இருளர் சமுதாய மாணவர்களின் கல்விக்கு உதவிய விஷால்

இருளர் சமுதாய மாணவர்களின் கல்விக்கு உதவிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal help to poor class studentsஎப்போதும் மாணவ, மாணவியரின் கல்விக்கு முதல் ஆளாக உதவுபவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால்.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மிக சிறந்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சீட் வாங்கி தந்து அவர்களுடைய படிப்பிற்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டு தன்னுடைய தேவி அறக்கட்டளையின் மூலம் அவர்களின் கல்விக்கு உதவுபவர் விஷால்.

தற்போது கல்வியில் பின்தங்கிய சமூதாயமான இருளர் சமூதாயத்தில் இருந்து 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மிகச்சிறந்த கல்லூரியான லயோலா கல்லூரியில் இடம் வாங்கி தந்து அவர்களின் கல்விக்கு உதவியுள்ளார் விஷால்.

Vishal help to poor class students

‘கௌதம் கார்த்திக் உடனே பழக மாட்டார்; பழகிட்டால்…’ ஷ்ரத்தா ஸ்ரீநாத்

‘கௌதம் கார்த்திக் உடனே பழக மாட்டார்; பழகிட்டால்…’ ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ivan thandhiranஆர். கண்ணன் இயக்கத்தில் கௌதம்கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘இவன் தந்திரன்”.

இப்படம் வருகிற ஜீன் 30ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்து இதன் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியுள்ளதாவது…

யூ – டார்ன் திரைப்படம் வெளியான அந்த நேரத்தில் இயக்குநர் கண்ணன் அவர்களின் துணை இயக்குநர் ரஜத் என்னை இவன் தந்திரன் படத்தில் நடிப்பது குறித்து தொடர்பு கொண்டு பேசினார்.

பின்னர் பெங்களூரில் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை கூறினார். அதன் பின் சென்னையில் ஸ்க்ரீன் டெஸ்டில் கலந்து கொண்டு 2 கடினமான காட்சிகளில் நடித்து காண்பித்து தேர்வு பெற்றேன்.

இயக்குநர் கண்ணன் அவர்களின் படம் எனக்கு தமிழில் முதல் படமாக அமைந்திருப்பது பெருமைக்கூரிய ஒன்றாகும்.

என்னை பொறுத்தவரை ஒவ்வொரு முறை என்னை திரையில் ரசிகர்கள் பார்க்கும் போதும் யூ- டார்னில் நடித்த பெண் தானே இவர் என்று யாரும் கண்டுபிடிக்கக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க கூடாது என்று நான் உறுதியாக உள்ளேன்.

இவன் தந்திரனில் நான் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் அப்படி ஒரு வித்யாசமான பாத்திரம் தான். யூ- டார்னில் நான் சிட்டியில் வாழும் இங்கிலீஷ் பேசும் பெண்ணாக நடித்தேன்.

இவன் தந்திரனில் வரும் ஆஷா முற்றிலும் புதுமையான கதாபாத்திரம். படத்தில் நான் கடினமாக உழைத்து கஷ்டப்பட்டு முன்னேறிய மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்துள்ளேன்.

இங்கே உள்ள கல்வி முறையும் அதில் இருக்கும் அரசியலும் என்னை எப்படி பாதிக்கிறது என்பது போல் கதை நகரும். கௌதம் கார்த்திக் மிகச்சிறந்த கோ- ஆர்டிஸ்ட். அவர் மிகவும் அமைதியானவர், நல்ல மனிதர், எளிதில் யாருடனும் பழகிவிட மாட்டார்.

அப்படி பழகிவிட்டால் உண்மையான நண்பராக மற்றும் மிகவும் கேரிங்காக இருப்பார்.

இவன் தந்திரன் தான் ஒரு கதாநாயகியாக எனக்கு முதல் தமிழ் படம். எனக்கு நீளமான வசனம், உணர்வுபூர்வமான காட்சிகள் போன்றவை எல்லாம் இந்த படத்தில் சவாலான ஒன்றாக இருந்தது.

கௌதம் நான் நன்றாக நடித்தால் என்னை பாராட்டுவார். அப்படி அவர் பாராட்டும் போது அடுத்தடுத்து வரும் காட்சிகளில் நன்றாக நடிக்க வேண்டும் என்று நமக்கே தோன்றும், ஊக்கம் அளிக்கும் ஒன்றாகவும் இருக்கும்.

நான் RJ பாலாஜியை காற்று வெளியிடை படபிடிப்பின் போது சந்தித்தேன். நான் தமிழ் சினிமாவை பொறுத்தவரை எந்த சந்தேகமாக இருந்தாலும் பாலாஜியிடம் கேட்பேன்.

என்னுடைய முதல் படத்தில் இருந்து அவரை நன்றாக தெரியும் என்பதால் அவரிடம் தமிழ் சினிமாவை பற்றி நிறைய கேட்டு தெரிந்துகொள்வேன்.

தமிழ் பேசும் லோக்கல் பெண்ணாக நடித்து நிறைய கற்றுக்கொண்டேன். இயக்குநர் கண்ணனின் படத்தை பொறுத்தவரை பெண்களை அவர் மிக அழகாகவும், போல்டாகவும் காட்டுவார்.

இந்த படத்திலும் நான் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் அப்படி பட்ட ஒரு கதாபாத்திரமாக தான் இருக்கும். இயக்குநர் கண்ணன் எப்போதும் இரவு பகல் பாராமல் உழைக்கக்கூடியவர். இப்போது ஒரு காட்சி முடிந்து எனக்கு பிரேக் கிடைக்கிறது என்றால் எனக்கு மட்டும் தான் அது பிரேக்காக இருக்கும்.

இயக்குநர் கண்ணன் வேறு நடிகர்களை வைத்து மத்த காட்சியை படமாக்கிக்கொண்டு இருப்பார் இது தான் அவருடைய தனித்தன்மை. உழைப்பு என்றால் அது இயக்குநர் கண்ணன் தான்.

இவன் தந்திரன் கண்டிப்பாக இளைஞர்களுக்கு பிடிக்கும் ஒரு படமாக இருக்கும் ஏற்கனவே படத்தின் ஸ்நீக் பீக் வெளியாகி யுடியுபில் மாபெரும் சாதனை படைத்துள்ளது” என்றார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

Shraddha Srinath talks about Gautham Karthik and Ivan Thandhiran movie

கமல் பட பாணியில் பிரபுதேவா-கார்த்திக் சுப்புராஜின் ‘மெர்குரி’

கமல் பட பாணியில் பிரபுதேவா-கார்த்திக் சுப்புராஜின் ‘மெர்குரி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhu Deva Karthik Subbaraj movie titled Mercuryஇறைவி படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இப்படத்திற்கு மெர்குரி என்று பெயரிட்டுள்ளனர்.

இதில் பிரபுதேவா ஆன்டி ஹீரோ கேரக்டரை ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

வித்தியாசமான முயற்சியாக இப்படத்தை வசனமே இல்லாமல் உருவாக்கி இருக்கிறார்களாம்.

கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கமல், அமலா நடித்த பேசும் படம் என்ற படத்திலும் ஒரு வசனம் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Deva Karthik Subbaraj movie titled Mercury

mercury

காலா ரஞ்சித்துடன் இணையும் சத்யராஜ்-விவேக்

காலா ரஞ்சித்துடன் இணையும் சத்யராஜ்-விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathyaraj vivekகபாலி படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் காலா படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சமூக நலம் கொண்டு பணியாற்றும் பீம் நிறுவனமும், ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து வரும் ஜீன் 30ம் தேதி ‘மஞ்சள்’ என்ற தலைப்பில் நாடகம் ஒன்றினை அரகேற்ற முடிவு செய்துள்ளனர்.

இதற்கு நடிகர்கள் சத்யராஜ், விவேக் ஆகியோர் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து சத்யராஜ் மற்றும் விவேக் கூறியுள்ளதாவது…

‘1993ம் ஆண்டே இந்த அவல செயலுக்கு சட்டம் தடை விதித்துள்ளது.

ஆனால் அதற்கான மாற்று வழியினை அரசு மேற்கொள்ளாத காரணத்தினால் இந்த அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது’ என்று விவேக் கூறியுள்ளார்.

“குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த மக்களிடம் உள்ள இரக்கத்தினால் இந்த கழிவுகளை அள்ள இயந்திரம் தயாரிக்கும் முயற்சியை கூட நம் நாடு எடுக்கவில்லை.

இந்த கொடுமையான செயலை நிறுத்தி புது மாற்றத்தை கொண்டு வர வேண்டும்” என்று சத்யராஜ் கூறியுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பாதாள சாக்கடை அள்ளும் பணியின் போது மொத்தம் 10 பேர்கள் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sathyaraj and Vivek voice for Pa Ranjiths Manjal awarness drama

manjal

 

 

மெர்சல் படத்தில் விஜய்யுடன் இணைந்த ஜிவி. பிரகாஷ்

மெர்சல் படத்தில் விஜய்யுடன் இணைந்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay gv prakash atleeஅட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் மெர்சல் படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிதுது வருகிறார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளரும் நடிகரும் விஜய்யின் தீவிர ரசிகருமான ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது…

”மெர்சல்’ படத்தில் ஒரு எனர்ஜெடிக்கான பாடலை பாடியுள்ளேன்.

என்னுடைய ஃபேவரைட் இசையமைப்பாளர் ரஹ்மான் மற்றும் விஜய் அண்ணா அவர்களின் படத்தில் பாடியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

GV Prakash joins with Vijay in Mersal

மா.கா.பா.ஆனந்த்-சூஷா நடித்துள்ள ‘மாணிக்’ படத் தகவல்கள்

மா.கா.பா.ஆனந்த்-சூஷா நடித்துள்ள ‘மாணிக்’ படத் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maanik movie stillsமோகிதா சினி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் எம். சுப்ரமணியன் தயாரித்திருக்கும் படம் ‘மாணிக்’.

மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சூஷா குமார் நடித்துள்ளார்.

இரண்டாவது ஹீரோவாக வத்ஸன் நடிக்க, அருள்தாஸ், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்துக்கொண்ட அணு, புஜ்ஜி பாபு, கோலிசோடா சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

‘நாளைய இயக்குநர்’ சீசன் 5- ன் வெற்றியாளர் மார்டின் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

படம் குறித்து இயக்குநர் மார்டின் கூறுகையில்…

“ஆசிரமத்தில் வளர்ந்த ஹீரோ மா.கா.பா.ஆனந்த் மற்றும் இரண்டாவது ஹீரோ வத்சன் இருவரும் ஒரு விஷயத்தில் பெரிய அளவில் சாதிக்க ஆசிரமத்தில் இருந்து கிளம்புகிறார்கள்.

அப்படி அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன, அந்த சாதனை முயற்சியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இறுதியில் நினைத்ததை சாதித்தார்களா இல்லையா என்பதை பேண்டசியாக சொல்லியிருக்கிறோம். அவர்களின் சாதனை பயணம் எந்த விஷயத்திற்காக என்பது சஸ்பன்ஸ்.” என்றார்.

தரன்குமார் இசையமைப்பில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களும் வித்தியாசமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. “உச்சா…பசங்க…”, ” மாமா மர்கையா…”, “அட பாவி…” என்று தொடங்கும் இந்த மூன்று பாடல்களையும் இளைஞர்கள் முனு முனுக்கும் வகையில் மிர்ச்சி விஜய் எழுதியுள்ளார்.

எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கே.எம்.ரியாஸ் படத்தொகுப்பு செய்கிறார். கலையை வினோத் நிர்மாணிக்க, ஆடை வடிவமைப்பை செந்தில்குமார் கவனிக்கிறார். ரஞ்சித், கே.ஆர்.பழனியப்பன், ஜெகன் நாதன் ஆகியோர் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க, பி.ஆர்.ஒ பணியை சுரேஷ்சுகு கவனிக்கிறார்.

காமெடி கலந்த பேண்டசி படமாக உருவாகும் ‘மாணிக்’ படத்தின் பஸ்ட் லுக் டீசர் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

அதை தொடர்ந்து பாடல்கள் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ள தயாரிப்பு தரப்பு, படத்தை செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது.

MaKaPa Anand Suza starring Maanik movie updates

maanikk makapa anand

More Articles
Follows