பாக “சஃபீக்” தயாரிப்பில் பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கும் திரைப்படம் “அமுதா”.

திடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட “மியூக்கல்-திரில்லர்” படமான இதில் முதன்மை கதாபாத்திரமாக ஸ்ரேயா ஸ்ரீ நடிக்கிறார்.

இவருடன் அனீஸ் ஷா, லெவின் சைமன் ஜோசப், ஆஷ்னா சுதிர் மற்றும் அசிஸி ஜிப்சன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராஜேஸ் பனங்கட் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அருண் கோபன் இசையமைத்திருக்கிறார்.

“அமுதா” திரைப்படத்திற்கான கதையை 2016 -ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.அர்ஜுன்.

“அமுதா” படத்திற்கான கதையை எழுதத் தொடங்கும் போது ஆரம்பத்தையும், முடிவையும் மட்டுமே எழுதி இருக்கிறார்.

பிறகுதான் படத்திற்கான மொத்த கதையையும் எழுதி இருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “இயக்குநர் மணிரத்னம் அவர்களின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் ‘அமுதா’ என்கிற பெயரைத்தான் இப்படத்திற்கான தலைப்பாக வைத்திருக்கிறோம்.

காரணம், படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் சாதாரணமாக இல்லாமல், இதற்கு முன்பே நன்கு அறியப்பட்ட பெயராக இருக்க வேண்டும் என விரும்பினோம்”, என்றார்.

மேலும் இது பேய்ப்படமா? என்ற கேள்விக்கு, “நிச்சயமாக இது பேய்ப்படம் இல்லை. அதே நேரத்தில் பேய்ப்படத்தில் எந்தளவிற்கு திகிலும், திருப்பங்களும் இருக்குமோ அதை விட அதிகமாகவே இந்தப் படத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம்”, என்றார்.

முழுமையாக படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் நிச்சயம் படம் வெளியாகும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கேரளாவில் களை கட்டும் காலா; வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்

கேரளாவில் களை கட்டும் காலா; வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala Rajinikanthநடிகர் ரஜினிகாந்தின் ஸ்டைலுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இதனால் இவரது படங்கள் வெளியாகும் நாளை அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தற்போது வெளியீட்டுக்கு தயாராகவுள்ள காலா படத்தை ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வந்தாலும், படத்தின் வெளியீட்டில் பிரச்சினை இருக்காது என்கின்றனர் கோலிவுட் வல்லுனர்கள்.

இந்நிலையில் படம் வெளியாக இன்னும் சரியாக ஒரு மாதம் உள்ள நிலையில் தற்போதே கேரளாவில் காலா படத்தின் டிக்கெட்டுகளை விற்க ஆரம்பித்துவிட்டனர்.

அதிகாலை 4 மணி முதல் காட்சிகள் திரையிடப்படவுள்ளது.

அதற்கான டிக்கெட்டுக்களை புக் செய்த ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

காலாவை காண தற்போதே வெறித்தனமாக காத்திருக்கிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Kerala Rajini fans waiting for Kaala release Started selling tickets

kaala kerala ticket

More Articles
Follows