கண்ணுக்கு தெரியறது உண்மையாக இருக்காது. கண்ணுக்கு தெரியாதது தப்பாக இருக்காது – விக்ரம் பிரபு

கண்ணுக்கு தெரியறது உண்மையாக இருக்காது. கண்ணுக்கு தெரியாதது தப்பாக இருக்காது – விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் விக்ரம் பிரபு, வாணி போஜன், தனஞ்ஜெயா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.

இந்த படம் ஜூன் 23ல் வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தினர் படக்குழுவினர்.

ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி பேசிய தாவது:*

விக்ரம் பிரபு சாருடன் நிறைய படங்கள் பைட்டராக நடித்திருக்கி றேன் இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளேன். முதல் படத்திலேயே 40 நாட்கள் சண்டை காட்சி. கண் தெரியாதவர்கள் போடும் சண்டை காட்சி போல் விக்ரம் பிரபு நடிக்க வேண்டும் .

இதற்காக கவனமாக சண்டை காட்சிகள் படமாக்க வேண்டியி ருந்தது. எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. கடுமையாக விக்ரம்பிரபு சார் நடித்திருக்கிறார் . படம் நன்றாக வந்திருக்கிறது படத்துக்கு எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க நன்றி.

இந்த விழாவில் விக்ரம் பிரபு பேசியதாவது:*

இந்தவொரு நல்ல டீமோடு நிறைய ஹார்டு ஒர்க் செய்தது ரொம்ப சந்தோசம். இயக்குநர் கார்த்திக் ரொம்பவும் சினிமாவில் ஆர்வம் உள்ளவர்.

அவருடன் பயணம் தொடங்கி நீண்டநாள் சென்றது. இந்த படத்தில் எவ்வளவோ பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை ஒளிப்பதிவாளர் ஶ்ரீதர் புரிந்து கொண்டு பணியாற்றினார். அவர் பேச்சிலேயே அது தெரிந்திருக்கும். இந்த பட அனுபவம் என்றைக்கும் மறக்காது அப்படிப்பட்ட படம் இது.

இன்று இயக்குனர் கார்த்திக் சொன்ன ஒரு விஷயம்தான் அதாவது கண்ணுக்கு தெரியற ஒரு விஷயம் உண்மையாகவும் இருக்காது. கண்ணுக்கு தெரியாத விஷயம் தப்பாகவும் இருக்காது என்ற ஒரு அழகான விஷயத்தை வைத்துதான் இந்த ஸ்கிரிப்ட் எழுதியிருந்தார்.

இதில் நிறைய அர்த்தங்கள் இருக்கிறது. இந்த படத்தில் வாணி போஜன் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கன்னட ஹீரோ தனஞ்ஜெயாவும் ஸ்கிரிப்டை புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார்.

இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. தியேட்டரில் நல்ல அனுபவம் தரும் படமாக இருக்கும். ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி இவன் வேற மாதிரி படத்திலிருந்து நன்றாக தெரியும் . இன்றைக்கு படத்தில் மாஸ்டராக இருக்கிறார்.

எல்லா சண்டை காட்சி களையும் நன்றாக எடுத்திருக்கிறார். என் மனத்துக்கு நெருக்க மான படம்.

இந்த படத்தை வெளியிடும் கிஷோருக்கு நன்றி. நாங்கள் நல்ல படம் தந்திருக்கிறோம் உங்கள் ஆதரவு தேவை.

பாயும் ஒளி நீ எனக்கு

Vikram Prabu speaks about Paayum Oli Nee Enakku storyline

விக்ரம் பிரபுவுடன் நடிக்க வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை.. – வாணி போஜன்

விக்ரம் பிரபுவுடன் நடிக்க வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை.. – வாணி போஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே எம் எச் புரடக் ஷன் சார்பில் கார்த்திக் சவுத்ரி தயாரிக்கும் படம் “பாயும் ஒளி நீ எனக்கு”.

இதில் விக்ரம்பிரபு, வாணி போஜன் ஜோடியாக நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ஆர். கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார். சாகர் இசை அமைக்கிறார். எஸ் பி சினிமாஸ் சங்கர் கிஷோர் வெளியிடுகிறார்.

‘பாயும் ஒளி நீ எனக்கு” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது*

*இதில் கிஷோர் பேசியதாவது:*

பாயும் ஒளி நீ எனக்கு படம் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. அதற்கு பட இயக்குனர் கார்த்திக் அத்வைத், ஹீரோ விக்ரம் பிரபுவுக்கு முதலில் நன்றி சொல்கிறேன். இவர்கள் இப்படத்தை வெளியிட ஒரு வாய்ப்பு கொடுத் திருக்கிறார்கள். இந்த படம் பெரிய திரையில் விரைவில் திரைக்கு வருகிறது. உங்கள் அனைவரின் ஆதரவு தர வேண்டும் நன்றி.

நடிகை வாணி போஜன் பேசியதாவது:*

இந்த ஸ்கிரிப்ட் எனக்கு ரொம்ப பிடிச்சது. விக்ரம் பிரபுவுடன் நடிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. இந்த படத்தில் விக்ரம் ஆக்டிங், ஆக் ஷன் எல்லாமே பிடித்திருந்தது. என்னையும் ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. எல்லோரும் சப்போர்ட் பண்ண கேட்டுகொள்கிறேன்.

*ஒளிப்பதிவாளர் ஶ்ரீதர் பேசியதாவது:*

நல்ல படங்களுக்கு ஆதரவு தரும் பத்திரி கையாளர்களுக்கு வணக்கம். இந்த படத்தில் என்னுடன் 3 அசிஸ்டன்ட்ஸ்கள் மட்டுமே பணியாற்றினார்கள். அவர்களுக்கு முதலில் நன்றி. ஏனென்றால் இதுவொரு மிகப் பெரிய ஆக் ஷன் படம். இதன் 70 சதவீத படப்பிடிப்பு இரவில்தான் நடக்கும். பெரிய ஆக் ஷன் படம் என்பதால் நிறைய கேமரா, எக்கியூப் மென்ட்ஸ் பயன்படுத்தப்பட்டது அதற்கு ஒரு வலுவான டீம் தேவைப்பட்டது.

அப்படி எனக்கு வலுவான என் உதவியாளர்கள் இருந்தார்கள். அடுத்து இயக்குனர் கார்த்திக், கேமரா மேனுக்கென்றே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் தான் இந்த படம். பார்வை குறைபாடுள்ள ஒருவனின் உலகம் எப்படியிருக்கும் என்பதை காட்ட இப்படம் எனக்கொரு வாய்ப் பாகபும், சவாலாகவும் இருந்தது.

விக்ரம் பிரபு, வாணி போஜன் மற்ற எல்லா நடிகர்களுமே ரொம்பவும் சின்சியர். மேக்கப் அணிந்து சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்கள். கடைசி 10 நாள் 180 மணிநேரம் நடிப்பது என்பது பெரிய விஷயம். விக்ரம்பிரபு காட்டிய இந்த ஈடுபாடுதான் எங்களையும் தொடர்ச் சியாக பணியாற்ற வைத்தது.

இந்த படத்தில் சண்டை காட்சி 40 நாட்கள் படமாக்கப் பட்டது. விக்ரம் பிரபு நடித்த கிளைமாக்ஸ் சண்டை காட்சி கண்ணாடிகள் நடுவில் படமாக்கப்பட்டது. அது பெரிய ஹேலைட்டாக இருக்கும்.

பாயும் ஒளி நீ எனக்கு

I wish to act with Vikram Prabu says Vani Bhojan

நேதாஜியின் மறைக்கப்பட்ட உண்மைகளை சொல்லும் ‘ஸ்பை’.; 5 மொழிகளின் ரிலீஸ் அப்டேட்

நேதாஜியின் மறைக்கப்பட்ட உண்மைகளை சொல்லும் ‘ஸ்பை’.; 5 மொழிகளின் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிகில் சித்தார்த்தா- இயக்குநர் கேரி பி. ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் தேசிய அளவிலான திரில்லர் ‘ஸ்பை’.

இப்படம் ஜூன் 29ஆம் தேதியன்று வெளியாகும் என படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது.

இதில் நிகில் சித்தார்த்தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர், அபினவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு சென்குப்தா, நித்தின் மேத்தா, ரவிவர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங், சோனியா நரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஸ்ரீ சரண் பகாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்திற்கான படத்தொகுப்பு பணிகளையும் இயக்குநர் கேரி பி ஹெச் கவனித்திருக்கிறார்.

திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ராஜசேகர் ரெட்டி இப்படத்தின் கதையை எழுதி தயாரித்திருக்கிறார்.

சரண் தேஜ் உப்பலபதி இந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் அனைத்து மொழிகளிலும் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இந்தத் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாது என்றும், ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் இணையதளத்தில் தகவல்கள் வெளியாயின.

இதனால் நடிகர் நிகிலின் ரசிகர்களும் மற்றும் திரைப்பட ஆர்வலர்களும் ஏமாற்றமடைந்தனர்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட கதை மற்றும் ரகசியங்களை மையமாகக் கொண்டு தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், எந்தவித தாமதமின்றி… திட்டமிட்டபடி ஜூன் 29ஆம் தேதியன்று வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெளிவுப் படுத்தி இருக்கிறார்கள்.

மேலும் ஜூன் 29 தேதியை இழக்க விரும்பாததால்.. பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

உண்மையில் இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்யவும்… நிலுவையில் உள்ள வேலைகளை விரைந்து முடிக்கவும்.. தயாரிப்பாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திறமையான கிராபிக்ஸ் தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்ட நான்கு நிறுவனங்களை நியமித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்களின் இந்த செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் நாயகனான நிகில் சித்தார்த்தா ட்விட்டரில் பிரத்யேகப் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

அதனுடன் ”ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் ‘ஸ்பை’ வெளியாகிறது” என்றும், ‘சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைக்கு அருகில் இயந்திர துப்பாக்கியை பிடித்துக்கொண்டு நிகில் நிற்கும்’ பிரத்யேக புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

நிகில் சித்தார்த்தா நடித்திருக்கும் ‘ஸ்பை’ திரைப்படம், திட்டமிட்டபடி ஜூன் 29ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Nikhils National Thriller SPY Releasing On 29th June

மகேஷ் பாபுவின் நடன இயக்குனர் ராகேஷ் மாஸ்டர் மரணம்

மகேஷ் பாபுவின் நடன இயக்குனர் ராகேஷ் மாஸ்டர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரபல திரைப்பட நடன இயக்குனர் ராகேஷ் மாஸ்டர்.

திருப்பதியில் பிறந்த இவரது இயற்பெயர் ராமா ராவ்.

திரைப்பட நடன இயக்குனரான பிறகு இவரது இயற்பெயரை ராகேஷ் என மாற்றிக் கொண்டார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட 1500 திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

ராகேஷ் மாஸ்டர் தெலுங்கு பிரபல நடிகர்களான வெங்கடேஷ், நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ராம்பாபு, பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார்.

கடந்த வாரம் படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் மற்றும் பீமாவரம் சென்று இருந்தார்.

அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், நடன இயக்குனர் ராகேஷின் உடல் உறுப்புகள் செயலிழந்து சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இவருக்கு வயது 53.

அவரது உடலுக்கு தெலுங்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

choreographer rakesh master passes away

மோசடி வழக்கில் சிக்கிய விஜய் பட நடிகை; கோர்ட் அதிரடி உத்தரவு

மோசடி வழக்கில் சிக்கிய விஜய் பட நடிகை; கோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்து 2003-ல் வெளியான ‘புதிய கீதை’ படத்தில் நடித்தவர் அமிஷா பட்டேல்.

இவர் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

குணால் குரூமர் என்பவருடன் இணைந்து அமிஷா பட்டேல் இந்தி படமொன்றை தயாரிக்க முடிவு செய்து அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் பெற்றார்.

இப்படம் திரைக்கு வரும்போது பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால், படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

இதற்காக வட்டியையும் சேர்த்து ரூ.3 கோடிக்கு அமிஷா பட்டேல் செக் கொடுத்துள்ளார்.

அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சியான அஜய்குமார் ராஞ்சி கோர்ட்டில் அமிஷா பட்டேல் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அமிஷா பட்டேலுக்கு பல தடவை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இந்த நிலையில் அமிஷா பட்டேல் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

மேலும், கோர்ட்டில் இருந்து வெளியே வந்த அமிஷா பட்டேல் முகத்தை துப்பட்டாவால் மூடியபடி காரில் ஏறி சென்று விட்டார்.

அமிஷா பட்டேல்

vijay movie actress ameesha patel surrenders in fraud case ahead

‘லில்லி’ உருவாக காரணம் மணிரத்னம்.; பான் இந்தியா படத்தில் டைனோசர் – சிவம்

‘லில்லி’ உருவாக காரணம் மணிரத்னம்.; பான் இந்தியா படத்தில் டைனோசர் – சிவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோபுரம் ஸ்டூடியோஸ் K. பாபு ரெட்டி, G.சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லில்லி’ என்ற படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்ன ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் பேபி நேஹா, வேதாந்த் வர்மா, பிரநதி ரெட்டி, ராஜீவ் பிள்ளை, சிவ கிருஷ்ண காரு, செந்தில் பொன்னுசாமி, ராஜ் வீர், மிட்சிலி ஷா, ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராஜ்குமார்

இசை – ஆண்டோ பிரான்சிஸ்
பாடல்கள் – P. A. ராசா
எடிட்டிங் –
கலை – P.S.வர்மா
தமிழ் வசனம் – இயக்குனர் முத்து

மக்கள் தொடர்பு – மதுரை செல்வம்,- மணவை புவன்.
தயாரிப்பு – K.பாபு
ரெட்டி, G.சதீஷ் குமார்

கதை,திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் – சிவம்.

படம் பற்றி இயக்குனர் சிவம் பேசியதாவது…..

இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம். எத்தனையோ பெரிய நடிகர்கள் படம், இயக்குனர்கள் படம் பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கிறது. ஆனால் குழந்தைகளை மையமாக வைத்து நேரடியாக உருவாகியுள்ள படம் இதுவாகத் தான் இருக்கும்.

இது குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் அவர்களிடமிருந்து பெரியவர்கள் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதோடு நட்புனா என்ன, விட்டுக் கொடுத்தல்னா என்ன என்பதை உணர்வுபூர்வமாக எடுத்திருக்கிறோம்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் நிச்சயம் கண்கலங்க வைக்கும்.

இத்தனை ஆண்டுகாலம் எனது சினிமா அனுபவத்தில் எத்தனையோ கதைகளை எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் என் முதல் படமாக இந்த குழந்தைகள் கதையைத்தான் எடுக்க வேண்டும், அவர்களது உணர்வுகளை அனைவருக்கும் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை எடுத்தேன்.

இந்த கதையையை நான் உருவாக்க முக்கியப் காரணமே இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தான். ஏன்னா அஞ்சலி படம் பார்த்து இன்றுவரை என்னால் அந்த படத்திலிருந்து வெளியே வரமுடியல.

அந்த பாதிப்பில்தான் இந்த கதையை உருவாக்கினேன். நிச்சயம் இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் இது வெறும் குழந்தைகளுக்கான படம் மட்டுமல்ல பெரியவர்களுக்குமான படம்.

இதுவரை ஹாலிவுட் சினிமாவில் மட்டும் தான் டைனோசரை பார்த்து வந்தோம். முதல் முறையாக இந்த படத்தில் டைனோசரை பயன்படுத்தி இருக்கிறோம், அதுவும் ஒரு கதாபாத்திரமாகவே வரும் அதை நீங்கள் திரையில் பார்க்கும் போது கதையோடு ஒன்றியிருக்கும்.

படம் இம்மாதம் 30 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது” என்றார் இயக்குனர் சிவம்.

Director Sivam speaks about Lilly movie

More Articles
Follows