எங்கிருந்து தொடங்குவது.? ரசிகர்களே எனது தூண்கள்.; தனுஷ் உருக்கமான அறிக்கை

எங்கிருந்து தொடங்குவது.? ரசிகர்களே எனது தூண்கள்.; தனுஷ் உருக்கமான அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தனுஷ்

தற்போது கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என உலக சினிமா வரை சென்றுவிட்டார்.

நேற்று தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் வாத்தி – நானே வருவேன் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களின் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டனர்.

ரசிகர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் அவரை வாழ்த்தினர்.

இந்த நிலையில் வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

“இது எங்கிருந்து துவங்கியது என்று எனக்கு தெரியவில்லை. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய நலம் விரும்பிகள், திரையுலகினர், நண்பர்களுக்கு நன்றி.

குறிப்பாக ரசிகர்களின் வாழ்த்து, அளவற்ற அன்பு, ஆதரவுக்கு நன்றி. கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்களே எனது தூண்களாக இருந்து என்னை ஆதரிக்கின்றனர்.

உங்களின் அன்பால் நெகிழ்கிறேன். விரைவில் படங்கள் மூலம் சந்திக்கிறேன். ஓம் நமசிவாய” என தெரிவித்துள்ளார் தனுஷ்.

Where to start.? Fans are my pillars.; Dhanush’s warm statement

காவலர்களை வீட்டிற்கு அழைத்து கௌரவித்த ரஜினிகாந்த்.; ஏன் தெரியுமா.?

காவலர்களை வீட்டிற்கு அழைத்து கௌரவித்த ரஜினிகாந்த்.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் முதன்முறையாக 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.

நேற்று ஜூலை 28ல் இந்த நிகழ்ச்சிக்கான துவக்க விழா பிரம்மாண்டமாய் செஸ் விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் நடந்தது.

இதில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு தன்னை வீட்டிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காவலர்களை ரஜினிகாந்த் கௌரவித்துள்ளார்.

அந்த காவலர்களை வீட்டுக்கு அழைத்து அவர்களின் பணியை பாராட்டி உள்ளார் ரஜினிகாந்த்.

அவர்கள் ரஜினியுடன் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Rajinikanth honored the guards by inviting them home; Do you know why?

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது ‘விருமன்’ படக்குழு.; ரசிகர்கள் உற்சாகம்

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது ‘விருமன்’ படக்குழு.; ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பருத்தி வீரனுக்கு பிறகு கார்த்திக்கை முழு கிராமத்து மனிதராக காட்டி சூப்பர் ஹிட்டான படம் ‘கொம்பன்’.

இந்த படத்தை முத்தையா இயக்கி இருந்தார்.

எனவே முத்தையா – கார்த்தி கூட்டணிக்கு எப்போதும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் மீண்டும் இணைவதாக ‘விருமன்’ படத்தை அறிவித்தனர்.

இந்த படத்தை கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா தயாரிக்கிறார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படமும் கிராமத்து கதையில் உருவாகி இருக்கிறது.

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்தான் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் நடித்திருந்தார்.

‘விருமன்’ படத்திற்கு தணிக்கையில் யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

‘விருமன்’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். அதன்படி அறிவிப்பும் வெளியானது.

ஆனால் தற்போது இரண்டு வாரங்களுக்கு முன்பே அதாவது ஆகஸ்ட் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பே ‘விருமன்’ வெளியாக இருப்பதால் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது எனலாம்.

‘Viruman’ team announces new release date

சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியின் ‘வெந்து தணிந்தது காடு’ பட டப்பிங் அப்டேட்

சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியின் ‘வெந்து தணிந்தது காடு’ பட டப்பிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு – கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்காக 3வது முறையாக இணைந்துள்ளனர்.

ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக சிதி இட்னானி நடித்துள்ளார்.

இவர்களுடன் ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்செலினா ஆப்ரகாம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க தாமரை பாடல்களை எழுதியுள்ளார்.

இதில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்….’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி ஏற்கெனவே வைரலானது.

இந்த படம் 2022 செப்டம்பர் 15ல் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தன் தந்தை டி.ஆர். உடல்நல குறைவால் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு தங்கியிருந்தார் சிம்பு.

தற்போது சிம்பு சென்னை வந்துள்ள நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ பட டப்பிங்கை சிம்பு முடித்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Update for Simbu – Gautham Menon’s ‘Vendhu Tanantha Kadu’ movie

தேசிய விருது இயக்குனரின் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் & விஜய்சேதுபதி.?

தேசிய விருது இயக்குனரின் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் & விஜய்சேதுபதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் 2 தேசிய விருதுகளை வென்றதாக அறிவிக்கப்பட்ட படம் ‘மண்டேலா’.

சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதும், வசன கர்த்தாவுக்கான விருதும் மண்டேலா திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது

மடோனா அஸ்வின் இயக்கிய இந்த படத்தில் யோகிபாபு & ஷீலா நடித்திருந்தனர்.

தற்போது மடோனா அஸ்வின் இயக்கவுள்ள ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்தப் படத்தில் கவுண்டமணி மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

கியாரா அத்வானி ஹீரோயினாகவும் மிஷ்கின் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கவுள்ளது.

இந்நிலையில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் விஜய்சேதுபதியை நடிக்கவைக்க படக்குழு அணுகியதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Sivakarthikeyan – Vijay Sethupathi joins for a new film?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஜி.எம்.குமார் எப்படி இருக்கிறார்..?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஜி.எம்.குமார் எப்படி இருக்கிறார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குருவி, அவன் இவன், தாரை தப்பட்டை, கர்ணன், நவம்பர் மாதம் & பேப்பர் ராக்கெட் (வெப் சீரிஸ்) உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தவர் ஜி.எம்.குமார்.

படங்களில் நடிப்பதற்கு முன்பே 1980களில் அறுவடை நாள், பிக் பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் ஆகியப் படங்களை இயக்கியவர் இவர்.

மேலும் கன்னிராசி, காக்கி சட்டை, மை டியர் மார்த்தாண்டன் ஆகிய படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இத்துடன் பூவே உனக்காக, செம்பருத்தி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் ஜி.எம்.குமார்.

இந்த நிலையில் நடிகர் ஜி.எம்.குமார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Health update on Actor- Director GM Kumar

More Articles
Follows