தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சியான் 60’.
இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்திற்கு மகான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவில் விக்ரம் புல்லட் பைக்கில் வருகிறார்.
விக்ரமின் பின்னர் பல கைகள் இருப்பது போலவும், அவர் காளி போல நிற்கிறார் போலவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
Vikram – Karthik Subburaj’s Chiyaan 60 is titled Magaan
