விக்ரம் பிறந்தநாளில் ‘ஸ்கெட்ச்’ டீம் தந்த சர்ப்ரைஸ் பாட்டு

விக்ரம் பிறந்தநாளில் ‘ஸ்கெட்ச்’ டீம் தந்த சர்ப்ரைஸ் பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram thamannaநடிகர் சீயான் விக்ரம் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

எனவே அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தர, விக்ரம் நடித்து வரும் ஸ்கெட்ச் படக்குழுவினர் சற்றுமுன் ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர்.

கனவே… கனவே… என்று தொடங்கும் அந்த பாடலை விக்ரம் தன் சொந்த குரலில் பாடியிருக்கிறார்.

தமன் இசையமைத்து வரும் இப்படத்தை விஜய் சந்த்ர் இயக்கி வருகிறார்.

நாயகியாக தமன்னா நடிக்க, கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார்.

 

Vikram crooned in Kanavae Kanavae in Sketch movie

மோகன்லால் நடிக்க ரூ.1000 கோடி பட்ஜெட்டில் மகாபாரதம்

மோகன்லால் நடிக்க ரூ.1000 கோடி பட்ஜெட்டில் மகாபாரதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mohanlal to Play Bheem in Rs 1000 Crore Mahabharataஇந்திய சினிமாவே வியக்கும் அளவில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் டாக்டர்.பி.ஆர். ஷெட்டி அவர்கள் ரூ 1000 கோடி செலவில் மகாபாரதம் காவியத்தை சினிமாவாக தயாரிக்கிவிருக்கிறார்.

பிரபல இயக்குநர் வி.ஏ. ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் உருவாகும் இதில் பீஷ்மர் கேரக்டரில் மோகன்லால் நடிக்கவிருக்கிறார்.

இவருடன் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்களாம்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாம் கட்டமாக மற்ற உலக மொழிகளிலும் இப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் 2018-ம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் இப்படத்தை துவக்கி, 2020ஆம் ஆண்டில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Mohanlal to Play Bheem in Rs 1000 Crore Mahabharata

1000c movie mohanlal

அட்லி படத்துடன் ‘கில்லி’யை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

அட்லி படத்துடன் ‘கில்லி’யை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay 61அட்லி இயக்கி

வரும் தளபதி 61 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்காக இதுநாள் வரை தாடியுடன் முறுக்கு மீசை கெட்டப்புடன் நடித்து வந்தார்.

இதே கெட்டப்புடன் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.

எனவே இது தொடர்பான போட்டோக்களை விஜய் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வந்தனர்.

நேற்று திடீரென தாடி ஷேவிங் செய்துவிட்டு மீசையுடன் இருக்கும் விஜய்யின் படம் வெளியானது.

இது அட்லி படத்தின் அடுத்த கெட்டப் என்பதால், இதையும் ரசிகர்கள் இணையங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் தரணி இயக்கத்தில் விஜய் நடித்த கில்லி படத்தின் 13வது ஆண்டு நிறைவு நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படம் விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய சாதனை படைத்த படம் என்பதால், இதையும் #13yearsofGhilli என்ற ஹேஷ்டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

Vijay fans celebrates 13 Years of Ghilli movie

பவர் பாண்டி-கடம்பன்-சிவலிங்கா… வசூல் மன்னன் யார்..?

பவர் பாண்டி-கடம்பன்-சிவலிங்கா… வசூல் மன்னன் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pa paandi kadamban sivalingaகடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பவர் பாண்டி-கடம்பன்-சிவலிங்கா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது.

இந்த மூன்று படங்களுமே ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

இந்த படங்கள் வெளியாகி 3 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த வார சென்னை வசூல் நிலவரம் எவ்வளவு என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனுஷ் இயக்கி தயாரித்து நடித்துள்ள ப பாண்டி படம், சென்னையில் 170 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.51,29,540 வசூல் செய்துள்ளது.

இப்படத்திற்கு குடும்பங்களின் ஆதரவு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகவா இயக்கத்தில் ஆர்யா நடித்த கடம்பன் திரைப்படம், 168 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.47,04,608 வசூல் ஆகியுள்ளது.

இளைஞர்களை இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

பி. வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்த, சிவலிங்கா படம், 258 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.90,02,408 வசூல் செய்துள்ளது.

இப்படம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜோடி இல்லையென்றாலும் ரம்யா நம்பீசனை விடாத விஜய் சேதுபதி

ஜோடி இல்லையென்றாலும் ரம்யா நம்பீசனை விடாத விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sethupathi movie stillsவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கவண் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து தன் அடுத்த படத்தில் நடிக்க துவங்கி விட்டார் விஜய்சேதுபதி.

இப்படத்திற்கு ‛சீதக்காதி’ என்று பெயரிட்டுள்ளனர்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கும் இப்படத்தில் ஒரு நாடக கலைஞராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடி இல்லை என இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

இருந்தபோதிலும், இதில் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முக்கிய நாயகிகள் 5 பேர் நடிக்கவிருக்கிறார்களாம்.

பீட்சா, சேதுபதி ஆகிய படங்களில் விஜய்சேதுபதியுடன் ரம்யா நம்பீசன் இணைந்து நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, பழம்பெரும் நடிகர் மற்றும் இயக்குனர் மௌலி ஆகியோர் நடிக்க உள்ளனர்.

தனுஷின் ‘பவர் பாண்டி’ இந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சன்..?

தனுஷின் ‘பவர் பாண்டி’ இந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Amitabh Bachchanதனுஷ் முதன்முறையாக இயக்கியுள்ள பவர் பாண்டி படம் அண்மையில் வெளியானது.

ரசிகர்களின் ஆதரவினால் வெற்றிப் பெற்ற இப்படத்தை விரைவில் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

இதில் ராஜ்கிரண் கேரக்டரில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகருமான மோகன் பாபு நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Articles
Follows