உலக மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருப்பது பற்றி விஜய்ஸ்ரீ

உலக மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருப்பது பற்றி விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijaysri thanks to TN Govt in regards to award for Charuhassan நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருப்பது குறித்து, இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி கூறியதாவது:

“மூத்த திரைப்பட நடிகர் சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவித்த சென்னை சர்வதேச திரைப்பட விழா குழுவினருக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும், துறை சார்ந்த இதர இயக்குனர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

கடந்த 2016 ஆம் ஆண்டு, நானும் எனது மக்கள் தொடர்பாளர் திரு நிகில் முருகனும் நடிகர் சாருஹாசனை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர், தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், ஓய்வில் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், தனக்கு இரண்டு பைபாஸ் அறுவை சிகிச்சையும், விபத்தின் காரணமாக கால்களில் ஏற்பட்ட காயம் காரணமாக, இரும்பு பெல்ட் வைத்திருப்பதாகவும், ஆகையால், தன்னால் ஊன்றுக்கோலின்றி நடக்க இயலவில்லை எனவும் பல காணொளிகளில் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி எங்களிடமும் தெரிவித்தார்.

இந்த சூழலில், ஒரு தேசிய விருது பெற்ற நடிகரான நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று நான் மட்டுமல்ல, என்னைப் போலவே பல இயக்குனர்கள் ஆசைப்படுகிறார்கள் என்பதை அவரிடம் வலியுறுத்தி பேசிவிட்டு, அவருக்கெனவே, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஒரு கதைகளம் அமைத்திருக்கிறேன் என்று ‘தாதா 87’ கதை அவரிடம் கூறினேன்.

கதை அவருக்கு பிடித்திருக்க, உற்சாகமாக நடித்துக் கொடுத்தார். தற்போது, அவர் 3 தெலுங்கு மற்றும் 2 மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பதிலும், அதற்கு நானும் ஒரு காரணம் என அவர் பல்வேறு காணொளிகளில் குறிப்பிட்டு பேசி வருவதையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சாருஹாசனைப் போன்ற சிறந்த மூத்த நடிகர்கள், நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்கள். நாம்தான் இத்தகைய சிறந்த கலைஞர்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து நடிக்க வைக்க வேண்டும்.

2016 ஆம் ஆண்டு முதன்முதலாக தாதா 87 படத்துக்காக, சாருஹாசன் அவர்களை முதன்முதலாக சந்தித்தது துவங்கி, அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கிடைத்திருக்கும் இந்த தருணம் வரையில், அனைத்து நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்துவரும் நிகில் முருகன், ‘தாதா 87’ படத்தின் தயாரிப்பாளர், படக்குழுவினர் அனைவருடனும் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதுடன், எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

Vijaysri thanks to TN Govt in regards to award for Charuhassan

டைட்டில் பஞ்சத்தால் வடிவேலு டயலாக்கை வைத்த பரிதாபங்கள் டீம்

டைட்டில் பஞ்சத்தால் வடிவேலு டயலாக்கை வைத்த பரிதாபங்கள் டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gopi Sudhakars film gets title from famous Vadivelu dialogue‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் இணையதளம் மூலம் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரிட்சயமானவர்கள் கோபி மற்றும் சுதாகர்.

இவர்கள் தற்போது ‘பரிதாபங்கள்’ ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளனர்.

இதில், உருவாகும் முதல் படத்தினை ‘க்ரொவ்ட் பண்டிங்’ முறையில் தயாரிக்க திட்டமிட்டு, இதுவரை சுமார் 6.5 கோடி வரை கிடைத்துள்ளதாம்.

இப்படத்தின் தலைப்பாக ‘ஹேய் மணி கம் டுடே கோ டுமாரோவ் யா’ ((Hey Money Come Today Go Tomorrow Ya )) என்ற வடிவேலுவின் டயலாக்கை வைத்துள்ளனர்.

இப்படத்தினை, எஸ் ஏ கார்த்திக் இயக்கவிருக்கிறார். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் மற்றும் நிஜாய் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Gopi Sudhakars film gets title from famous Vadivelu dialogue

அமிதாப் சொன்ன 3 அட்வைஸ்ல 2 தான் பாலோ பண்றேன்.. – ரஜினி ஓபன் டாக்

அமிதாப் சொன்ன 3 அட்வைஸ்ல 2 தான் பாலோ பண்றேன்.. – ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I follow Amithabs 2 advises among 3 advises says Rajiniதர்பார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மும்பையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், முருகதாஸ், சுனில் ஷெட்டி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ட்ரைலரை வெளியிட்ட பின் ரஜினி பேசியதாவது…

என் நண்பர் அமிதாப்பச்சன் எனக்கு 3 அறிவுரைகள் சொன்னார்.

எப்போதும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், எப்போதும் பிசியாக இருக்க வேண்டும், அரசியலில் நுழையக் கூடாது என்ற மூன்று விஷயங்களை கடைப்பிடிக்கும்படி சொன்னார்.

அமிதாப்பச்சன் வழங்கிய மூன்று அறிவுரைகளில் முதல் இரண்டை மட்டுமே கடைபிடிக்க முடிந்தது” என ரஜினி ஓபனாக தன் அரசியல் வருகை குறித்து பேசினார்.

I follow Amithabs 2 advises among 3 advises says Rajini

BAD COP AS SUPER COP… தாறுமாறு ‘தர்பார்’ டிரைலர் வெளியானது

BAD COP AS SUPER COP… தாறுமாறு ‘தர்பார்’ டிரைலர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbar trailer out with Rajinis super punch dialoguesமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்துள்ள தர்பார் பட டிரைலர் இன்று வெளியானது.

இதன் ட்ரைலரை படக்குழுவினர் இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டனர்.

ரஜினி ரசிகர்கள் அவரது படத்தில் என்னென்ன எதிர்பார்ப்பார்களோ அத்தனையும் கலந்து மாஸ் எண்டர்டெயினாக தர்பார் ட்ரைலரை கொடுத்துள்ளனர்.

மேலும் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ஆக்சன், ரொமான்ஸ், பன்ச் டயலாக் என தாறுமாறாக உள்ளது.

மும்பை சிட்டி போலீஸ் கமிஷ்னராக ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் ரஜினி.

அதில் போலீஸ் என்பது ஒரு ஜாப் அல்ல. அது ஒரு சேவை என பன்ச் டயலாக் பேசுகிறார்.

அவன் போலீஸ் ஆபிசரா சார் கொலைகாரன் சார்’ என ஒரு வசனம் வருகிறது.

அதிலிருந்தே தெரிகிறது ரஜினி சட்டப்படி செயல்படாத ஒரு கமிஷ்னர் என்பது தெரிகிறது.

இவர் அண்டர்வேர்ல்டு தாதாவாக இருக்கும் சுனில் ஷெட்டியுடன் மோதுவது ரஜினியின் மெயின் வேலையாக இருக்கும் போல.

நயன்தாராவை சந்திக்கும் காட்சியிலேயே ரஜினிக்கு லவ் உண்டாகுகிறது போல. அப்படியொரு காந்த பார்வையில் இருவரும் நெருக்கமாவது போல உள்ளது.

‘அவன்கிட்ட சொல்லுங்க.. போலீஸ் கிட்ட லெஃப்ட்ல வச்சுக்கோ, ரயிட்ல வச்சுக்கோ.. ஸ்ட்ரெய்ட்டா வெச்சுக்காதன்னு…’ என பன்ச் பேசும்போது ரஜினி செம ஸ்டைலாக இருக்கிறார்.

இறுதியாக க்ளைமாக்ஸ் பைட் போல ரஜினி அண்ட் சுனில் ஷெட்டி மோதும் காட்சிகள் உள்ளது.

பின்னர் ஒரு சிங் போலீஸை பார்த்து ‘ஒரிஜினலாவே நான் வில்லன்ம்மா.. ஹவ் இஸ் இட்?’ என கேட்கிறார் ரஜினி.

இதனையடுத்து ஐ யம் பேட் போலீஸ் என ஸ்டைலாக கூலாக நடந்தபடி செல்கிறார். அதாவது நான் கெட்ட போலீஸ் என கூறுகிறார்.

ஆட்டம் போடும் ஆட்களுக்கு தான் இவன் கெட்டவன். பாம்பே மக்களுக்கு இவர் ஒரு பாட்ஷா எனத் தெரிகிறது.

Darbar trailer out with Rajinis super punch dialogues

தனுஷ் நடிக்கும் “பட்டாசு” ஜனவரி 16ஆம் தேதி வெளி ஆகும் – தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அதிகார பூர்வ அறிவிப்பு.

தனுஷ் நடிக்கும் “பட்டாசு” ஜனவரி 16ஆம் தேதி வெளி ஆகும் – தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அதிகார பூர்வ அறிவிப்பு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pattas dhanushபாரம்பரியம் மிக்க திரைப்பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிக மிக ராசியான மாதம் ஜனவரி என்று கூறலாம். 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் , அஜித் குமார் நடிப்பில் வந்த “விசுவாசம்” படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இதை நிரூபித்த சத்யஜோதி நிறுவனத்தினர் 2020 ஜனவரி 16 ஆம் தேதி அன்று தங்களது அடுத்த பிரம்மாண்டமான படைப்பான “பட்டாசு” திரைப்படத்தை திரையிட உள்ளனர். அசுரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் புகழின் உச்சத்தில் இருக்கும் தனுஷ் நடிப்பில் , ஆர் எஸ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவான “பட்டாசு” motion போஸ்டர் மிக குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளத்தில் கோலோச்சியது.
“எங்கள் நிறுவனத்தின் அடிப்படை கோட்பாடே குடும்பத்தோடு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஏற்ற படங்களை வழங்குவதுதான். பல வருடங்களாக இந்த கோட்பாடை தான் கடைப்பிடிக்கிறோம். உற்றார், உறவினர் என்று கூடி மகிழும் ஒரு பண்டிகை மாதம் ஜனவரி. எங்கள் நிறுவனத்தை பொறுத்த வரை கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளி வந்த “விஸ்வாசம்” மாபெரும் வெற்றியை தந்தது என்றால் , வரும் ஜனவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளிவரும் “பட்டாசு” மீண்டும் ஒரு பெரும் வெற்றியை தரும் என நம்புகிறோம்.தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி , எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் உள்ளது இப்படம். மிக ஜனரஞ்சகமான , கதை கனமான ஒரு படத்தை எங்கள் நிறுவனத்துக்கு வழங்கியதற்கு இயக்குனர் துரை செந்தில் குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திட்டமிடப்படியே படப்பிடிப்பு நடத்தி , குறிப்பிட்ட நாளில் படம் வெளிவர உழைத்த இயக்குனரும், அவரது குழுவினரும் படத்தின் வெற்றிக்கு வித்திட்டு உள்ளனர்.
தனுஷ் உடனான எங்கள் உறவு மிக மிக ஆரோக்கியமானது. “பட்டாசு’ எங்கள் உறவை மேலும் பலப்படுத்தும். இதுவரை நாங்கள் வெளியிட்டு உள்ள இரண்டு போஸ்டர்கலும் அவரது வெவ்வேறு தோற்றங்களை வெளிக்காட்டி உள்ளது. நடிப்பில் அவர் ஒரு அசுரன் என்ற பாராட்டுக்கு அவர் உரியவர் என்பதை “பட்டாசு”மீண்டும் நிரூபிக்கும்.

நவீன் சந்திரா, சினேகா, நாயகி மெஹரீன் பிர்சாடா, மற்றும் படத்தில் நடித்து இருக்கும் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்களே. விரைவில் ஆடியோ மற்றும் ட்ரைலர் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் வெளிவரும்.
விவேக் -மெரிவின் இரட்டை இசை அமைப்பாளர்கள் இசையில் , நாங்கள் வெளியிட்ட முதல் சிங்கிள் ” சில் ப்ரோ” மாபெரும் வரவேற்பை பெற்று உள்ளது” என்று பெருமிதத்தோடு கூறினார் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரகாஷ் மப்பு பட தொகுப்பு செய்ய, திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சியில், ஜனனி நடனம் அமைக்க, விவேக் மெரிவின் இசை அமைப்பில் , சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி, ஜி. தியாகராஜன் தயாரிக்க, ஜி சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

விஜய் & வெற்றிமாறன் கூட்டணியை இணைக்கும் சன் பிக்சர்ஸ்

விஜய் & வெற்றிமாறன் கூட்டணியை இணைக்கும் சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 65அசுரன் படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

இதனை அடுத்து வட சென்னை 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இந்த தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது தலைவர் 168 & தனுஷ் 44 படங்களை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows