ப்ரித்வி பாண்டியராஜன் – சாந்தினி நடித்த “ காதல் முன்னேற்ற கழகம் ஜூலை 5 ம் தேதி உலமெங்கும் வெளியாகிறது

ப்ரித்வி பாண்டியராஜன் – சாந்தினி நடித்த “ காதல் முன்னேற்ற கழகம் ஜூலை 5 ம் தேதி உலமெங்கும் வெளியாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’

இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விபாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர், ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – ஹாரிஸ் கிருஷ்ணன்

இசை – பி.சி.சிவன்

பாடல்கள் – யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்கசத்யா

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

நடனம் – அசோக்ராஜா

சண்டை பயிற்சி – அம்ரீன் பக்கர்

கலை – பிரகதீஸ்வரன்

தயாரிப்பு நிர்வாகம் – முத்தையா,விஜயகுமார்.

மக்கள் தொடர்பு – மௌனம்ரவி

தயாரிப்பு – மலர்க்கொடி முருகன்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மாணிக்க சத்யா.

படம் பற்றி இயக்குநர் மாணிக்க சத்யா பேசும்போது…

“இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.

அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது ,இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக நடித்துள்ளார்.

துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப்படுவது நம்பிக்கை துரோகம் தான்.

அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது. அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். படம் ஜூலை 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்றார் இயக்குனர் மாணிக்க சத்யா.

இணையத்தில் வைரலாகும் விஜய்யின் ‘பிகில்’ ஐ.டி கார்டு

இணையத்தில் வைரலாகும் விஜய்யின் ‘பிகில்’ ஐ.டி கார்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘பிகில்’.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இதில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.

இந்நிலையில், படத்தில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஐடி கார்டு இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

அதில் விஜய் புகைப்படத்துடன் மைக்கேல், தலைமை பயிற்சியாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

12 வருஷமாச்சு; நான் எனக்காக படம் நடிக்கல… – சந்தீப் கிஷன்

12 வருஷமாச்சு; நான் எனக்காக படம் நடிக்கல… – சந்தீப் கிஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sundeep kishanஇன்று நடந்த கண்ணாடி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது :-

பாடலாசிரியர் கோ ஷேஷா பேசும்போது:-

இந்த திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஏற்கனவே தெலுங்கில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சந்தீப், இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

தெலுங்கு படைப்பை தயாரிக்கிறார். த்ரில்லர், காதல் போன்ற வணிக ரீதியாக மட்டுமல்லாமல் இயல்பாகவே இப்படத்தை இயக்கியிருக்கிறார். இயற்கையாகவே எல்லா அம்சங்களும் ஒரு கதம்பமாக அமைந்திருக்கும்.

ஆகையால், குடும்பத்தோடு கண்டு களிக்கும் வகையில் இருக்கும். தமனின் இசை இப்படத்திற்கு தூணாக அமைந்திருக்கிறது. அவருடன் பணிபுரிந்தது உணர்வுமிக்க அனுபவமாக இருந்தது என்றார்.

கலை இயக்குநர் விதேஷ் பேசும்போது:-

இயக்குநருக்கு சந்தீப் செட்டில் ஜாலியாக இருப்பார். படக்குழுவினருடன் சேர்ந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.

ஒளிப்பதிவாளர் வர்மா பேசும்போது:-

இயக்குநர் கார்த்திக் அனைவரையும் ஊக்கப்படுத்துவார். இரண்டு மொழிகளிலும் 45 நாட்கள் உழைத்து படத்தை முடித்திருக்கிறோம். இது என்னுடைய முதல் த்ரில்லர் படம் என்றார்.

நகைச்சுவை நடிகர் கருணாகரன் பேசும்போது:-

‘ஜீவி’ படத்திற்கு ஆதரவு கொடுத்ததற்காக பத்திரியாளர்களுக்கு நன்றி. ‘ஜீவி’ படத்தைப் போலவே இப்படத்திலும் அனைவரும் என்னை ரசிக்கும் வண்ணம் என் கதாபாத்திரம் அமைந்திருக்கும் என்றார்.

உமையாள் ஜெகன் பேசும்போது:-

விஜய் சாரே என்னை மாப்பிள்ளை என்று அழைக்க வைத்த என் மச்சான் முரளிக்கு நன்றி. மென்மேலும் இதுபோன்ற தரமான படங்களை கொடுப்போம் என்றார்.

நாயகி அன்யா சிங் பேசும்போது:- எல்லோருக்கும் வணக்கம்!

இப்படம் எனக்கு முதல் தமிழ் படம். தமிழ் படத்தில் அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் காதல், த்ரில்லர், நகைச்சுவை, அனைத்தும் கலந்திருக்கும் என்றார்.

இயக்குநர் கார்த்திக் ராஜு பேசும்போது:-

உள்குத்து வெளியான பிறகு சரியாக போகவில்லை. இதுபற்றி என் நண்பர்களுடன் கலந்தாலோசிப்பேன். அப்போது தான் இந்த கதை உதித்தது- 3 நாட்களிலேயே எழுதி முடித்து விட்டேன். சுப்பு சாரிடம் கதையை கொடுத்தேன். அவர் படித்து முடித்ததும் இப்படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொண்டார்.

தெலுங்கில் கொண்டு போக வேண்டும் என்று சந்தீப் விரும்பினார். ஆனால், எனக்கு தெலுங்கில் ஒரு வார்த்தைக் கூட தெரியாது என்றேன். அதற்கு அவரே உதவிபுரிந்து தெலுங்கில் தானே தயாரிப்பதாகவும் கூறினார். சண்டை காட்சிகள் சவாலாகவே இருக்கும். சந்தீப் மற்றும் கருணாகரனின் காட்சிகள் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும்.

இப்படத்தில் கடினமாக உழைத்தது நாயகி அன்யா சிங் தான். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளும் தெரியவில்லையென்றாலும் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் மாற்றி மாற்றி நடித்தார்.

இப்படம் பெற்றோர்களுக்கு மிகவும் பிடிக்கும் விதமாக திடமான கருத்தைக் கூறும் படமாக இருக்கும்

என்னுடைய முதல் படமான ‘திருடன் போலீஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு என் அப்பா, படம் நன்றாக இருக்கிறது. ஆனால், புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறினார். ஆனால் இப்படத்தில் காட்சிக்குத் தேவைப்பட்டதால் வைத்திருக்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் விஜி சுப்புரமணியன் பேசும்போது:-

இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு நாயகியாக யாரை தேர்வு செய்யலாம் என்று ஆலோசித்த போது, அன்யா சிங்கை சந்தீப் தான் பரிந்துரை செய்தார்.

இருப்பினும், ஆடிசன் வைத்துத்தான் அவரைத் தேர்வு செய்தோம். அவரும் நன்றாக நடித்திருக்கிறார் என்றார்.

நாயகன் சந்தீப் கிஷன் பேசும்போது:-

டீஸர் பார்த்த பலரும் நேர்மறையான கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் படம் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது. நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றது. நான் எனக்காக படம் நடிக்கவில்லை. பார்வையாளர்களுக்காக தான் நடிக்கிறேன்.

ஆனால் இப்பொழுது படம் நடிப்பது என்றால் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்கு பெரும் போராட வேண்டியிருக்கிறது.

இப்டத்திற்காகவும் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். தரமான படமாக வரவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்திக்கிறோம். இப்படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இப்படத்தை எடுத்திருக்கிறோம்.

‘மாயவன்‘ படத்தை ஆன்லைனில் பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். இதன் பிறகு ‘கசடதபற’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படம் வெளியாகும்போது எல்லோராலும் பேசும்படமாக இருக்கும்.

எல்லோரும் பேய் மற்றும் விலங்குகளை வைத்து படமெடுத்தால் வெற்றியாகும் என்றார்கள். ஆகையால் எந்த பின்னணியில் எடுத்தால் வெற்றியாகும் என்று கூறினாலும், அதை விடுத்து நான் எப்போதும் வித்தியாசமாகத் தான் நடிப்பேன் என்று கூறுவேன்.

இப்படத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கதையின் அடிப்படை மாறும். மேலும், 2043 வருடத்திலிருந்து ஆரம்பிக்கும். எதிர்காலத்தில் ஆரம்பித்து நிகழ்காலத்தில் முடியும்.

இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தைத்தான் தயாரிக்க வேண்டும் என்று தோன்றியது.

இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இது பேய் படம் என்று யாராவது கூறிவிட்டால் இனிமேல் நடிப்பதையே விட்டுவிடுகிறேன் என்றார்

தொடர்ந்து வெற்றிப்படங்களில் இடம்பிடித்து வரும் ராஷி கண்ணா

தொடர்ந்து வெற்றிப்படங்களில் இடம்பிடித்து வரும் ராஷி கண்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)தமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கன்னா. அவரது பெயரில் உள்ள ராசி அவரது சினிமா கரியரிலும் தொடர்வது அவரது ரசிகர்களைப் போலவே தயாரிப்பாளர்களையும் மகிழ்வித்து வருகிறது.

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப்படமும் வெற்றிக்கான உத்திரவாதத்தோடு வளர்ந்து வருகிறது. மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கிராந்தி மாதேவ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெங்கிமாமா என்ற தெலுங்கிப்படத்தில் வெங்கடேஷ், நாக சைதன்யா ஆகியோருடன் நடித்து வருகிறார். மிருதி இயக்கத்தில் சாய் தரம்தெஜ் உடன் ஒருபடமும் தெலுங்கில் அவரது கைவசம் உள்ளது.
தமிழில் டாப் ஹீரோக்கள் நடிக்க இருக்கும் இரண்டு படங்களிலும் ராஷி கன்னாவே நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. ஒரு நடிகை எல்லாவிதமான கேரக்டர்களையும் உள்வாங்கி நடித்தால் ரசிகன் அந்தப்படத்தோடு சுலபமாக ஒன்றிவிடுவான். ரசிகர்களை தன் கதாபாத்திரத்தோடு ஒன்ற வைப்பதில் திறமை வாய்ந்தவர் நடிகை ராஷி கன்னா. அதனால் தான் திறமையோடு அழகும் சேர்ந்த அவரை சினிமாவும் சினிமா ரசிகர்களும் உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ரஜினியை அடுத்து சத்யராஜ்-ராணாவை இயக்கும் ரஞ்சித்

ரஜினியை அடுத்து சத்யராஜ்-ராணாவை இயக்கும் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)ரஜினி ரஞ்சித், சத்யராஜ் ராணா ரஞ்சித், ராஜராஜ சோழன் பா ரஞ்சித்,

‘அட்டக்கத்தி’ படம் மூலம் தன்னை அடையாளப்படுத்திய இயக்குனர் ரஞ்சித், ரஜினியை வைத்து கபாலி, காலா படங்களை இயக்கி இந்தியளவில் பிரபலமானார்.

தற்போது ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். தமிழில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார்.

அண்மையில் மன்னர் ‘ராஜராஜ சோழன்’ குறித்து அவதூறாக பேசி சர்ச்சைகளில் சிக்கினார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ரஞ்சித் புதிய படத்தை ஒன்றை இயக்கவுள்ளாராம்.
இதில் ஆர்யா, ராணா மற்றும் சத்யராஜ் ஆகிய மூவரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பேட்ட சிங்காரத்திற்கு அடித்த சான்ஸ்..; தமன்னாவுடன் இணைகிறார்

பேட்ட சிங்காரத்திற்கு அடித்த சான்ஸ்..; தமன்னாவுடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectபேட்ட சிங்காரம், பேட்ட வில்லன், ரஜினி வில்லன் நவாசுதீன் சித்திக், தமன்னா அனுராக் காஷ்யப், தமன்னா பாலிவுட்
பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் நவாசுதின் சித்திக்.

இவர் பாலிவுட் திரையுலகில் முக்கியமான நடிகர் ஆவார்.

இந்த நிலையில் ‘போலே சுடியான்’ படத்தில் நவாசுதீன் சித்திக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

நவாசுதின் சித்திக்கின் சகோதரர் சமாஸ் சித்திக் இப்படத்தை இயக்குகிறார்.

‘இமைக்கா நொடிகள்’ பட வில்லன் அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

தமன்னா நடிப்பில் அண்மையில் வெளியான கண்ணே கலைமானே, தேவி2 ஆகிய தமிழ்படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை.

More Articles
Follows