விஷாலின் இரும்பு திரை-யை திரையிட முடியாமல் தவிக்கும் பிரபலம்

விஷாலின் இரும்பு திரை-யை திரையிட முடியாமல் தவிக்கும் பிரபலம்

irumbu thiraiவிஷால் தயாரித்து நடித்துள்ள மே 11 அன்று வெளியாக உள்ள படம் *இரும்பு திரை*.

அதை வெளியிட முடியாமல் அப்படத்தை தமிழக வெளியீட்டு உரிமை வாங்கியுள்ள ஸ்ரீதரன் தவிப்பதாக கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக விநியோகஸ்தர் ஸ்ரீதரன் மற்றும் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பி.டி.செல்வகுமார் கூறுகையில்..

இப்படத்தை வெளியிடாமல் தடுப்பது சென்னை செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி மற்றும் பெடரேஷன் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அருள்பதி மிரட்டியதற்கான ஆதார ஆடியோ அவர்களிடம் உள்ளதாகவும், அதை தமிழக காவல் துறை, சி.பி.ஐ போலீஸ் மற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நியாயம் வேண்டி புகார் கொடுப்பதோடு வழக்கும் தொடர போவதாக பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.

மேலும் நாளை மே 9ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இது சம்பந்தமாக சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜாக்கி ஷெராப்பை அகோரியாக மாற்றிய கஸ்தூரி ராஜா

ஜாக்கி ஷெராப்பை அகோரியாக மாற்றிய கஸ்தூரி ராஜா

Pandi Muni movie stillsதனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், ஆகிய படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு ‘பாண்டி முனி’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார்.

மற்றும் இன்னொரு நாயகியாக நிகிஷா பட்டேல், பெராரே, சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கஸ்தூரி ராஜா இயக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

இப்படம் பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறும்போது,

இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இரு வரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன்.

காலா இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் யார்..?

காலா இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் யார்..?

kaala audio launchகாலா படத்தின் ஆடியோ வெளியீட்டை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திறந்தவெளி அரங்கில் வெளியிட உள்ளனர்.

தனது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு மிகப் பெரிய அளவில் ரஜினி நடத்தும் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி 10 ஆயிரம் பேருக்கு “ரஜினி மக்கள் மன்றம்” அழைப்பிதழும், விழா நுழைவு அனுமதி அட்டையையும் அனுப்பி வைத்துள்ளது.

இந்த 10 ஆயிரம் பேரில் 7,500 பேர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகிறார்கள். சென்னையை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அதிக பட்சமாக 2,500 அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

காலா பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 10 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு இருப்பது, ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக கொள்ள போவதும் ரஜினியும் அவரது ரசிகர்களும்தான். அவர்களைத் தவிர வேறு யார்? இருக்க போகிறார்கள்.?

ரசிகனை இருட்டு அறையில் குருட்டு குத்து குத்துறாங்க… சங்கிலிமுருகன் பேச்சு

ரசிகனை இருட்டு அறையில் குருட்டு குத்து குத்துறாங்க… சங்கிலிமுருகன் பேச்சு

sangili muruganதமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, “ஜூனியர்” பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நரை”.

இயக்குநர் விவி இயக்கியுள்ள இப்படம், வழக்கமாக இளம் கதாநாயகர்கள் வில்லன்களிடம் மோதுவதையே பார்த்துப் பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு, வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதுவது நிச்சயம் புதுமையான அனுபவத்தைத் தருவதாக அமையும்.

நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக ‘அம்மா கிரியேசன்ஸ்’ சிவா மற்றும் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர் கே சுரேஷ் கலந்து கொண்டனர்.

அப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், பேசிய ஆர்.கே.சுரேஷ், “நான் தயாரிப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமாகி 7 வருடங்கள் ஆகியிருக்கிறது.

அன்று நான் தயாரித்த ‘6 மெழுகுவர்த்திகள்’ ஜெயிக்காமல் போயிருந்தால் நான் இங்கிருந்திருப்பேனா? என்பது சந்தேகம் தான்.

எனது பெரியப்பா ‘சங்கிலி முருகன்’ இப்படத்தில் நடித்திருக்கிறார். அதுவே இப்படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

இப்போதிருக்கிற சூழலில் சிறிய பட்ஜெட் படங்களை எடுத்து வெளியிடுவது என்பது சாதாரணமானது இல்லை. அந்த வகையில் இப்படி ஒரு வித்தியாசமான படத்தை துணிந்து தயாரித்திருக்கிற தயாரிப்பாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.

“நரை” திரைப்படம் ஜெயிக்க வேண்டும், இயக்குநர் விவி-க்கு எனது வாழ்த்துகள்” என்று பேசினார்.

‘சங்கிலி’முருகன் பேசிய போது, “அந்தக் காலத்தில் திரைப்படம் பார்க்கப் போவதெல்லாம் திருவிழாவிற்குப் போவது மாதிரி. இப்போது எல்லாம் அப்படியே மாறிப் போயிருக்கிறது.

பல படங்கள் ரசிகனுக்குப் புரிவதே இல்லை. சமீபத்தில் கூட ஒரு படம் வந்தது, ரசிகனை இருட்டு அறையில் குருட்டு குத்து குத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் காலகட்டத்தில் “நரை” போன்ற படம் வருவது நல்ல விசயம் தான். இயக்குநர் விவி நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார். அவர் கதை சொல்லும் போதே, அவ்வளவு அருமையாக நடித்துக் காட்டுவார்.

ஒரு வேளை நாமும் இப்படித்தான் நடிக்க வேண்டுமோ? என்று குழம்பியிருக்கிறேன் நிறைய முறை. இப்படத்தில் சொல்ல வேண்டியது இவர்கள் பயன்படுத்திய ஒளிப்பதிவு டெக்னிக்.

நிறைய செலவு இல்லாமல், மிகக் குறைந்த பொருட்செலவில் அவர்கள் செய்த லைட்டிங் அவ்வளவு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த்-திற்கும் இயக்குநர் விவி-க்கும் தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். “நரை” சந்தேகமேயின்றி வெற்றிபெறும்” என்று பேசினார்

“அம்மா கிரியேசன்ஸ்” சிவா பேசிய போது, “எல்லோரும் பேசும்போது ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த் பயன்படுத்திய லைட்டிங் டெக்னிக்கைப் பற்றி பாராட்டி சொன்னார்கள்.

அது போல புதுமையான, சிக்கனமான முயற்சிகள் தான் தற்போதைய தமிழ் சினிமாவிற்குத் தேவை. இப்போது நான் தயாரித்துக் கொண்டிருக்கும் படத்தின் இயக்குநரும் இப்படியான நிறைய புதுமையான விசயங்களால் செலவுகளைக் குறைக்க முடியும் என சொல்லி இருக்கிறார்.

அது தான் ஒரு தயாரிப்பாளரை காப்பாற்றும். ரசிகர்கள் தமிழ் சினிமாவிற்கு பெருமையைத் தரும் வகையிலான படங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு, சிறுமைப்படுத்தும் படங்களை விமர்சனத்திற்கு கூட எடுத்துக்கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும்.

நல்ல கதையம்சத்துடன் வந்து வெற்றி பெற்ற தீரன், அறம், அருவி போன்ற தரமான படங்களின் வரிசையில் நரையும் இடம்பெறும் என நம்புகிறேன். படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்” என்று பேசினார்.

மூன்று நாயகிகளுடன் பொட்டு வைக்க வரும் பரத்

மூன்று நாயகிகளுடன் பொட்டு வைக்க வரும் பரத்

pottu stillsஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் `பொட்டு’.

வடிவுடையான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்துள்ளார்.

நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள். தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மருத்துவ பின்னணியில் ஹாரர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளிப்போன நிலையில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார்.

மலையாள நடிகர் சங்கத்திற்கு சூர்யா அளித்த நன்கொடை

மலையாள நடிகர் சங்கத்திற்கு சூர்யா அளித்த நன்கொடை

actor surya‘AMMA’ என்று அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கம் சார்பில் திருவனந்தபுரத்தில் மாபெரும் நட்சத்திர கலை விழா நடைபெற்றது.

‘அம்ம மழவில்’ என்ற பெயரில் நடந்த இந்த விழா மூத்த கலைஞர்களுக்கு பென்ஷன் உட்பட பல நிதி உதவிகளை செய்வதற்காக நிதி திரட்டும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகும்.

இந்த நட்சத்திர கலை விழாவில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம், துல்கர் சல்மான் உட்பட மலையாள திரையுலகினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லாலின் பிரத்தியேக அழைப்பின் பேரில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அத்துடன் மலையாள நடிகர் சங்கத்திற்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடையும் அளித்தார் சூர்யா.

More Articles
Follows