விஜய் – விஷ்ணு விஷால் ஆகியோருடன் நடித்த ‘மாயி’ சுந்தர் காலமானார்

விஜய் – விஷ்ணு விஷால் ஆகியோருடன் நடித்த ‘மாயி’ சுந்தர் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி’ சுந்தர் இன்று அதிகாலை 2.45′ மணிக்கு உடல்நிலை குறைவால் காலமானார்.

மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, கட்சிக்காரன் என 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோய்க்காக, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்! அவருக்கு வயது 50. திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படத்திலும் மாயி சுந்தர் நடித்துள்ளார். இந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Actor Maayi Sundar passed away

JUST IN 3 மொழிகளில் டப்பிங் பேசிய விஷால்.; வீடியோவை வெளியிட்ட படக்குழு

JUST IN 3 மொழிகளில் டப்பிங் பேசிய விஷால்.; வீடியோவை வெளியிட்ட படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் சுனைனா மீண்டும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘லத்தி’.

வினோத்குமார் இயக்கிய இந்த படம் நேற்று டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

மிகவும் யதார்த்தமாக எந்த ஹீரோயிசமும் இல்லாமல் நடித்துள்ள விஷாலின் நடிப்பை ரசிகர்களும் மக்களும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் வில்லனாக நடித்த ரமணாவின் நடிப்பு படு மிரட்டலாக இருந்தது எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சற்று முன் விஷால் 3 மொழிகளில் டப்பிங் பேசியுள்ள வீடியோ காட்சிகளை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் விஷால் பேசியுள்ளார்.

இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியானது.

இதற்காக விஷால் தமிழகம் ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்று பிரமோஷன் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Vishal sensational dubbing in 3 Languages for Laththi

#Laatti
#LaththiCharge

@VishalKOfficial @TheSunainaa @nandaa_actor @RanaProduction0

அரசியல் கட்சியாக விஜய் மக்கள் இயக்கம்.; ‘சர்க்கார்’ அரசியல்வாதியுடன் விஜய் ஆலோசனை

அரசியல் கட்சியாக விஜய் மக்கள் இயக்கம்.; ‘சர்க்கார்’ அரசியல்வாதியுடன் விஜய் ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் மகன் நடிகர் விஜய்யை எப்படியாவது அரசியலில் நுழைய வைத்து அவரை தமிழ்நாட்டின் முதல்வராக்கி விட வேண்டும் என்ற சிந்தனையிலே பணியாற்றி வந்தார் எஸ்ஏ சந்திரசேகர்.

அதன்படியே 90களிலேயே விஜய் மக்கள் இயக்கத்தை அறிவித்தார்.

மேலும் அடிக்கடி விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவ்வப்போது மறைமுகமாக பேசி வருவார்.

மேலும் விஜய் மக்கள் இயக்கமும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறது.

இது தொடர்பாக அடிக்கடி நிர்வாகிகளை விஜய் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் விரைவில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் ரீதியான கட்சியாக தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது தொடர்பாக பழம்பெரும் அரசியல் பிரமுகர் பழ.கருப்பையாவை விஜய் ஆலோசனை செய்ததுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் நடித்த ‘சர்க்கார்’ படத்தில் அவரை எதிர்க்கும் அரசியல்வாதியாக பழ.கருப்பையா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay Makkal Iyakkam  as a political party.; Vijay consults with ‘Sarkar’ politician

விஜயகுமார் எப்படி இருக்கிறார்? அப்பா உடல் நலம் குறித்து அருண் விஜய் பதிவு

விஜயகுமார் எப்படி இருக்கிறார்? அப்பா உடல் நலம் குறித்து அருண் விஜய் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பம் என்று சொன்னால் அது நிச்சயம் விஜயகுமார் குடும்பத்திற்கு 100% பொருந்தும்.

கருப்பு வெள்ளை காலந்தொட்டு இன்று வரை சினிமாவில் இடைவிடாது பயணித்துக் கொண்டிருக்கும் விஜயகுமார் குறித்து சில வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்த நிலையில் தன் தந்தையின் உடல் நலம் குறித்து அருண் விஜய் தன்னுடைய சமூக வலைத்தளத்தை பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“அப்பா நலமாக வீட்டில் உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம். நண்பர்கள் உறவினர்கள் ரசிகர்களின் அன்புக்கு நன்றி.. உங்களுடைய அன்பும் ஆதரவும் தேவை” என பதிவிட்டுள்ளார்.

Arun Vijay clarifies on Vijayakumar’s health

‘கனெக்ட்’ படத்தை கண்டுக்காத ரசிகர்கள்.; கடுப்பில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

‘கனெக்ட்’ படத்தை கண்டுக்காத ரசிகர்கள்.; கடுப்பில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று டிசம்பர் 22ஆம் தேதி நயன்தாரா நடிப்பில் உருவான ‘கனெக்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

வெறும் 99 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இந்த படத்தை விக்னேஷ் சிவன் தன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.

இதில் சத்யராஜ் வினய் அனுபம்கேர் உள்ளிட்ட 5 நட்சத்திரங்கள் மட்டுமே நடித்திருந்தனர்.

அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த படத்திற்கு பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களே வந்தன.

கொரோனா லாக்டவுன் காலத்தை மையப்படுத்தி அதில் பேயை கனெக்ட் செய்து இருந்தார் இயக்குனர்.

இந்த படத்தின் பின்னணி இசை பலராலும் பாராட்டப்பட்டாலும் படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.

எனவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செம கடுப்பில் உள்ளனர்.

மேலும் ஒரு திரைப்படத்தின் மீது வன்மத்தை தெளிக்காதீர்கள் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இதனையும் ரசிகர்கள் ட்ரோல் செய்து ஒரு படத்தை விமர்சனம் செய்தால் எப்படி வன்மம் ஆகும்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

2022 இறுதியில் 7 படங்கள்; முழு தகவல்கள் : விஜய் த்ரிஷா சன்னி ஐஸ்வர்யா சரளா லிங்கேஷ் வர்றாங்க..

2022 இறுதியில் 7 படங்கள்; முழு தகவல்கள் : விஜய் த்ரிஷா சன்னி ஐஸ்வர்யா சரளா லிங்கேஷ் வர்றாங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2022 ஆண்டின் இறுதிக் கட்டத்தை நாம் நெருங்கி வருகிறோம்.. அடுத்த வாரம் டிசம்பர் 31ம் தேதியுடன் இந்த ஆண்டு முடிவடைகிறது.

இதனால் இந்த ஆண்டு கணக்கில் சேர்த்துக் கொள்ள தங்களது புதிய படங்களின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்து வருகின்றனர்.

அதன்படி டிசம்பர் 29 30 ஆகிய தேதிகளில் ரிலீஸ் ஆக ரெடியாக உள்ள படங்களின் பற்றிய ஒரு பார்வை இங்கே…

டிசம்பர் 29ல்..

1) மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழிலும் அதே பெயரில் தயாராகியுள்ளது.

ஆர். கண்ணன் இயக்க இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய ஜெரி சில்வஸ்டர் வின்செண்ட் இசையமைத்துள்ளார். இப்பட தமிழக வெளியீடு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை டிசம்பர் 29ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளனர்.

டிசம்பர் 30ல் ரிலீசாகவுள்ள படங்கள்..

2) தமிழரசன்

பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் தமிழரசன். டிசம்பர் 30ல் இந்த படம் ரிலீசாகிறது.

இதில் சுரேஷ் கோபி, சோனு சூட், ரம்யா நம்பீசன், யோகி பாபு, ராதா ரவி, முனிஷ் காந்த், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜா இசையமைக்க ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

3) ஓ மை கோஸ்ட்

வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’.

இதில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை் சன்னி லியோன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ், ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார். தீபக்மேனன் ஒளிப்பதிவு செய்ய பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார்.

4) ‘ராங்கி

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராங்கி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 30ஆம் தேதி 2023 புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் கதையை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் எழுத எம் சரவணன் இயக்கியுள்ளார்.

சி எஸ் சத்யா இசையமைக்க சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

5) காலேஜ் ரோடு

ஜெய் அமர்சிங் இயக்கத்தில் லிங்கேஷ் நாயகனாக நடித்துள்ள ‘காலேஜ் ரோடு’ படம் டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இசை – ஆப்ரோ
ஒளிப்பதிவு- கார்த்திக் சுப்ரமணியம்.
எடிட்டர்- அசோக்

மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவிபாலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

MP எண்டர்டெயின்மெண்ட் பிரவீன் மற்றும் சரத். இவர்களுடன் ஜனா துரைராஜ் மனோகர் இணைந்து தயாரித்துள்ளனர்.

PVR இந்த படத்தை வெளியீடு செய்கிறார்கள்.

6 ) டிரைவர் ஜமுனா

18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த திரைப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார்.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

7) செம்பி…

பிரபு சாலமன் இயக்கியுள்ள திரைப்படம் ‘செம்பி’. கோவை சரளா, அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இன்னும் சில படங்களின் அறிவிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன…

7 films by the end of 2022; Full Details here

More Articles
Follows