தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேலுதாஸ் இயக்கத்தில் விமல் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படம் செப்டம்பர் 1 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு பேசும்போது..
“நடிகர் விமல் மிகச்சிறந்த நடிகர். சத்யராஜுக்கு அடுத்ததாக மிக நீளமான வசனங்களையும் நிறுத்தாமல் பேசக்கூடியவர்.
நடிகர் மோகனுக்கு அடுத்ததாக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடிய நடிகராக இப்போது இருப்பவர் நடிகர் விமல் தான். அவரது திறமையை இந்த திரையுலகம் சரியாக பயன்படுத்தவில்லை.
இப்படத்தில் விமலா இது என ஆச்சரியப்படும் வகையில் ஆக்ஷனில் பின்னி இருக்கிறார். இன்றைய சூழலில் யூடியூபர்கள் எல்லா நடிகர்களின் படங்களையும் ஆதரிக்க வேண்டும். அவர் பெரியவரா, இவர் பெரியவரா என்ற சண்டையை பெரிதாக்க கூடாது.
நாங்கள் என்ன அரசியலா செய்து கொண்டிருக்கிறோம் ? நாங்கள் சினிமா படம் எடுக்கிறோம். யாருக்கு எந்த பட்டம் கொடுக்க வேண்டும் என நீங்கள் உங்களுடைய பிழைப்பை நடத்துவதற்காக தயவு செய்து எங்கள் குடும்பத்தில் கை வைக்காதீர்கள்.
ஒவ்வொரு ஹீரோவின் படத்தையும் மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். யூடியூபர்கள் மூட்டிவிடும் சண்டையில் பலிகடா ஆகி விடாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
Vimal follows actor Sathyaraj says Perarasu