‘கட்சிக்காரன்’ விஜித்துடன் இணைந்தார் ‘காதல் முன்னேற்ற கழகம்’ வில்லன்

‘கட்சிக்காரன்’ விஜித்துடன் இணைந்தார் ‘காதல் முன்னேற்ற கழகம்’ வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் அரசியல் சார்ந்த படங்கள் எத்தனையோ வந்துள்ளன. ஓர் அரசியல் கட்சித் தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் உறவைப் பற்றியும் புது விதத்தில் கூறுகிற படமாக ‘கட்சிக்காரன்’ உருவாகி உள்ளது.

அரசியல் கட்சித் தலைவருக்கும் தொண்டனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் கதை.

ஒரு தலைவன் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் ஒரு தொண்டன் எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்படம் அலசுகிறது. முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது.

இப்படத்தை பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் இணை தயாரிப்பு புளூஹில்ஸ் புரொடக்ஷன், சார்பில் தயாரித்துள்ளனர்.

இதில் தோனி கபடிகுழு, வேட்டைநாய் , படங்களில் சிறப்பாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்திய விஜித் சரவணன். இப்படத்தில் கதையின் நாயகனாக களமிறங்கியுள்ளார்.

கட்சிக்காரன்

ஸ்வேதா டாரதி கதாநாயகியாக நடிக்க. ”காதல் முன்னேற்ற கழகம்’ படத்தில் வில்லனாக நடித்த சிவசேனாதிபதி.

கட்சிக்காரன்
கட்சிக்காரன் படத்தில் அரசியல் தலைவராக சிறப்பாக நடித்து உள்ளார்.. காமெடியனாக AR தெனாலியும் நடித்திருக்கிறார்கள்.

அப்புக்குட்டி, மற்றும் அசுரவதம் படத்தின் இயக்குநர் மருதுபாண்டியன் ஆகிய இருவரும் படத்தில் முக்கியமான திருப்புமுனை ஏற்படுத்தும் கேரக்டரில் நடித்துள்ளனர்.

கட்சிக்காரன்

நாசரின் தம்பியும் ஜீவி 2 படத்தில் இன்ஸ்பெக்டராக கலக்கிய ஜவகர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன், வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி, நந்தகுமார், சக்திவேல் முருகன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

‘தோனி கபடிகுழு’ படத்தை இயக்கிய ப. ஐயப்பன் தனது இரண்டாவது படமாக இதை இயக்கி உள்ளார். தயாரிப்பு சரவணன் செல்வராஜ், இணைத் தயாரிப்பு மலர்கொடி முருகன்.

கட்சிக்காரன்

இப்படத்திற்கு ஒளிப்பதிவு- மதன்குமார், எடிட்டிங் . யு கார்த்திகேயன், இசை -ரோஷன் ஜோசப் பின்னணி இசை-C. M. மகேந்திரா, பாடல்கள் நா. ராசா, பாடகர்கள் ஹரிச்சரண்,
வேல்முருகன் என தொழில்நுட்பக் குழு உருவாக்கிப் படத்தை எடுத்து முடித்துள்ளார்கள்.

‘கட்சிக்காரன் ‘ படப்பிடிப்பு உளுந்தூர் பேட்டை, துருகம், கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடந்துள்ளது. சரியாக திட்டமிடப்பட்டு 40 நாட்களில் முழுப்படத்தையும் முடித்துள்ளார்கள்.

கட்சிக்காரன்

விரைவில் ‘கட்சிக்காரன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

Vijith Saravanan and Siva Senathipathi joins for Katchikaaran

சறுக்கிய சீயான் விக்ரம் .. கோப்ரா படத்தின் 6 நாள் மொத்த வசூல் இவ்ளோதானா?

சறுக்கிய சீயான் விக்ரம் .. கோப்ரா படத்தின் 6 நாள் மொத்த வசூல் இவ்ளோதானா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் உருவான கோப்ரா மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியானது .

விக்ரமின் அர்பணிப்பு பெரியளவில் பேசபட்டாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

குறிப்பாக படத்தின் டைமிங் கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டன.

கோப்ரா விமர்சனம் 3.25/5.; சீறும் சீயான்

இருப்பினும் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என சொல்லப்படுகிறது.

இதனால் ஆறு நாள் முடிவில் உலகம் முழுவதும் சுமார் 49 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெஞ்சத்தை வருட வரும் தனுஷ் – யுவன் கூட்டணி . நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டார் தாணு

நெஞ்சத்தை வருட வரும் தனுஷ் – யுவன் கூட்டணி . நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டார் தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் நானே வருவேன் .

செல்வ ராகவன் இயக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார் .

புதுப்பேட்டை படத்திற்கு பிறகு தனுஷ் – செல்வா – யுவன் கூட்டணி அமைந்துள்ளதால் படத்திற்கும் , பாடல்களுக்கும் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை (07/09/22 ) மாலை 4.40 க்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் .

எங்கிருந்து தொடங்குவது.? ரசிகர்களே எனது தூண்கள்.; தனுஷ் உருக்கமான அறிக்கை

7 மில்லியன் கணக்கில் மின்னும் சிவகார்த்திகேயனின் ‘பிம்பிளிக்கி பிலாபி’

7 மில்லியன் கணக்கில் மின்னும் சிவகார்த்திகேயனின் ‘பிம்பிளிக்கி பிலாபி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதித்யா மியூசிக் யூடூப்பில் வெளியான பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் ‘பிம்பிலிக்கி பிலாபி’.

யூடியூப்பில் 7 மில்லியன் பார்வைகளைப் பெற்ற பிம்பிலிக்கி பிலாபி, சிவகார்த்திகேயனின் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாகும்.

பொழுதுபோக்கின் அடையாளமான நடிகர் சிவகார்த்திகேயன், கொண்டாட்டத்துடன் கூடிய நடனத்துடன் மற்றொரு பாடலை கொடுத்திருக்கிறார்.

அது அவரது வரவிருக்கும் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘பிம்பிலிக்கி பிலாபி’ ஆகும்.

இந்த பாடல் அணைத்து தரப்பினர்களிடம் இருந்தும் முகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மியூசிக் லேபலான ஆதித்யா மியூசிக், இந்த பாடலை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

விவேக் எழுதிய வரிகளுடன் அனிருத் ரவிச்சந்தர், ரம்யா பெஹாரா மற்றும் சாஹிதி சாகந்தி ஆகியோரால் பாடப்பட்டு, SS தமன் அவர்களால் இசையமைக்கப்பட்ட இந்தப் பாடல், ஒரு பெப்பி டான்ஸ் எண்ணாக கவனத்தை ஈர்த்தது.

இதன் மூலம் ஒரே இரவில் பிளாக்பஸ்டர் ஆனது. மனதைக் கொள்ளை கொள்ளும் சிவகார்த்திகேயனின் நடன அசைவுகள், ஆற்றலைத் தூண்டும் தமனின் பெப்பி ட்யூன்கள் மற்றும் ரம்யா மற்றும் சாஹிதியுடன் அனிருத் ரவிச்சந்தரின் கவனத்தை ஈர்க்கும் குரல் ஆகியவை பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பை உருவாக்கியுள்ளன.

பாடல் வெளியிடப்பட்ட அனைத்து தளங்களிலும் சாதனை படைத்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள் இந்த நவநாகரீக பாடலைக் கண்டு உற்சாகம் அடைந்துள்ளனர்.

புஷ்பா, வாரியர், ஆதித்ய வர்மா, தீரன் மற்றும் பல பரபரப்பான சார்ட்பஸ்டர் ஆல்பங்களை வழங்கியதன் மூலம் தமிழ் இசைத் துறையில் சிறந்து விளங்குகிறது ஆதித்யா மியூசிக்.

ஏற்கனவே ‘சாமிசாமி’, ‘புல்லட் சாங்’, ‘ஓ சொல்ரியா’ போன்ற சூப்பர் ஹிட் தரவரிசைப் பாடல்களை வழங்கிய ஆதித்யா மியூசிக், ‘பிம்பிளிக்கி பிலாபி’க்கு கிடைத்த அட்டகாசமான வரவேற்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளது.

நடிகர் தனுஷ் நடித்த வாத்தி உட்பட பல அற்புதமான ஆல்பங்களை ஆதித்யா மியூசிக் வரிசைப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரின்ஸ் படத்தை தெலுங்கு பிளாக்பஸ்டர் ஹிட் ஜாதிரத்னலு புகழ் கேவி அனுதீப் இயக்குகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த இருமொழி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் உக்ரைனிய நடிகை மரியா ரியாபோஷப்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதன் வெளியீடு தீபாவளி பண்டிகைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தை சுரேஷ் பாபு, நாராயண் தாஸ் கே நரங் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

Bimbilikki Pilapi song The first single from Prince makes record

மெகா பட்ஜெட் படத்தில் அமிதாப் – பிரபாஸ் – சூர்யா – துல்கர்.; இயக்குனர் இவரா?

மெகா பட்ஜெட் படத்தில் அமிதாப் – பிரபாஸ் – சூர்யா – துல்கர்.; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்கள் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பாகுபலி நாயகன் பிரபாஸ் இதில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

ஆனால் பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’ படங்கள் எதிர்பார்த்தை வெற்றியை பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் இந்த புதிய படத்திற்கு ‘ப்ராஜெக்ட் கே’ என்று பெயரிடப்பட்டுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ்-க்கு தேசிய விருது பெற்று தந்த ‘மகாநடி’ படத்தை இயக்கிய நாக்அஸ்வின் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பட்ஜெட் மட்டும் ரூபாய் 500 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.

ஹிந்தி சினிமாவில் இருந்து அமிதாபச்சன் மற்றும் தீபிகா படுகோன் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

தமிழில் இருந்து நடிகர் சூர்யாவும் மலையாளத்திலிருந்து துல்கர் சல்மானும் இந்த படத்தில் இணைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாகுகிறது.

நாக்அஸ்வின்

Prabhas Suriya and Dulquer will be part of Project K

கூடுதல் தகவல்…

கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் சாலார் மற்றும் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் அகிய 2 படங்களும் அடுத்தாண்டு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ‘பிராஜக்ட் கே’ படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார்.

30 வருடங்களாக ரசிகர்களை கிறங்கடித்த ‘சொப்பன சுந்தரி’-க்கு உருவம் கொடுத்த ஐஸ்வர்யா

30 வருடங்களாக ரசிகர்களை கிறங்கடித்த ‘சொப்பன சுந்தரி’-க்கு உருவம் கொடுத்த ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் நடித்த திரைப்படம் ‘கரகாட்டக்காரன்’.

இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே பிரபலமான பெயர் சொப்பன சுந்தரி.

இந்த கற்பனை பெயருக்கு இன்று வரை தமிழ் சினிமாவில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை கிறங்கடிக்கும் சொல்லான இந்த சொப்பன சுந்தரியை தற்போது கண்டெடுத்துள்ளனர்.

அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயரிட்டுள்ளார் இயக்குனர் சார்லஸ்.

வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனுடன் ‘சொப்பன சுந்தரி’ என்ற டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

‘லாக்கப்’ படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.

இவருடன் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டியன் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்துள்ளனர். டார்க் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயரிடப்பட்டிருப்பதால் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

டார்க் காமெடியில் தயாராகி இருக்கும் ‘சொப்பன சுந்தரி’ தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான பெயர்.

நகைச்சுவை வேந்தர்களான கவுண்டமணி- செந்தில் தொடங்கி, இந்த படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ். ஜி. சார்லஸின் முந்தைய படத்தின் வில்லனான இயக்குநர் வெங்கட் பிரபு வரை.. இந்த பெயரை பயன்படுத்தி மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார்கள்.

அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

சொப்பன சுந்தரி

Aishwarya Rajesh’s next film in Soppana Sundari

More Articles
Follows