பிருத்வி-சாந்தினியின் காதல் முன்னேற்ற கழகத்திற்கு ஆர்யா ஆதரவு

Arya will be launching Prithvi starrer Kaadhal Munnetra Kazhagam first lookபிரபல இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜ் அவர்களின் மகன் பிருத்வி நடித்து வரும் புதிய படத்திற்கு காதல் முன்னேற்ற கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிருத்வியுடன் சாந்தினி நாயகியாக நடிக்கிறார். ரொமான்டிக் காமெடியாக இந்தப் படம் தயாராகிறது.

இவர்களுடன் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர், நாதஸ்வரம் முனிஸ் ராஜா, அமீர் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய கதாப்பாத்திரத்தில் சிவசேனாதிபதி நடிக்கிறார்.

மாணிக் சத்யா என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார்.

நத்தம் மாரியம்மன் மூவிஸ் கோபிநாத், ப்ளு ஹில்ஸ் புரொடக்சன்ஸ் சார்பாக மலர்கொடி முருகன், ஷாலினி புரொடக்சன்ஸ் ஆனந்த் மூவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவு – ஹாரிஸ் கிருஷ்ணன், இசை- பி.சி.சிவன்

இப்படம் பற்றி இயக்குனர் மாணிக் சத்யா கூறியதாவது…

1980 களில் நடக்கின்ற கதை. படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை ஜனவரி 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடிகர் ஆர்யா வெளியிட உள்ளார்.

Arya will be launching Prithvi starrer Kaadhal Munnetra Kazhagam first look

Overall Rating : Not available

Related News

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன்,…
...Read More

Latest Post