விக்ரம் பிரபு – வாணி இணைந்த ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்

விக்ரம் பிரபு – வாணி இணைந்த ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SP சினிமாஸ் தமிழ்த் திரையுலகில் தனித்துவமான மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தான் விக்ரம் பிரபுவின் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான “பாயும் ஒளி நீ எனக்கு ” திரைப்படத்தை SP சினிமாஸ் தேர்ந்தெடுத்துள்ளது.

மேலும் அதை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.

கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். அதோடு, தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக இந்தப் படத்தை எழுதி இயக்கி தயாரித்துள்ளார்.

கார்த்திக் அத்வைத் நியூயார்க் ஃபிலிம் அகாடமியின் முன்னாள் மாணவர். தனது பட்டப்படிப்பிற்குப் பிறகு, இயக்குனர் ராஜமௌலி அவர்களுடன் தொடர்ந்து பயணித்த புகழ்பெற்ற மூத்த எடிட்டரான கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் அவர்களின் கீழ் கார்த்திக் பணியாற்றினார்.

கார்த்திக் பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார், மேலும் அவரது அடுத்த படம் கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர்.சிவராஜ் குமாருடன் அமையவிருக்கிறது. சிவராஜ் குமார், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

பிரமாதமாக வழங்கப்பட்ட இந்த படத்தின் ஆக்‌ஷன் டீஸர், அதன் நேர்த்தியான காட்சிகள் மற்றும் படத்தொகுப்புகள், அட்டகாசமான இசை மற்றும் விக்ரம் பிரபுவின் சிறந்த திரை ஈர்ப்பு ஆகியவை , படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்கனவே உயர்த்தியுள்ளது.

கன்னட திரைதுறையின் மிகவும் பிரபலமான நடிகர் டாலி தனஞ்சயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவரது அதிரடி காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன.

வாணி போஜன் நாயகியாக நடிக்க ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் சாகர் மஹதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அவர் ஏற்கனவே தெலுங்குத் துறையில் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார் .

‘பரியேறும் பெருமாள்’ புகழ் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பை கவனிக்கிறார். பி.எல். சுபேந்தர் (கலை இயக்குனர்), தினேஷ் காசி (ஸ்டன்ட் இயக்குனர்), மற்றும் ராஜகிருஷ்ணன் – 4 Frames (ஒலி கலவை), சதீஷ் – AIM (PRO) ஆகியோர் படத்தின் மற்ற முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றுகின்றனர்.

SP சினிமாஸ் நிறுவனம் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் டீசல் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

மேலும் SP சினிமாஸ், K13 (அருள்நிதி), மாறா (மாதவன்), ஓ மணப்பெண்ணே (ஹரிஷ் கல்யாண்) போன்ற தனித்துவமான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.

SP சினிமாஸ் சிறந்த உள்ளடக்கம் கொண்ட பல வெற்றி படங்களை விநியோகித்துள்ளது. அதில் அசோக் செல்வன் நடித்த வேழம் மற்றும் தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படமான ‘பாரம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

Paayum Oli Nee Enakku movie rights acquired by SP cinemas

‘பிக்பாஸ்’ முகேன் ராவ் – பாவ்யா டிரிக்கா இணைந்து ந(அ)டிக்கும் ‘ஜின்’

‘பிக்பாஸ்’ முகேன் ராவ் – பாவ்யா டிரிக்கா இணைந்து ந(அ)டிக்கும் ‘ஜின்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் முகேன் ராவ்.

இவர் தற்போது சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார். இவரின் புதிய படத்திற்கு ‘ஜின்’ என்று பெயர் இருக்கிறார். இதில் நாயகியாக பாவ்யா டிரிக்கா நடிக்கிறார்.

இவர்களுடன் பால சரவணன் வடிவுக்கரசி ரித்விக் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

டி ஆர் பாலா என்பவர் இந்த படத்தை இயக்கி தயாரிக்கிறார்.. தீபக் எடிட்டிங் செய்ய அருண் ராஜா என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஜனவரி 18ல் தொடங்கியது.

அண்மையில் மலையாள சினிமாவிலும் ‘ஜின்’ என்ற பெயரில் ஒரு படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Mugen Rao and Bhavya Trikka joins for Jinn

Title: JINN

Banner: Fairy tale pictures In Association with Raj Films international & VR movies & CinemaRasa productions

Starring: Mugen Rao, Bhavya Trikka, Balasaravanan, Imaan annachi, Vadivukarasi, Vinodhini, George vijay, Rithvik.

Director: TR Bala
Producer: TR Bala
Co producers: Anand, T.Rajeswari, Nandu.
DOP: Arjun raja
Editor: Deepak
Art Director: Dinesh Kumar
Costume designer: Deepthi RJ
PRO: Nikil Murukan

#JINN Pooja

விஜய்யை “தென்னிந்திய சூப்பர் ஸ்டார்” என அழைத்த பிரபல அரசியல்வாதி

விஜய்யை “தென்னிந்திய சூப்பர் ஸ்டார்” என அழைத்த பிரபல அரசியல்வாதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தியாகராஜ பாகவதர், எம்ஜி ராமச்சந்திரன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுக்குப் பிறகு, தற்போதைய தலைமுறையின் சூப்பர் ஸ்டார் என்று விஜய் நிரூபித்துள்ளார் என்று சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறினார்.

விஜய்யின் ஒவ்வொரு படத்தையும் மக்கள் ரசிக்கிறார்கள்.

தனது நடிப்பால் குறிப்பிடத்தக்க ரசிகர் பட்டாளத்தைப் பெற்றிருப்பதை பலரால் தாங்க முடியவில்லை என்று கூறினார்.

என்னுடைய கருத்துப்படி விஜய் தென்னிந்திய சூப்பர் ஸ்டாராகிவிட்டார் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது.

இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள ரஜினிகாந்த் கூட தயங்கமாட்டார் என்று பேசினார் சீமான்.

Vijay gets called a “South Indian superstar” by a famous Politician

ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த்ரில்லர் படமான ‘ரன் பேபி ரன்’ மூலம் நடிகர் ஆர்‌ஜே பாலாஜி தீவிர நடிகராக மாற முடிவு செய்துள்ளார்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கிறார் ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை.

இன்று, RJ பாலாஜி இடம்பெறும் புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், லக்ஷ்மண் குமாரின் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரன் பேபி ரன் பிப்ரவரி 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

அதே தேதியில் சந்தீப் கிஷன் நடித்த ‘மைக்கேல்’ படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

RJ Balaji & Aishwarya Rajesh starrer ‘Run Baby Run’ official release date announced!

ரூ 500 கோடியை வசூலித்த விஜய் அஜித் சிரஞ்சீவி & பாலகிருஷ்ணா படங்கள்

ரூ 500 கோடியை வசூலித்த விஜய் அஜித் சிரஞ்சீவி & பாலகிருஷ்ணா படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ ஆகிய படங்கள் வெளியானது.

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவி நடித்த ‘வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணா நடித்த ‘வீரசிம்ஹா ரெட்டி’ ஆகிய படங்கள் வெளியானது.

இந்த நான்கு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

‘வாரிசு’ படம் உலகளவில் 150 கோடியை கடந்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘துணிவு’ பட வசூல் குறித்து அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகவில்லை. ஆனால் அதுவும் 120 கோடியை நிச்சயமாக கடந்திருக்கும்.

மேலும் ‘வால்டர் வீரய்யா’ மற்றும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ ஆகிய படங்களும் வசூல் வேட்டை செய்து வருகின்றன.

ஆக இந்த நான்கு படங்களும் இதுவரையில் ரூபாய் 500+ கோடிக்கும் மேல் வசூலை அள்ளி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கடந்த வருடத்தைப் போல இந்த வருடமும் தென் இந்திய திரைப்படங்கள் வசூல் வேட்டை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆர் ஆர் ஆர், பொன்னியின் செல்வன் 1, விக்ரம், கே ஜி எஃப் 2 உள்ளிட்ட படங்கள் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vijay Ajith Chiranjeevi & Balakrishna films collected Rs 500 crores

BREAKING OFFICIAL 7 நாட்களில் 210 கோடியை வசூலித்த வாரிசு..; ரஜினியை நெருங்கிய விஜய்.?

BREAKING OFFICIAL 7 நாட்களில் 210 கோடியை வசூலித்த வாரிசு..; ரஜினியை நெருங்கிய விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார்.

தமன் இசையமைத்த இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர்களான வம்சி மற்றும் சிரிஷ் இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி சரியாக இன்றுடன் ஒரு வாரம் ஆன நிலையில் தற்போது படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

உலக அளவில் ரூபாய் 210 கோடியை இந்த படம் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இதன் மூலம் ரஜினியின் சாதனைகளை விஜய் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.

ரஜினியின் எந்திரன் கபாலி பேட்ட தர்பார் 2.0 காலா ஆகிய 6 படங்கள் 200 கோடிக்கு (200 கோடி கிளப்) மேல் வசூலித்து இருந்தது.

விஜய்யை பொறுத்தவரை மெர்சல் தெறி சர்கார் பீஸ்ட் பிகில் வாரிசு உள்ளிட்ட ஆறு படங்கள் 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இதன் மூலம் ரஜினியை பாக்ஸ் ஆபிஸில் நெருங்கி வருகிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

Varisu crossed 210Crs+ collection worldwide in 7 days

Triple ah received your love in 7 days nanba 🔥
#MegaBlockbusterVarisu crosses 210Crs+ collection worldwide 😎

#VarisuHits210Crs

#Varisu #VarisuPongal‌ https://t.co/aVS6vGYhhY

Ella edamum namma records dhan🔥
#MegaBlockbusterVarisu crosses 210Crs+ collection worldwide in 7 days 😎

#VarisuHits210Crs

#VarisuPongalWinner

#Varisu https://t.co/EGRwxBe7gh

More Articles
Follows