தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் விக்ரம் பிரபு, வாணி போஜன், தனஞ்ஜெயா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.
இந்த படம் ஜூன் 23ல் வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தினர் படக்குழுவினர்.
*பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது:*
அன்பு, சுடர் போல் எரிய வேண்டும் அதுதான் பாயும் ஒளி நீ எனக்கு. இது பாரதியார் வரி. சுடர் போல் இந்த படம் மேல் நோக்கி போகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. படம் பார்க்கும்போது அன்பு நமக்குள் ஊறி பெருகும். அந்த அன்பை மற்றவர்களுக்கு
கடத்துவோம்.
இந்த விழாவில் இயக்குனர் கார்த்திக் அத்வைத் பேசியதாவது…
நான் ஹைதராபாத்திலிருந்து வருகிறேன். முதன்முறையாக விக்ரம் பிரபுவை சந்தித்து கதை சொன்னபோது அவர் வியந்து கேட்டார். அதுதான் எனக்கும் பெரிய ஊக்கமாக இருந்தது.
ஒரு முதல் பட இயக்குனருக்கு விக்ரம்பிரபு போலவும் இந்த டீம் போலவும் யாரும் சப்போர்ட் செய்வார்களா என்று தெரியவில்லை. அதற்காக விக்ரம் பிரபுக்கும் குழுவினருக்கும் நன்றி. நாயகி வாணி போஜனுக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளருக்கு எனது நன்றி. என்னுடைய எண்ணத்தை
புரிந்துக்கொண்டு காட்சிகளை அழகாக படமாக்கினார். ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசிக்கும் நன்றி
கேரக்டரை புரிந்துக் கொண்டு ஸ்டண்ட் அமைத்துக் கொடுத்தார்.
படத்தில் ஒன்பது சண்டைக்காட்சிகள் இருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்ப இந்த சண்டைக்காட்சி மாறுபடும். படத்தில் பணியாற்றிய எடிட்டர் சி. எஸ். பிரேம்குமார் நடன இயக்குனர் தாஸ்தா, படத்தை ரிலீஸ் செய்யும் கிஷோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
எழுத்து & இயக்குனர் – கார்த்திக் அத்வைத்
ஒளிப்பதிவாளர் – ஶ்ரீதர்
எடிட்டர் – சி.எஸ்.பிரேம்குமார்
இசை – சாகர்
கலை இயக்குனர் – பி.எல். சுபேந்தர்
சண்டை – தினேஷ் காசி
பாடல் – கார்த்திக் நேத்தா
நடனம் – தஸ்தா
சிகை அலங்காரம் – சேகர்
பிஆர்ஓ – டைமண்ட் பாபு, சதிஷ் (AIM)
புகைப்படம் – முருகதாஸ்
விளம்பர வடிவமைப்பு – REDDOT பவன்
D I வண்ணமயமானவர் – ரங்கா
ஆடை வடிவமைப்பாளர் – டீனா
தயாரிப்பு பதாகை – கார்த்திக் மூவி ஹவுஸ்
உலகமெங்கும் வெளியீடு – எஸ் பி சினிமாஸ்
Karthik Adwaith speaks about Paayum Oli Nee Enaku team